| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1017 | பெரிய திருமொழி || (1-7–அங்கண் ஞாலம்) (சிங்கவேள் குன்றம்) (வீரலக்ஷ்மி விளங்குங் கண்களையுடைய சிங்கங் களானவை யானைக்கோடு முதலியவற்றைக் கொண்டு ஸமர்ப்பித்து வணங்குமிட மான சிங்கவேழ் குன்றத்திலே யெழுந்தருளியிருக்கின்ற எம்பெருமான் விஷயமாகத் திருமங்கை மன்னன் அருளிச்செய்த சொல்மாலையை ஓதவல்லவர்கள் தீங்கின்றி வாழ்வார்கள் என்று – இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டினாராயிற்று.) 10 | செங்கணாளி யிட்டிறைஞ்சும் சிங்க வேள் குன்றுடைய எங்கள் ஈசன் எம்பிரானை இரும் தமிழ் நூல் புலவன் மங்கை யாளன் மன்னு தொல் சீர் வண்டறை தார்க் கலியன் செங்கை யாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே –1-7-10 | செம்கண் ஆளி, Semkan Aali - சிவந்த கண்களையுடைய சிங்கங்கள் இட்டு, Ittu - (தமக்குக் கிடைத்த யானைத் தந்தம் முதலியவற்றைத்) திருவடிகளிலே ஸமர்ப்பித்து இறைஞ்சும், Iraichum - வணங்குமிடமான சிங்க வேழ் குன்று உடைய, Singam Vezh Kuntru Udaiya - சிங்கவேழ் குன்றத்தை இருப்பிடமாகவுடையனாய் எங்கள் ஈசன், Engal Eesan - ஸம்ஸாரிகளான நமக்கெல்லார்க்கும் ஸ்வாமியாய் எம் பிரானை, Em Piraanai - நமக்கு உபகாரகனாயுமுள்ள ஸ்ரீ நரஸிம்ஹமூர்த்தி விஷயமாக, இரு தமிழ் நூல் புலவன், Iru Tamil Nool Pulavan - பெரிய தமிழ் சாஸ்த்ரத்தில் வல்லவராய் மங்கை ஆளன், Mangai Aalan - திருமங்கை நாட்டுக்குத் தலைவராய் மன்னு தொல்சீர், Mannu Tholseer - நித்யஸித்தமான ஸ்ரீ வைஷ்ணவலஷ்மியை உடையவராய் வண்டு அறைதார், Vandu Araidhaar - வண்டுகள் படிந்து ஒலி செய்கின்ற மாலையை யணிந்தவராய் செம் கை ஆளன், Sem Kai Aalan - மிக்க உதாரரான கலியன், Kaliyan - ஆழ்வாரருளிச்செய்த செம் சொல் மாலை, Sem Sol Maalai - செவ்விய இச்சொல் மாலையை வல்லவர், Vallavar - ஓதவல்லவர்கள் தீது இலர், Theethu Ilar - தீமை யொன்றுமின்றி நன்மை பெற்றவராவர். |