| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 983 | பெரிய திருமொழி || (ஏனம் முனாகி) - -(திருவதரியாச்சிராமம் ) (கண்ணபிரான் தொட்டிற்பருவத்திற் செய்த சேஷ்டித் மொன்றைக் கீழ்ப்பாட்டி லருளிச்செய்தார்; யௌவனப்பருவத்திற் செய்ததோர் செயலைச் சொல்லுகிறாரிதில்.) 6 | தேரணங்கல்குல் செழும் கயல் கண்ணி திறத்து ஒரு மறத் தொழில் புரிந்து பாரணங்கிமிலேறேழு முன்னடர்த்த பணி முகில் வண்ணன் எம்பெருமான் காரணம் தன்னால் கடும் புனல் கயத்த கரு வரை பிள வெழக் குத்தி வாரணம் கொணர்ந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே –1-4-6 | தேர் அணங்கு அல்குல், Ther Anangu Alkul - தேர்போன்று அழகிய நிதம்பத்தை யுடையளும் செழுகயல் கண்ணி திறத்து, Sezhugayal Kanni Thirathu - அழகிய கயல்போன்ற கண்களையுடையளுமான நப்பின்னைக்காக ஒரு மறத்தொழில் புரிந்து, Oru Marathozhil Purinthu - கோபம் மிக்க செயலைச்செய்து பார் அணங்குஇமில், Paar Anangumil - பூமியிலுள்ளாரெல்லாரும் நடுங்கும்படியான முசுப்பையுடைய ஏறு ஏழும் முன் அடர்த்த, Eru Ezhum Mun Adarttha - ஏழு எருதுகளையும் கண்முன்னே வலியடக்கின பனி முகில் வண்ணன், Pani Mukil Vannan - குளிர்ந்த மேகம்போன்ற வடிவையுடையனான எம்பெருமான், Emperuman - எம்பெருமான் (எங்கே எழுந்தருளியிருக்கிறானென்றால்) காரணம் தன்னால், Kaaranam Thannal - பகீரதப்ரயத்நமாகிற காரணத்தினால் கடு புனல் கயத்த, Kadu Punal Kayattha - வேகமாகப் பெருகுகின்ற ஜலம் நிறைந்த பள்ளங்களையுடையதும் கரு வரை பிளவுஎழ குத்தி, Karuvarai Pilavuezha Kuththi - பெரியதொருமலைபிளந்துபோம்படி (அம்மலையை) உடைத்துக்கொண்டு வாரணம் கொணர்ந்த, Vaaranam Konarntha - (அங்குள்ள) யானைகளைத் தள்ளிக் கொண்டுவந்து ப்ரவஹித்ததுமான கங்கையின், Gangaiyin - கங்காநதியினுடைய கரைமேல், Karaimeel - கரையின்மீதுள்ள வதரியாச்சிராமத்து உள்ளான், Vathariyachiramaithu Ullaan - ஸ்ரீபதரிகாச்ரமத்திலே உள்ளான். |