| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1033 | பெரிய திருமொழி || (1-9—தாயே தந்தை)(திருவேங்கடம் 2) (சரீரமென்பது பஞ்சபூமயமாயிருக்கும். மண்ணையும் மணலையும் கல்லையும் நீரையும் சேற்றையுங்கொண்டு வீடு கட்டுமா போலே, ப்ருதிவி, அப்பு, தேஜஸ், வாயு, ஆகாசம் என்கிற பஞ்சபூதங்களைக் கொண்டு இந்த மாம்ஸபிண்டம் நிருமிக்கப்பட்டிராநின்றது.) 6 | மண்ணாய் நீர் எரி கால் மஞ்சுளாவு மாகாசமுமாம் புண்ணார் ஆக்கை தன்னுள் புலம்பித் தளர்ந்து எய்த்து ஒழிந்தேன் விண்ணார் நீள் சிகர விரையார் திருவேங்கடவா அண்ணா வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே –1-9-6 | விண் ஆர் நீள் சிகரம், Vin Ar Neel Sikaram - ஆகாசத்தையளாவி உயர்ந்திருக்கிற கொடுமுடிகளையுடையதும் விரை ஆர், Virai Aar - பரிமளம் மிக்கதுமான திருவேங்கடவா, Thiruveengadavaa - திருமலையிலே எழுந்தருளியிருக்கிற அண்ணா, Anna - ஸ்வாமிந்!, மண்ஆய் நீர் எரி கால் மஞ்சு உலாவும் ஆகாசமும் ஆம், Manai Neer Eri Kaal Manju Ulaavum Aakachamum Aam - பூமி, ஜலம், அக்நி, வாயு, மேகங்களு லாவுகின்ற ஆகாசம் ஆகிய பஞ்சபூதங்களினாலாகியதும் புண் ஆர், Pun Ar - புண்கள் நிறைந்ததுமான ஆக்கை தன்னுள், Aakkai Thannul - சரீரத்திலே (அகப்பட்டுக் கொண்டு) புலம்பி தளர்ந்து எய்த்து ஒழிந்தேன், Pulambi Thalarndhu Eyththu Ozhindhen - கதறியழுது உடல் மெலிந்து மிகவும் கஷ்டப்பட்டவனான அடியேன் |