திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1037 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1037பெரிய திருமொழி || (1-9—தாயே தந்தை)(திருவேங்கடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (“கண்ணாவானென்றும் மண்ணோர் விண்ணோர்க்குத், தண்ணார் வேங்கடவிண்ணோர் வெற்பனே” என்றபடி) 10
கண்ணா யேழ் உலகுக்கு உயிராய வெங்கார் வண்ணனை விண்ணோர் தாம் பரவும் பொழில் வேங்கட வேதியனை திண்ணார் மாடங்கள் சூழ் திரு மங்கையர் கோன் கலியன் பண்ணார் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே –1-9-10
பதவுரை Show / Hide
ஏழ் உலகுக்கு, Ezhu Ulagukku - எல்லா வுலகங்களுக்கும்
கண் ஆய், Kan Aay - கண் போன்றவனும்
உயிர் ஆய, Uyir Aay - உயிர் போன்றவனும்
எம், Em - எமக்காக
கார் வண்ணணை, Kaar Vannanaik - மேகம் போன்ற திரு நிறத்தையுடையவனும்
விண்ணோர் தாம் பரவும்பொழில் வேங்கடம், Vinnor Thaam Paravumpozhil Vengadam - நித்ய ஸூரிகளும் வந்து துதிக்கப்பெற்ற, சோலை சூழ்ந்த திருமலையிலே
வேதியதனை, Vediyathanai - வேத ப்ரதிபாத்யனாய் எழுந்தருளியிருப்பவனுமான எம்பெருமானைக் குறித்து
திண் ஆர் மாடங்கள் சூழ் திரு மங்கையர்கோன் கலியன், Thin Ar Maadangal Soozh Thiru Mangaiyarkon Kalyan - திண்ணிய மாடங்கள் சூழ்ந்த திருமங்கையி லுள்ளார்க்குத் தலைவரான கலியன் (அருளிச் செய்த)
பண் ஆர் பாடல் பத்தும், Pan Ar Paadal Paththum - பண்ணோடு கூடிய இப்பத்துப் பாசுரங்களையும்
பயில்வார்க்கு, Payilvaarakku - ஓதுமவர்களுக்கு
பாவங்கள் இல்லை, Paavangal Illai - பிரதிபந்தங்களெல்லாம் தொலைந்து போம்.