திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1029 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1029பெரிய திருமொழி || (1-9—தாயே தந்தை)(திருவேங்கடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆபாஸபந்துக்களை உற்ற உறவினராக நினைத்திருந்த குற்றத்தைப் பொறுத்தருளவேணுமென்று சரணம் புகுந்தார் கீழ்ப்பாட்டில்;) 2
மானேய் கண் மடவார் மயக்கில் பட்டு மா நிலத்து நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன் தேனேய் பூம் பொழில் சூழ் திருவேம்கட மா மலை என் ஆனாய்  வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே –1-9-2
பதவுரை Show / Hide
தேன்ஏய், Then Aey - வண்டுகள் நிறைந்த
பூ பொழில் சூழ், Poo Pozhil Soozh - பூஞ்சோலைகளாலே சூழப்பட்ட
திருவேங்கடம் மா மலை, Thiruveengadam Maa Malai - திருவேங்கடமென்னும் சிறந்த மலைகளாலே எழுந்தருளியிரா நின்ற
என் ஆனாய், En Aanai - ஆனை போன்ற எம்பெருமானே!
மா நிலத்து, Maa Nilaththu - இப்பெரிய பூமண்டலத்திலே
மான் ஏய் கண் மடவார் மயக்கில் பட்டு, Maan Aey Kan Madavaar Mayakkil Pattu - மான்போன்ற கண்ணழகுடைய மாதர்களின் கண்மயக்கிலே, அகப்பட்டு,
நாநாவித நரகம் புகும் பாவம், Naanavitha Naragam Pugum Paavam - பலவகைப்பட்ட நரகங்களிலே புகுவதற்குக் காரணமான பாவங்களை
நானே செய்தேன், Naane Seidhen - நானொருவனே செய்து வைத்தேன்;
வந்து அடைந்தேன், Vandhu Adaindhen - உன்பக்கல் வந்து சரணம் புகுந்தேன்;