| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1011 | பெரிய திருமொழி || (1-7–அங்கண் ஞாலம்) (சிங்கவேள் குன்றம்) (கையும் வேலுமாயிருக்கிற விருப்பைக் கண்ட காட்சியிலே எல்லாரையும் துக்கப்படுத்தவல்லவனான இரணியனுடைய உயிரைக் கவர்ந்து அவனது மார்வைப் பிளந்தருளின பெருமான் உறையுமிடமாவது சிங்கவேழ்குன்றம்.) 4 | எவ்வம் வெவ்வேல் பொன் பெயரோன் எதலனின் இன்னுயிரை வவ்வி ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்த வம்மானதிடம் கவ்வு நாயும் கழுகும் உச்சிப் போதொடு கால் சுழன்று தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணாச் சிங்க வேள் குன்றமே –1-7-4 | எவ்வம் வெம்வேல், Evvam Vemveel - துன்பத்தை விளைப்பதாய் தீக்ஷ்ணமான வேலாயுதத்தையுடையனாய் ஏதலன், Aethalan - பாகவத விரோதியான பொன் பெயரோன், Pon Peyaron - இரணியனுடைய இன் உயிரை, In Uyirai - இனிமையான பிரானணை வவ்வி, Vavvi - அபஹரித்து ஆகம், Aagam - (அவனுடைய) சரீரத்தை வள் உகிரால், Val Ukiraal - கூர்மையான நகங்களாலே வகிர்ந்த அம்மானது இடம், Vagirntha Ammanathu Idam - கிழித்தெறிந்த பெருமான் எழுந்தருளியிருக்குமிடமாவது:- கவ்வும் நாயும், Kavvum Nayum - (கண்டவர்களை) யெல்லாம் கவர்கின்ற நாய்களும் கழுகும், Kazhugum - கழுகுகளும் (நிறைந்திருப்பதனாலும்) உச்சிப் போ தொடு கால் சுழன்று, Uchchi Po Thodu Kaal Suzhndru - கொழுத்த வெய்யிலும் சுழல்காற்றும் எப்போது மிருப்பதனாலும் தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணா, Deivam Allal Chella Onna - தேவதைகள் தவிர மற்றையோர் சென்று கிட்ட முடியாததான |