| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1004 | பெரிய திருமொழி || (வாணில முறுவல்) - -(திரு நைமிசாரண்யம்) (மனமொழி மெய்கள் மூன்றாலும் பாவங் களையே செய்து செத்தவர்கள் போகிற வழியின் கொடுமையைக் கேள்விப்பட்ட மாத்திரத்திலே நடுநடுங்கி வந்து உன் திருவடிகளைப் பற்றினேன் என்கிறார்.) 7 | நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும் நீதி யல்லாதன செய்தும் துஞ்சினார் செல்லும் தொன்னெறி கேட்டே துளங்கினேன் விளங்கனி முனிந்தாய் வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா வானவர் தானவர்க்கு என்றும் நஞ்சனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –1-6-7 | விளங்கனி முனிந்தாய், Vilangani Munindhai - விளாம்பழமாய் வந்து தோன்றின அஸுரனைச் சீறித் தொலைத்தவனே! வஞ்சனேன் அடியேன்நெஞ்சினில் பிரியா வானவா, Vanjanen Adiyennenjinil Priya Vaanavaa - வஞ்சகனான என்னுடைய நெஞ்சினுள்ளும் புகுந்து பிரியாதிருக்கிற தேவனே! தானவர்க்கு என்றும் நஞ்சனே, Thaanavarkku Endrum Nanjane - அசுரர்களுக்கு எப்போதும் மிருத்யுவாயிருப்பவனே! நீதி அல்லாதன, Neethi Alladhana - அநீதியான ஒழுக்கங்களை நெஞ்சினால் நினைந்தும், Nenjinaal Ninaindhum - (முதலில்) நெஞ்சாலே நினைத்தும் வாயினால் மொழிந்தும், Vaayinal Mozhindhum - (பிறகு) வாயாலே சொல்லியும் செய்தும், Seithum - (பிறகு) செய்கையினால் அனுட்டித்தும் துஞ்சினார், Thunjinar - முடிந்தவர்கள் செல்லும், Sellum - அடையத்தக்க தொல் நெறி, Thol Nerii - நரகமார்க்கத்தை கேட்டே, Kette - (கற்றுணர்ந்த பெரியோர் சொல்லக்) கேட்டமாத்திரத்திலே துளங்கினேன், Thulankinen - நடுங்கினவனாய்க்கொண்டு உன் திருவடி அடைந்தேன்-. |