திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 981 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
981பெரிய திருமொழி || (ஏனம் முனாகி) - -(திருவதரியாச்சிராமம் ) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நெஞ்சே! இப்போது உனக்கு உறுதியாக ‘ஒரு நல்வார்த்தை சொல்லுகிறேன் கேள். அதுயாதெனில்; தொண்டர்களுடைய ‘விரோதியைப் போக்கிப் பரமபதத்தை அளிக்கின்ற பேரருளாளன் ஸ்ரீ பதரிகாச்ரமத்தில் எழுந்தருளியிராநின்றான்; அங்கே சென்று அவனை நீ வணங்கி உஜ்ஜீவிக்கக்கடவை ; இதுவே உனக்கு நான் உரைக்கும் உறுதிச்சொல்.) 4
துணி வினி யுனக்குச் சொல்லுவன் மனமே தொழுது எழு தொண்டர்கள் தமக்கு பிணி யொழித்தமரர் பெரு விசும்பு அருளும் பேரருளாளன் எம்பெருமான் அணி மலர்க் குழலாரரம்பையர் துகிலும் ஆரமும் வாரி வந்து அணி நீர் மணி கொழித்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே –1-4-4
பதவுரை Show / Hide
மனமே, Maname - நெஞ்சமே!,
இனி உனக்கு துணிவு சொல்லுவன், Ini Unakku Thunivu Solluvan - இதுமுதலாக உனக்கு இருக்க வேண்டிய உறுதியைச் சொல்லுகிறேன் (கேள்);
தொண்டர்கள் தமக்கு, Thondargal Thamakku - ஆச்ரிதர்களுக்கு
பிணிஒழித்து, Pinizhil - வியாதிகளைப்போக்கி
அமரர் பெரு விசும்பு அருளும், Amarar Peru Visumbu Arulum - நித்ய ஸூரிகளுடையதான பரமபதத்தை (அவர்கட்கு) அளித்தருளாநின்ற
பேர் அருள் ஆளன், Per Arul Alan - பரமதயாளுவான
எம்பெருமான், Emperuman - ஸர்வேச்வரனை
தொழுது எழு, Thozhudhu Ezhuthu - வணங்கி உஜ்ஜீவிக்கக் கடவை;
அணி நீர், Ani Neer - (கங்கையிலுள்ள) அழகிய ஜலமானது
மலர் அணி குழலார் அரம்பையர், Malar Ani Kuzhalar Arampaiyar - புஷ்பங்களை யணிந்த கூந்தலையுடைய அப்ஸரஸ் ஸ்த்ரீகளினுடைய
துகிலும், Thugilum - சேலைகளையும்
ஆரமும், Aaramum - ஹாரங்களையும்
வாரி வந்து, Vaari Vandu - திரட்டிக்கொண்டுவந்தும்
மணி கொழித்து, Mani Kozhithu - ரத்னங்களைத் தள்ளிக்கொண்டு வந்தும்
இழிந்த, Izhintha - ப்ரவஹிக்கப்பெற்ற
கங்கையின், Gangaiyin - கங்காநதியினுடைய
கரை மேல், Karai Mel - கரைமேலுள்ள
வதரி ஆச்சிரமத்து, Vadhari Aachiramatthu - ஸ்ரீபதரிகாச்ரமத்திலே
உள்ளான், Ullaan - எழுந்தருளியிருக்கிறான்.