| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 975 | பெரிய திருமொழி || (முற்ற மூத்து) - -(திருவதரி) (முற்ற மூத்துக் கோல் துணையா முன்னடி நோக்கி வளைந்து சென்று குறடேறும்போதே, சீ சீ, நட, நட” என்று துரத்தியடிப்பர்கள் ; வாசலை விடமாட்டாத சாபல்யத்தாலே ‘அம்மா! நான் உள்ளே வரவில்லை; தெருத்திண்ணையிலேயே கிடந்து போகிறேன்’ என்று விநயமாகச் சொல்லி உட்காரப் பார்த்தவளவில், ஈங்கிரேல்மின்’ என்று வெருட்டுவர்கள்;) 8 | ஈசி போமின் ஈங்கு இரேன் மின் இருமி இளைத்தீர் உள்ளம் கூசி யிட்டீர் என்று பேசும் குவளை யம் கண்ணியர் பால் நாசமான பாசம் விட்டு நன்னெறி நோக்கல் உறில் வாச மல்கு தண் துழாயான் வதரி வணங்குதுமே –1-3-8 | இருமி இளைத்தீர், Irumi Ilaiththir - “(ஐயங்கார்களே!) இருமலும் இளைப்புமாக ஆனீர்கள்; உள்ளம் கூசியிட்டீர், Ullam Koosiyitthir - நெஞ்சு கூசப் பெற்றீர்கள்; போமின், Pomin - அப்பால் ஒழிந்து போங்கள் ஈ சி, Ee See - சீ சீ ; ஈங்கு இரேல்மின், Eengu Irelmin - இங்கே இருக்கக்கூடாது;” என்று பேசும், Endru Pesum - என்றிப்படி அவமரியாதையாகப் பேசுகிற குவளை அம் கண்ணியர் பால், Kuvazhai Am Kanniyar Paal - கருநெய்தல் போன்ற அழகிய கண்ணையுடைய மாதர்களிடத்து நாசம் ஆன பாசம் விட்டு, Naasam Aana Paasam Vittu - ஸ்வரூபநாசத்தை விளைக்க வல்ல ஆசாபாசத்தை விட்டுத் துலைத்து நல் நெறி நோக்கல் உறில், Nal Neru Nookkal Uruil - நல்வழி போகப்பார்க்கும் பக்ஷத்தில் வாசம் மல்கு தண்துழாயான் வதரி வணங்குதும், Vaasam Malku Thanthuzhaiyan Vadhari Vananguthum - பரிமளம் மிக்குக் குளிர்ந்த திருத்துழாய் மாலையையுடைய எம்பெருமானது ஸ்ரீபதரியை வணங்குவோம். |