| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 972 | பெரிய திருமொழி || (முற்ற மூத்து) - -(திருவதரி) (ஸம்ஸாரிகளுடைய காலக்ஷேபக்ரமத்தைப் பேசுகிறார். உடலில் வலிவு இருந்தகாலத்தில் ஒரு நல்ல காரியம் பண்ணியறியார்கள் ; விஷய போகங்கள் செய்வதற்கு எவ்வளவு நிஷித்த காரியங்கள் செய்ய வேணுமோ அவ்வளவும் செய்து தீருவர்கள்; இப்படியாக யௌவனபருவத் தைக் கழித்துவிட்டுக் கிழத்தனத்தில் வந்தவாறே அப்போதாவது இழந்த நாளைக்கு அநுதாபப்பட்டு ஏதாவது நன்மை தேடிக்கொள்ள விரும்புவார்களோ; அது கிடையாது;) 5 | பண்டு காமரர் ஆனவாறும் பாவையர் வாய் அமுதம் உண்டவாறும் வாழ்ந்தவாரும் ஒக்க உரைத்து இருமி தண்டு காலா ஊன்றி ஊன்றித் தள்ளி நடவா முன் வண்டு பாடும் தண் துழாயான் வதரி வணங்குதுமே –1-3-5 | பண்டு, Pandhu - இளம்பிராயத்தில் காமர் ஆன ஆறும், Kaamar Aana Aarum - மாதர்கள் விரும்புதற்குத்தாம் உரியராக இருந்தபடியையும் பாவையர்வாய் அமுதம் உண்ட ஆறும், Paavai Arvaai Amudham Unda Aarum - அம்மாதர்களுடைய வாயமுதத்தைப் பருகினபடியையும் வாழ்ந்த ஆறும், Vaazhntha Aarum - சிற்றின்பங்களில் அழிந்தபடியையும் ஒக்க உரைத்து இருமி, Okka Uraiththu Irumi - சொல்லுவது இருமுவது, மறுபடியும் சொல்லுவது இருமுவது ஆக இப்படியாகி தண்ட காலா, Thanda Kaala - தடியைக் காலாகக்கொண்டு ஊன்றி ஊன்றி, Oonri Oonri - (அசக்தியினால் ஓரிடத்திலேயே) பலதடவை ஊன்றி தள்ளி, Thalli - தடுமாறி நடவாமுன், Nadavaamun - நடக்க நேருவதற்கு முன்னே வண்டு பாடும் தண் துழாயான், Vandu Paadum Than Thuzhaayaan - (மதுவுக்காக வந்து) வண்டுகள் பாடுகிற திருத்துழாய் மாலையை யுடையனான எம்பெருமானது வதரி, Vadhari - ஸ்ரீபதரியை வணங்குதும், Vananguthum - வணங்குவோம் |