| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 998 | பெரிய திருமொழி || (வாணில முறுவல்) - -(திரு நைமிசாரண்யம்) (ஸ்ரீ நைமிசாரண்யத் தெம்பெருமான் திருவடிகளிலே பெரிய பிராட்டியார் முன்னிலையாகச் சரணம் புகுகிறார் இத்திருமொழியில். பகவானிடத்தில் சரணாகதி செய்யுமிடத்து அவனுடைய மேன்மைகளையும் தன்னுடைய தாழ்வுகளையும் வெளியிட்டுக்கொண்டே செய்ய வேணுமென்று விதியிருப்பதாலும், ஆர்த்தியின் கனத்தாலே தம்முடைய தோஷங்களெல்லாம் நினைவுக்கு வந்தே தீருமாகையாலும், இவ்வாழ்வார் தாமும் தம்முடைய குற்றங்குறைகளை யெல்லாம் விரிவாகப் பேசிக்கொண்டு சரணாகதி பண்ணுகிறார்.) 1 | வாணிலாமுறுவல்சிறுனுதல்பெருந்தோள் மாதரார்வனமுலைப்பயனே பேணினேன், அதனைப்பிழையெனக்கருதிப் பேதையேன்பிறவிநோயறுப்பான், ஏணிலேனிருந்தேனெண்ணினேனெண்ணி இளையவர்க்கலவியிந்திறத்தை நாணினேன், வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்! –1-6-1 | நைமிசாரணியத்துள் எந்தாய், Naimisaaraniyaththul Endhaai - நைமிசாரண்யத்தில் எழுந்தருளியிருக்கிற ஸ்வாமீ!, பேதையேன், Paethaiyen - அறிவு கெட்டவனான அடியேன், வாள் நிலா முறவல், Vaal Nila Muraval - ஒளி பொருந்திய புண் சிரிப்பையும் சிறு நுதல், Siru Nuthal - சிறிய நெற்றியையும் பெரு தோள், Peru Thol - பெரிய தோளையும் உடையரான மாதரார், Maatharaar - பெண்களினுடைய வனம் முலையே, Vanam Mulaiye - அழகிய முலைகளையே பயன், Payan - பரம புருஷார்த்தமாக பேணினேன், Paeninaen - (நெடுநாள் வரை) ஆதரித்திருந்தேன்; அதனை, Adhanai - அப்படி ஆதரித்திருந்த நிலைமையை பிழை என கருதி, Pizhai Ena Karuthi - தப்பென்று நினைத்து பிறவி நோய் அறுப்பான் ஏண் இலேன் இருந்தேன், Piravi Noi Aruppaan Aen Ileen Irundhen - ஸம்ஸாரமாகிற வியாதியை அறுத்துக்கொள்ள எண்ண மில்லாதவனாகவே இருந்திட்டேன்; எண்ணினேன், Enninaen - ஸ்வரூபத்தை ஆராயத்தொடங்கினேன்; எண்ணி, Enni - ஆராயவே, இளையவர் கலவியின் திறத்தை நாணினேன், Ilaiyavar Kalaviyin Thiraththai Naaninaen - விசயாந்தர போகங்களைக் காறியுமிழ்ந்தேன்; வந்து உன் திரு அடி அடைந்தேன், Vandhu Un Thiru Adi Adaindhen - இன்று உன் திருவடிகளை வந்து பணிந்தேன். |