| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 984 | பெரிய திருமொழி || (ஏனம் முனாகி) - -(திருவதரியாச்சிராமம் ) (திருமால் தேவர்களின் பிரார்த்தனைக் கிணங்கிக் கடல்கடைந் தருளின காலத்து, கடையப்பட்ட அக்கடலினின்று ஐராவதயானை, உச்சைச்ச்ரவஸ் என்னுங் குதிரை, விஷம், சந்திரன், கல்ப வ்ருக்ஷம், அமுதம் முதலியன உண்டாயினவென்று புராணங்கள் கூறும். அவற்றில் தேவேந்திரனுக்கு ஐராவதயானையையும் அமிருதத்தையும் தேவர்கட் குத் தலைவனாயிருக்கும் ஸாம்ராஜ்யத்தையும் கொடுத்தருளி, அந்தரங்க அடியவர்களான நமக்குத் தன்னையே கொடுத்தருளி உபகரித்த எம்பெருமான் வதரி யாச்சிரமத்துள்ளான்;) 7 | வெந்திறல் களிறும் வேலை வாய் அமுதும் விண்ணோடு விண்ணவர்க்கு அரசும் இந்திரர்க்கு அருளி எமக்கும் ஈந்து அருளும் எந்தை எம்மடிகள் எம்பெருமான் அந்தரத்து அமரர் அடி இணை வணங்க ஆயிர முகத்தினால் அருளி மந்தரத்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே –1-4-7 | வேலை வாய் வெம்திறல் களிறும், Velaivai Vemthiral Kalirum - கடலில் நின்றுமுண்டான மிக்க மிடுக்கையுடைய ஐராவதமென்கிற யானையையும் அமுதும், Amudhum - அம்ருதத்தையும் விண்ணொடு, Vinnodu - ஸ்வர்க்கலோகத்தையும் விண்ணவர்க்கு அரசும், Vinnavarkku Arasum - தேவர்களுக்கெல்லாம் அரசனாயிருக்குந் தன்மையையும் இந்திரற்கு அருளி, Indhirarku Aruli - இந்திரனுக்குக் கொடுத்தருளி எமக்கும் ஈந்தருளும், Emakkum Eendharulum - நமக்கும் வேண்டிய அருளைச் செய்கிற எந்தை எம் அடிகள் எம்பெருமான், Endhai Em Adigal Emperumaan - ஸர்வேச்வரன் (எங்கே எழுந்தருளியிருக்கிறானென்னில்) அந்தரத்து அமரர், Andharathu Amarar - ஸ்வர்க்கத்திலுள்ள தேவர்களெல்லோரும் அடி இணை வணங்க ஸேவித்துப், Adi Inai Vananga Seviththu - எம்பெருமானுடைய திருவடிகளை ஸேவித்துப் பிரார்த்திக்க ஆயிரம் முகத்தினால் அருளி, Aayiram Mukathinaal Aruli - (அவர்களது வேண்டுகோளின்படி) பலமுகமாகப் பிரவஹிக்கும்படி (கங்கையை நோக்கி) நியமித்தருள மந்தரத்து இழிந்த, Mandarathu Izhintha - (அவ்வண்ணமாகவே) மந்தர மலையினின்றும் பெருகின கங்கையின் கரை மேல், Gangaiyin Karai Mel - கங்கையின் கரைமீதுள்ள வதரியாச்சிராமத்து உள்ளான், Vathariyachiramaithu Ullaan - ஸ்ரீபதரிகாச்ரமத்திலே உள்ளவன்.’ |