| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1020 | பெரிய திருமொழி || (1-8–கொங்கு அலர்ந்த) (திருவேங்கடம் 1 ) (சயனித்தருளும்படியையும் நின்றருளும்படியையும் கீழ்ப்பாட்டில் அநுஸந்தித்தார்; நடந்தருளும்படியை இப்பாட்டில் அநுஸந்திக்கிறார்.) 3 | நின்ற மா மருது இற்று வீழ நடந்த நின்மலன் நேமியான் என்றும் வானவர் கை தொழும் இணைத் தாமரை யடி எம்பிரான் கன்றி மாரி பொழிந்திடக் கடிதாநிரைக் கிடர் நீக்குவான் சென்று குன்றம் எடுத்தவன் திருவேம்கடம் அடை நெஞ்சே –1-8-3 | நின்ற, Nindra - பேராமல் நின்று கொண்டிருந்த மா மருது, Maa Maruthu - பெரிய மருதமரங்களிரண்டும் இற்று வீழ, Itru Veela - முறிந்து விழும்படியாக நடந்த, Nadanda - நடைகற்ற நின்மலன், Ninmalan - நிர்மலனும், நேமியான், Nemiyan - திருவாழியை யுடையவனும், என்றும், Endrum - எப்போதும் வானவர், Vaanavar - நித்யஸூரிகள் கை தொழும், Kai Thozum - ஸேவிக்கப்பெற்ற தாமரை அடி இணை எம்பிரான், Thamarai Adi Inai Empran - இரண்டு திருவடித் தாமரைகளை யுடைய ஸ்வாமியும், கன்றி, Kandri - (இந்திரன்) கோபங்கொண்டு மாரி, Maari - மழையை பொழிந்திட, Pozhindida - பெய்வித்தவளவிலே ஆ நிரைக்கு, A Niraikku - பசுக்கூட்டங்களுக்கு இடர்நீக்குவான், Idarnikkuvan - துன்பம் தொலைப்பதற்காக சென்று, Sendru - போய் குன்றம் எடுத்தவன், Kundram Eduththavan - கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்தவனுமான எம்பெருமான் எழுந்தருளியிருக்கிற |