| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1047 | பெரிய திருமொழி || (1-10–கண்ணார் கடல் சூழ்) (திருவேங்கடம் 3) (திருமலையிலே வில்லுங்கையுமான வேடர்கள் நிறைந்து கிடப்பது வருணிப்பதன் கருத்து யாதெனில்; ஆழ்வார் மங்களாசாஸநபரராகையாலே தம்மைப்போன்ற மங்களாசாஸநபரர்கள் திருமலையிலே பலருளர் என்றபடி.) 10 | வில்லார் மலி வேங்கட மா மலை மேய மல்லார் திரடோள் மணி வண்ணன் அம்மானை கல்லார் திரடோள் கலியன் சொன்ன மாலை வல்லார் வர் வானவர் ஆகுவர் தாமே –1-10-10 | வில்லார் மலி, Villaar Mali - வேடர்கள் நிறைந்திருக்கப்பெற்ற வேங்கடம் மாமலை, Vengadam Mamalai - திருவேங்கடமென்னும் சிறந்த மலையிலே மேய, Meya - எழுந்தருளியிருப்பவனும் மல் ஆர் திரள் தோள், Mal Aar Thiral Thol - மிடுக்குமிக்குத் திரண்ட திருத்தோள்களை யுடையவனும் மணிவண்ணன், Manivannan - நீலமணி போன்ற திருநிறத்தையுடையவனுமான அம்மானை, Ammanai - எம்பெருமானைக் குறித்து, கல் ஆர் திரள் தோள், Kal Aar Thiral Thol - மலைபோன்ற திரண்ட தோள்களையுடையரான கலியன், Kaliyan - திருமங்கைமன்னன் சொன்ன, Sonna - அருளிச்செய்த மாலை, Maalai - இச்சொல்மாலையை வல்லாரவர் தாம், Vallaaravar Thaam - ஓதவல்லவர்கள் வானவர் ஆகுவர், Vaanavar Aaguvar - நித்யஸூரிகளாகப் பெறுவர்கள். |