| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1044 | பெரிய திருமொழி || (1-10–கண்ணார் கடல் சூழ்) (திருவேங்கடம் 3) (அண்ணா வடியே னிடரைக் களையாயே” என்று முதற்பாட்டிலே தாம் பிரார்த்தித்தபடியே தம்முடைய இடர்களைக் களைந்து அருளினது, முன்பு நப்பின்னைப்பிராட்டியின் கலவிக்கு விரோதிகளாயிருந்த ஏழு ரிஷபங்களை வலியடக்கினதுபோலே யிருக்கையாலே அதனைப்பேசி இனியராகிறார்.) 7 | மானேய் மட நோக்கி திறத்து எதிர் வந்த ஆனேழ் விடை செற்ற அணி வரைத் தோளா தேனே திருவேங்கட மா மலை மேய கோனே என் மனம் குடி கொண்டு இருந்தாயே –1-10-7 | மான் ஏய் மட நோக்கி திறத்து, Maan Aey Mad Nookki Thirathu - மானினுடைய நோக்குப் போன்ற அழகிய நோக்குடையளான நப்பின்னைப் பிராட்டிக்காக, எதிர் வந்த, Edhir Vanda - செருக்குடன் வந்த ஆன் விடை ஏழ் செற்ற, Aan Vidai Aezh Settra - ஏழு ரிஷபங்களைக் கொன்ற அணி வரை தோளா, Ani Varai Thoalaa - அழகிய மலைபோன்ற திருத்தோள்களை யுடையவனே தேனே, Thene - தேன்போல் போக்யனானவனே! திருவேங்கடம் மா மலை மேய கோனே, Thiruveengadam Maa Malai Maeya Kone - திருமலையிலே எழுந்தருளியிருக்கிற ஸ்வாமியே! என் மனம், En Manam - என்னுடைய நெஞ்சை குடிகொண்டு, Kudikondru - இருப்பிடமாகக்கொண்டு இருந்தாய், Irundhai - நிலைபெற்றிரா நின்றாய். |