Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 1018 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1018பெரிய திருமொழி || (1-8–கொங்கு அலர்ந்த) (திருவேங்கடம் 1 ) (கொங்கலர்ந்த மலர்க்குருந்த மொசித்த கோவலனாய் எம்பிரானாய் சங்கு தங்கு தடங்கடல் துயில் கொண்ட தாமரைக் கண்ணினனாய் பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணனான எம்பெருமானது இருப்பிடமாகிய பொங்கு நீர் செங்கயல் திளைக்குஞ்சுனைத் திருவேங்கடத்தை நெஞ்சமே! அடை என்கிறார்.) 1
கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம் ஒசித்த கோவலன் எம்பிரான்
சங்கு தங்கு தடம் கடல் துயில் கொண்ட தாமரைக் கண்ணினன்
பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணர் தம்மிடம் பொங்கு நீர்ச்
செங்கயல் திளைக்கும் சுனைத் திரு வேம்கடம் அடை நெஞ்சே –1-8-1
கொங்கு அலர் ந்த மலர் குருந்தம் ஒசித்த, Kongu Alar Nda Malar Kurundham Osiththa - பரிமளம் வீசுகின்ற பூக்கள் நிறைந்த குருந்த மரத்தை முறித்தழித்த
கோவலன், Kovalon - கோபால க்ருஷ்ணனாய்
எம்பிரான், Embiran - அஸ்மத்ஸ்வாமியாய்
சங்கு தங்கு தட கடல் துயில் கொண்ட, Sangu Thangu Thada Kadal Thuyil Konda - சங்குகள் தங்கியிருக்கிற பெரிய கடலிலே திருக்கண் வளர்கின்ற
தாமரை கண்ணினன், Thamarai Kanninann - புண்டரீகாக்ஷனாய்,
பொங்கு புள்ளினை வாய் பிளந்த, Pongu Pullinai Vai Pilantha - செருக்குடன் கிளர்ந்து வந்த பகாஸூரன் வாயைக் கிழித்தெறிந்த
புராணர்தம் இடம், Puranartham Idam - புராண புருஷனான ஸ்ரீமந் நாராயணன் எழுந்தருளியிருக்கு மிடமாயும்
பொங்கு நீர், Pongu Neer - நீர்வளமுடையதாய்
செம் கயல் திளைக்கும், Sem Kayal Thilaikkum - சிவந்த மீன்கள் களித்து வாழப்பெற்ற
சுனை, Sunai - சுனைகளையுடையதாயுமிருக்கிற
திருவேங்கடம், Thiruveengadam - திருமலையை
நெஞ்சமே அடை, Nenjamai Adai - நெஞ்சே! நீ அடைந்திடு.