திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 987 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
987பெரிய திருமொழி || (ஏனம் முனாகி) - -(திருவதரியாச்சிராமம் ) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டும் பாசுரம் இது.) 10
வரும் திரை மணி நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானை கரும் கடல் முந்நீர் வண்ணனை எண்ணிக் கலியன் வாயொலி செய்த பனுவல் வரம் செய்த வைந்தும் ஐந்தும் வல்லார்கள் வானவர் உலகுடன் மருவி இரும் கடல் உலகம் ஆண்டு வெண் குடைக் கீழ் இமையவராகுவர் தாமே –1-4-10
பதவுரை Show / Hide
வரும் திரை மணி நீர் கங்கையின் கரை மேல், Varum Thirai Mani Neer Gangaiyin Karai Mel - (பெரிய வேகத்தோடு) வருகிற அலைகளை யுடைத்தாய் தெளிந்த ஜலத்தை யுடைத்தான
கங்கையின் கரை மேல், Gangaiyin Karai Mel - கங்கையின் கரை மேலே
வதரியாச்சிராமத்து உள்ளானை, Vathariyachiramaithu Ullanai - ஸ்ரீபதரிகாச்ரமத்தில் எழுந்தருளியிருக்கிற
கரு முந்நீர் கடல் வண்ணனை, Karum Munneer Kadal Vannana - கறுத்த மூன்று வகைப்பட்ட நீரையுடைய கடல் போன்ற நிறத்தனான ஸ்ரீமந் நாராயனனை.
எண்ணி, Enni - அநுஸந்தித்து
கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார்
வாய் ஒலி செய்த, Vaai Oli Seitha - திருவாய்மலர்ந்தருளிய
பனுவல், Panoval - பாசுரமாய்
வரம் செய்த, Varam Seitha - சிறந்ததான
ஐந்தும் ஐந்தும், Aindhum Aindhum - இப்பத்துப்பாசுரங்களையும்
வல்லார்கள் தாம், Vallargal Thaam - ஓதவல்லவர்கள்
வெண் குடை கீழ், Ven Kudai Keel - வெண் கொற்றக் குடையின் கீழ் வாழ்ந்து கொண்டு
இரு கடல் உலகம் ஆண்டு, Iru Kadal Ulagam Aandu - பெரிய கடல்சூழ்ந்த இப்பூமியை ஆண்டபின்
உடன், Udan - அடுத்தபடியாக
வானவர் உலகு மருவி, Vaanavar Ulagu Maruvi - ப்ரஹ்மலோக நிர்வாஹகராக இருந்து
இமையவர் ஆகுவர், Imaiyavar Aaguvar - (அதன் பிறகு) நித்யசூரியளாகவும் ஆவர்கள்.