திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1028 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1028பெரிய திருமொழி || (1-9—தாயே தந்தை)(திருவேங்கடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (1.“சேலேய்கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும், மேலாத்தாய் தந்தையுமவரே யினியாவாரே” 2. “தாயாய்த்தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய், நீயாய் நீ நின்றவாறு” என்கிறபடியே உன்னையே ஸகலவிதபந்துக்களுமாகக் கொள்ள வேண்டியிருக்க அது செய்யாதே தாயேயென்றும் தந்தையேயென்றும் தாரமேயென்றும் கிளையேயென்றும் மக்களேயென்றும் ஆபாஸமான புத்ரமித்ராதிகளிடத்திலே ஆசைவைத்து மிகவும் கஷ்டங்கள் பட்டேன்; அவர்களுக்கு என்னை ரக்ஷிக்க சக்தியுண்டாகிலன்றோ அவர்களால் நான் வாழ்வேன்; உண்மையில் அசக்தர்களான அவர்களை நான் வீணே நம்பிக்கெட்டேன் என்றபடி.) 1
தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும் நோயே பட்டு ஒழிந்தேன் உன்னைக் காண்பதோர் ஆசையினால் வேயேய் பூம் பொழில் சூழ் விரையார் திருவேம்கடவா நாயேன் வந்தடைந்தேன் நல்கியாள் என்னைக் கொண்டருளே –1-9-1
பதவுரை Show / Hide
வேய் ஏய், Vey Aey - மூங்கில்கள் நெருங்கி யிருக்கப் பெற்றதும் (ஆகையினாலே)
பூ பொழில் சூழ், Poo Pozhil Soozh - பூஞ்சோலைகள் நிறைந்திருக்கப் பெற்றதும் (ஆகையினாலே)
விரை ஆர், Virai Aar - பரிமளம் விஞ்சியிருக்கிற
திருவேங்கடவா, Thiruveengadavaa - திருமலையில் எழுந்தருளியுள்ள பெருமானே!
தாயே என்றும் தந்தையே என்றும் தாரமேஎன்றும் கிளையே என்றும் மக்களே என்றும், Thaaye Endrum Thandhaie Endrum Thaarameendrum Kilaie Endrum Makkaie Endrum - தாய் தந்தை மனையாள் பந்துக்கள் பிள்ளைகள் என்கிற ஆபாஸமான சரீர ஸம்பந்திகளையே எப்போதும் வாய்வெருவிக்கொண்டு
நோய் பட்டு ஒழிந்தேன், Noi Pattu Ozhindhen - அநர்த்தப்பட்டுப் போனவனும்
நாயேன், Naayen - நாய் போலே மிக்க நீசனுமான அடியேன்
உன்னை காண்பது ஓர் ஆசையினால், Unnai Kaanbathu Oor Aasaiyin Aal - (அந்த ஆபாஸ பந்துக்களை விட்டு, ப்ராப்த பந்துவான) உன்னை ஸேவிக்க வேணுமென்கிற ஆசையினால்
வந்து அடைந்தேன், Vandhu Adaindhen - உன்னிடம் வந்து சரணம் புகுந்தேன்;
என்னை, Ennai - சரணாகதனான என்னை
நல்கி, Nalki - கிருபை செய்து
ஆள் கொண்டருள், Aal Konda Arul - அடிமை கொண்டருளவேணும்.