| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 996 | பெரிய திருமொழி || (கலையும் கரியும்) - -(திருச்சாளக்கிராமம்) (“ஒழிவில் காலமெல்லாமுடனாய் மன்னி வழுவிலாவடிமை செய்ய வேண்டும் நாம்” என்று இடைவிடாது கைங்கரியம் பண்ணப்பாரித்திருக்கின்ற ஸ்ரீ வைஷ்ணவர்களின் கோஷ்டி ஒரு பக்கத்திலும்,) 9 | தொண்டாம் இனமும் இமையோரும் துணை நூல் மார்பில் அந்தணரும் அண்டா வெமக்கே யருளாய் என்று அணையும் கோயிலருகெல்லாம் வந்தார் பொழிலின் பழனத்து வயலினயலே கயல் பாய தன்டாமரைகள் முக மலர்த்தும் சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-9 | தொண்டு ஆம் இனமும், Thondu Aam Inamum - தொண்டு செய்பவர்களான பாகவதர்களுடைய ஸமூஹமும் இமையோரும், Imaiyorum - நித்யஸூரிகளும் துணை நூல் மார்வில் அந்தணரும், Thunai Nool Maarvil Andhanarum - யஜ்ஞோபவீதத்தோடு கூடின மார்வையுடைய பிராமணர்களும் அண்டா எமக்கே அருளாய் என்று அணையும்கோயில், Andaa Emakke Arulaai Endru Anaiyumkoil - ‘தேவனே, எங்களுக்கே அருள் புரிய வேணும்’ என்று சொல்லிக்கொண்டு வந்து சேர்ந்து நிற்கிற கோவிலாயும், அருகு எல்லாம், Arugu Ellam - சுற்றுப்பிரதேசங்களெங்கும் வண்டு ஆர் பொழிலின் பழனத்து, Vandu Aar Pozhilin Pazhanathu - வண்டுகள் நிறைந்திருக்கப்பெற்ற சோலைகளிலுண்டான நீர்நிலங்களில் வயலின் அயலே கயல் பாய, Vayalin Aayale Kayal Paaya - கழனிகளிடத்துள்ள கயல் மீன்கள் வந்து துள்ள தண்தாமரைகள் முகம்மலர்த்தும், Thanthaamaraigal Mukhammalarthum - குளிர்ந்ததாமரை மொக்குகள் முகம் விகஸிக்கப் பெற்றதாயுமுள்ள சாளக்கிராமம், Saalakkiraamam - ஸாளக்ராமத்தை |