| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 979 | பெரிய திருமொழி || (ஏனம் முனாகி) - -(திருவதரியாச்சிராமம் ) (பெருமாளையும் பிராட்டியையும் பிரிப்பதற்கு மாயமான் வடிவுகொண்டு வந்த மாரீசனை ஒழித்தபடியையும், ஆச்ரிதனான ஸுக்ரீவனுக்கு விரோதியான வாலியை ஒழித்தபடியையும் முன்னடிகளில் அருளிச் செய்கிறார்.) 2 | கானிடை யுருவைச் சுடுசரம் துரந்து கண்டு முன் கொடும் தொழில் உரவோன் ஊனுடை யகலத்தடு கணை குளிப்ப உயிர் கவர்ந்துகந்த வெம் மொருவன் தேனுடைக் கமலத் தயனொடு தேவர் சென்று சென்று இறைஞ்சிட பெருகு வானிடை முது நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யா ச்சிராமத்துள்ளானே –1-4-2 | கானிடை, Kaanidai - காட்டிலே உருவை, Uruvai - (மாரீசனாகிய) மாயா மிருகததை முன் கண்டு, Mun Kandu - கண்ணெதிரில் பார்த்து சுடு சரம் துரந்து, Sudu Saram Thurandhu - (அதன் மேல்) தீக்ஷ்ணமான பாணத்தைப் பிரயோகித்தவனும் கொடு தொழில் உரவோன், Kodu Thozhil Uravon - கொடுமையான தொழிலை யுடையனாய் பலசாலியான வாலியினுடைய ஊன் உடை அகலத்து, Oon Udai Akalathu - மாம்ஸமான மார்விலே அடு கணை குளிப்ப, Adu Kanai Kulippa - தீக்ஷ்ணமான பாணத்தை அழுத்தி உயிர் கவர்ந்து, Uyir Kavarndhu - (அவனது பிராணனை அபஹரித்து உகந்த, Ugantha - மகிழ்ந்தவனுமான எம் ஒருவன், Em Oruvan - விலக்ஷணனான அஸ்மத்ஸ்வாமி (எவ்விடத்திலுள்ளா னென்றால்) தேன் உடை கமலத்து அயனொடு, Then Udai Kamalathu Ayanodu - தேனையுடைய(திருநாபிக்) கமலத்தில் பிறந்த பிரமனோடு கூட தேவர், Thevar - மற்றுமுள்ள தேவர்களும் சென்று சென்று, Sendru Sendru - பலகால் வந்து இறைஞ்சிட, Iraichida - வணங்கப் பெற்றதும் பெருகு வானிடை முது நீர் கங்கையின் கரைமேல், Perugu Vaanidai Muthu Neer Gangaiyin Karameel - பெருகுகின்ற புராதனமாக ஆகாசகங்கைக் கரைமீது உள்ளதுமான வதரி ஆச்சிராமத்து, Vadhari Aachiramaathu - ஸ்ரீபதரிகாச்ரமத்திலே உள்ளான், Ullaan - எழுந்தருளியிருக்கிறான். |