| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1027 | பெரிய திருமொழி || (1-8–கொங்கு அலர்ந்த) (திருவேங்கடம் 1 ) (யௌவனபருவத்திற்குத் தகுதி யாகச் சிவந்த நிறத்தையுடைய கயல்களானவை ஒன்றோடொன்று களித்து விளையாடப்பெற்ற சுனைகளையுடைய திருவேங்கட மலையிலே நித்யவாஸம் செய் தருள்கின்ற பெருமானைக்குறித்துத் திருமங்கைமன்னன் அழகிய தமிழிலே செவ்விய சொல்லாலே அருளிச்செய்த இச்சொல்மாலையைத் தரித்துச் சொல்லவல்லவர்கள் இவ்விபூதியிலுள்ள வளவும் ராஜாதி ராஜர்களாய் விளங்கி, பின்னை நித்திய விபூதிக்கும் நிர்வாஹகராகப் பெறுவர்களென்று இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டினாராயிற்று.) 10 | செங்கயல் திளைக்கும் சுனைத் திருவேம்கடத்துறை செல்வனை மங்கையர் தலைவன் கலிகன்றி வண்டமிழ்ச் செஞ்சொல் மாலைகள் சங்கை யின்றித் தரித்து உரைக்க வல்லார்கள் தஞ்சமதாகவே வங்க மா கடல் வையம் காவலராகி வானுல காள்வரே –1-8-10 | செம் கயல், Sem Kayal - (இளமையாலே) சிவந்த மீன்கள் திளைக்கும், Thilaikkum - களித்து விளையாடப் பெற்ற சுனை, Sunai - நீர் நிலைகளையுடைய திரு வேங்கடத்து, Thiru Vengadaththu - திருமலையிலே உறை, Urai - நித்யவாஸம் பண்ணா நின்ற செல்வனை, Selvanai - திருமாலைக் குறித்து, மங்கையர் தலைவன் கலிகன்றி, Mangaiyar Thalaivan Kalikanri - திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவரான கலியன் (அருளிச் செய்த) வண் தமிழ், Van Tamil - அழகிய தமிழினாலாகிய செம் சொல் மாலைகள், Sem Sol Maalaigal - சிறந்த சொல் மாலையை சங்கை இன்றி தரித்து உரைக்க வல்லார்கள், Sangai Indri Tharithu Uraikka Vallarhal - ‘இது பலன்தருமோ, தராதோ’ என்கிற ஸந்தேஹமில்லாமல் (விச்வாஸத்துடனே) அப்யஸித்து அநுஸந்திக்க வல்லவர்கள் வங்கம் மா கடல் வையம், Vangam Maa Kadal Vaiyam - கப்பல்கள் நிறைந்த பெரிய கடலால் சூழப்பட்ட பூமண்டலத்திலுள்ளார்க்கு தஞ்சம் அது ஆகவே காவலர் ஆகி, Thanjam Adhu Aagave Kaavalar Aagi - புகலிடமாய்க்கொண்டு அவர்களுக்கு ரக்ஷகராகி (இப்படி லீலாவிபூதியை நிர்வஹித்த பின்பு) வான் உலகு ஆள்வர், Vaan Ulagu Aalvar - பரமபதத்தையும் ஆளப் பெறுவர்கள். |