திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 959 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
959பெரிய திருமொழி || (1-2-வாலி மாவலத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸுக்ரீவ மஹாராஜருடைய துயரைத் தொலைத்த விருத்தாந்தத்தைக் கீழ்ப்பாட்டில் அநுஸந்தித்தார். அந்த ஸுக்ரீவனுடைய படைத் துணையால் இராமபிரான் தன் துயரைத் தொலைத்துக் கொண்ட விருத்தாந்தத்தை இப்பாட்டில் அநுஸந்திக்கிறார்.) 2
கலங்க மாக்கடல் அரிகுலம் பணி செய்ய அருவரை யணை கட்டி இலங்கை மா நகர் பொடி செய்தவடிகள் தாம் இருந்த நல்லிமயத்து விலங்கல் போல்வன விறல் இரும் சினத்தன வேழங்கள் துயர் கூர பிலம் கொள் வாள் எயிற்று அரியவை திரிதரு பிரிதி சென்றடை நெஞ்சே –1-2-2
பதவுரை Show / Hide
நெஞ்சே, Nenje - மனமே!
மா கடல், Maa kadal - மஹா ஸமுத்தரமானது
கலக்க, Kalakka - கலங்கும்படி
அரி குலம் பணி செய்ய, Ari kulam pani seiya - வானர ஸமூஹம் கைங்கரியம் பண்ண
அரு வரை, Aru varai - அசைக்க முடியாத பெரிய மலைகளைக் கொண்டு
அணை கட்டி, Anai katti - ஸேது கட்டி
மா இலங்கை நகர், Maa Ilangai nagar - பெரிய லங்காபுரியை
பொடி செய்த, Podi seitha - பொடிபடுத்திய
அடிகள் தாம், Adigal thaam - ஸர்வஸ்வாமி
இருந்த, Irundha - எழுந்தருளியிருக்கப்பெற்ற
நல் இமயத்து, Nal Imayathu - நல்ல ஹிமவானில்
விலங்கல் போல்வன விறல், Vilangal polvana viral - மலை போன்றவையாய் மிருக்கையுடையவையாய்
இரு சினத்தன, Iru sinathana - மிக்க கோபத்தை யுடையவையான
வேழங்கள், Vezhangal - யானைகள்
துயர்கூர, Thuyarkoora - துன்பப்படும்படியாக
பிலம் கொள், Bilam kol - குகைகளை இருப்பிடமாகக் கொண்டிருக்கிற
வாள் எயிறு, Vaal eyiru - வாள் போன்ற பற்களையுடைய
அரி அவை, Ari avai - சிங்கங்களானவை
திரிதரு, Thiritharu - திரியுமிடமாகிய
பிரிதி, Pirithi - திருப்பிரிதியை
சென்றுஅடை, Sendru adai - சென்று சேர்ந்திடு