| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1025 | பெரிய திருமொழி || (1-8–கொங்கு அலர்ந்த) (திருவேங்கடம் 1 ) (கீழ்ப்பாட்டில் “பாரு நீரெரி காற்றினோடு ஆகாயமுமிவையாயினான்” என்ற முதலடியிற் சொன்ன அர்த்தமே இப்பாட்டிலும் முதலடியிற் சொல்லப்படுகிறது. அம்பரம் – ஆகாயம்; தற்சம வடசொல். பிருதிவி, அப்பு, தேஜஸ், வாயு, ஆகாசம் என்கிற பஞ்சபூதஸ்வ ரூபியானவனும், நித்யஸூரிகளுக்குத் தலைவனும், அலர்மேல் மங்கைக்குத் துணைவனுமான எம்பெருமான் எழுந்தருளியிருக்கப்பெற்ற திருமலையைச் சென்று சேர்மனமே!.) 8 | அம்பர மனல் கால் நிலம் சலமாகி நின்ற வமரர் கோன் வம்புலா மலர் மேல் மலி மட மங்கை தன் கொழுநன் அவன் கொம்பின்னன விடை மடக் குற மாதர் நீளிதணம் தொறும் செம்புனமவை காவல் கொள் திருவேம்கடம் அடை நெஞ்சே –1-8-8 | அம்பரம் அனல் கால் நிலம் சலம் ஆகி நின்ற, Ambaram Anal Kaal Nilam Salam Aagi Nindra - ஆகாயம் நெருப்பு காற்று பூமி ஜலம் ஆகிய பஞ்சபூதஸ்வ ரூபியும் அமரர் கோன், Amarar Kon - நித்ய ஸூரிகட்குத் தலைவனும் வம்பு உலாம் மலர்மேல் மலி மட மங்கை தன், Vambu Ulaam Malarmel Mali Mada Mangai Than - பரிமளம் உலாவுகின்ற தாமரை மலரின் மேலே பொருந்திய பெரிய பிராட்டியாருக்கு கொழுநன் அவன், Kozhunaan Aavan - நாயகனுமான எம்பிரான் எழுந்தருளியிருக்கப் பெற்றதும், நீள் இதணம் தொறும், Neel Idhanam Thorum - உயர்ந்த பரண்கள் தோறும் கொம்பின் அன்ன இடை, Kombin Anna Idai - வஞ்சிக் கொம்போடு ஒத்த (நுண்ணிய) இடுப்பையுடைய மட குற மாதர், Mada Kura Maathar - மடமை தங்கிய குறப்பெண்கள் செம்புனம் அவை காவல் கொள், Sempunam Avai Kaaval Kol - செவ்விய வயல்களைக் காவல் செய்து கொண்டிருக்கப் பெற்றதுமான |