| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1022 | பெரிய திருமொழி || (1-8–கொங்கு அலர்ந்த) (திருவேங்கடம் 1 ) (வேண்டினார்க்கு வேண்டின படியே தானஞ் செய்கிற அஸுர சக்ரவர்த்தியான மஹாபலியினுடைய யாகபூமியிலே வாமநப்பிரமசாரியாய்ச் சென்று கை நீட்டி மூவடி மண் தாவென்று இரந்தவனும், ஸுக்ரீவனுக்கு நம்பிக்கையுண்டாவதற்காக ஸப்த ஸாலவ்ருக்ஷங்களைத் துளை படுத்தின மஹா பலமுடையவனும், ஆச்ரிதரக்ஷணார்த்தமாகத் திவ்யாயுதங்களைத் தரிப்பதற்கான பல திருக்கைகளையுடையவனும், (அல்லது) கச்சிமாநகரி லுள்ள அஷ்டபுஜகரம் என்கிற திவ்ய தேசத்திலே அஷ்டபுஜனாக ஸேவை ஸாதிப்பவனும், இமயமலையில் திருப்பிரிதியென்னும் திருப்பதியிலே யெழுந் தருளியிருப்பவனும், திருமாலிருஞ்சோலையிலே வந்து நிற்பவனும், முதலை வாயிலே அகப்பட்டுத் துடித்த ஸ்ரீ கஜேந்த்ராழ்வானுடைய துன்பத்தைத் தொலைத்தவனுமான பெருமானுடைய திருவேங்கட மலையைச் சென்று சேர் மனமே!) 5 | வண் கையான வுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய் மண் கையால் இரந்தான் மராமரம் ஏழும் எய்த வலத்தினான் எண் கையான் இமயத்துள்ளான் இருஞ்சோலை மேவிய வெம்பிரான் திண் கைம்மா துயர் தீர்த்தவன் திருவேம்கடம் அடை நெஞ்சே –1-8-5 | வண் கையான், Van Kaiyaan - விசேஷமாக தானஞ்செய்கிற கையையுடையவனாய் அவுணர்க்கு நாயகன், Avaunarkku Naayagan - அசுரர்கட்குத் தலைவனான மாவலியினது வேள்வியில், Velviyil - யாக பூமியிலே மாணி ஆய் சென்று, Maani Aay Senru - பிரமசாரி வேஷத்துடன் எழுந்தருளி கையால், Kaiyaal - தனது திருக்கையாலே மண் இரந்தான், Man Irandhaan - பூமியை யாசித்தவனும் மராமரம் ஏழும், Maraamaram Ezhum - ஏழு மராமரங்களையும் எய்த, Eytha - துளைபடுத்தின வலத்தினான், Valaththinaan - வலிவையுடையவனும் எண் கையான், En Kaiyaan - அஷ்ட புஜங்களையுடையவனும் இமயத்து உள்ளான், Imayaththu Ullaan - இமயமலையின் கண் (திருப்பிரிதியிலே) எழுந்தருளியிருப்பவனும் இரு சோலை, Iru Solai - திருமாலிருஞ் சோலையிலே மேவிய, Meviya - பொருந்திய எம்பிரான், Embiran - ஸ்வாமியும் திண் கை மா, Thin Kai Maa - திடமான துதிக்கையையுடைய கஜேந்திரனது துயர், Thuyar - துன்பத்தை தீர்த்தவன், Theerthavan - போக்கினவனுமான எம்பெருமான் எழுந்தருளியிருக்கிற |