திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 967 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
967பெரிய திருமொழி || (1-2-வாலி மாவலத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆழ்வாருடைய சொல்மாலையாகிய இத் திரு மொழியினது அருமையான இனிய இசையைப் பாடவல்ல விலக்ஷண பாகவதர்களுக்கு மஹாபாபங்களொன்றும் கிட்டமாட்டா என்று தலைக் கட்டுகிறார்) 10
கரிய மா முகில் படலங்கள் கிடந்து அவை முழங்கிட களிறு என்று பெரிய மாசுணம் வரை எனப் பெயர் தரு பிரிதி எம்பெருமானை வரி கொள் வண்டு அரை பைம் பொழில் மங்கையர் கலியனதொலி மாலை அரியவின்னிசை பாடு நல்லடியவர்க்கு அருவினை யடையாவே –1-2-10
பதவுரை Show / Hide
கரியமாமுகில் படலங்கள் அவை, Kariyamamukil Padalangal Avai - கறுத்த மஹாமேகங்களின் கூட்டங்களானவை
கிடந்து, Kidandhu - (நீர்க்கனத்தாலே திரிய மாட்டாமல்) ஓரிடத்திலே இருந்து கொண்டு
முழங்கிட, Muzhangida - கர்ஜிக்க, (அந்த கர்ஜனையைக் கேட்டு)
பெரிய மாசுணம், Periya Maasunam - பெரிய மலைப்பாம்புகளானவை
களிறு என்று, Kaliru Endru - (நமக்கு இரையாம்படி) யானைகள் (வருகின்றன) என்று நினைத்து
வரை என பெயர்தரு, Varai Ena Peyartharu - மலை பேர்ந்தாற் போலே பெயர்ந்து கிட்ட வருமிடமான
பிரிதி, Pridhi - திருப்பிரிதியிலே (எழுந்தருளியிருக்கிற)
எம்பெருமானை, Emperumaanai - எம்பெருமானைக் குறித்து
வரிகொள் வண்டு அறை பை பொழில் மங்கையர், Varikol Vandu Arai Pai Pozhil Mangaiyar - அழகிய வண்டுகள் ஒலிக்கின்ற விசாலமான சோலைகளையுடைய திருமங்கையிலே உள்ளவர்கட்குத் தலைவரான
கலியனது, Kaliyanathu - ஆழ்வாருடைய
ஒலிமாலை, Olimaalai - சொல்மாலையாகிய இத் திரு மொழியினது
அரிய இன் இசை பாடும், Ariya In Isai Paadum - அருமையான இனிய இசையைப் பாடவல்ல
நல் அடியவர்க்கு, Nal Adiyavarkku - விலக்ஷண பாகவதர்களுக்கு
அரு வினை அடையா, Aru Vinai Adaiyaa - மஹாபாபங்களொன்றும் கிட்டமாட்டா