Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: பெருமாள் திருமொழி, குலசேகர ஆழ்வார் (107 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
0பெருமாள் திருமொழி - தனியன் || (இன்னமுதமூட்டுகேன்) 14
இன்னமுதமூட்டுகேன் இங்கே வா பைங்கிளியே
தென்னரங்கம் பாட வல்ல சீர்ப்பெருமாள் பொன்னஞ்
சிலைசேர் நுதலியர்வேள் சேரலர் கோன் எங்கள்
குலசேகரன் என்றே கூறு
Paing kiliye, பைங் கிளியே - பசுமைதங்கிய கிளியே!
In amudham ootuken, இன் அமுதம் ஊட்டுகேன் - (உனக்கு) இனிமையான அம்ருதம் உண்ணத் தருகிறேன்
Inge vaa, இங்கே வா - என்னருகே வருவாயாக
Then arangam, தென் அரங்கம் - தென் திருவரங்கத்தைக் குறித்து
Paada valla, பாட வல்ல - (இனிய கவிகளை) அருளிச் செய்யவல்ல
Seer, சீர் - கல்யாண குணசாலியான
Perumal, பெருமாள் - மஹாநுபாவர்
Pon am silai ser, பொன் அம் சிலை சேர் - விரும்பத்தக்கதாய் அழகியதான புருவத்தை நெற்றியிலேயுடைய
Nuthaliyar vel, நுதலியர் வேள் - மாதர்கட்கு மநோஹாரானவர்
Seralar kon, சேரலர் கோன் - சேர வம்சத்தவர்களுக்கெல்லாம் ராஜா
Engal Kulasekaran, எங்கள் குலசேகரன் - ப்ரபந்நரான நம்முடைய குலத்துக்குச் சிரோபூஷணமான குலசேகராழ்வார்
Endre kooru, என்றே கூறு - என்று இதையே நீ வாய்பிதற்ற வேணும்
0பெருமாள் திருமொழி - தனியன் || (ஆரம் கெடப்பரனன்பர்) 15
ஆரம் கெடப்பரனன்பர் கொள்ளாரென்று அவர்களுக்கே
வாரங் கொடு குடப்பாம்பில் கையிட்டவன் மாற்றலரை
வீரங் கெடுத்த செங்கோற் கொல்லி காவலன் வில்லவர் கோன்
சேரன் குலசேகரன் முடிவேந்தர் சிகாமணியே
Aaram keda, ஆரம் கெட - நவரத்தின மாலையொன்று கெட்டுப்போக (அதனை ஸ்ரீவைஷ்ணவர்கள் களவு செய்ததாகக் கள்ள மந்திரிகள் கூற)
Avargalukke vaaram kodu, அவர்களுக்கே வாரம் கொடு - அந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் விஷயத்திலே பக்ஷபாதம் பூண்டு
Paran enbar kollaar endru, பரன் என்பர் கொள்ளார் என்று - பாகவதர்களான ஸ்ரீவைஷ்ணவர்கள் களவு செய்யமாட்டார்கள் என்று சொல்லி
Kudappaambil kai ittavan, குடப்பாம்பில் கை இட்டவன் - பாம்புக்குடத்தில் கையிட்டருளியவர்
Maatralarai, மாற்றலரை - சத்துருக்களை
Veeram keduthu kelkol, வீரம் கெடுத்து கெல்கோல் - பரிபவப்படுத்திய செங்கோன்மையை உடையவரும்
Kolli kaavalan, கொல்லி காவலன் - கொல்லி என்கிற நகருக்கு நிர்வாஹகரும்
Villavar kon, வில்லவர் கோன் - தநுர்வித்யை பயின்றவர்களில் தலைவரும்
Seran, சேரன் - சேரதேசத்து அரசரும்
Mudi vendhar sigamani, முடி வேந்தர் சிகாமணி - முடியுடை மன்னர்களிற் சிறந்தவருமான
Kulasekaran, குலசேகரன் - குலசேகராழ்வாராவர்
647பெருமாள் திருமொழி || (இருள் இரிய) - இருள் இரிய திருவரங்கப் பெருமானை கண்டு என்றுகொல் மகிழ்வேன் எனல் 1
இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி
இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த
அரவரச பெரும் சோதி அனந்தன் என்னும்
அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி
திரு அரங்க பெரு நகருள் தெண்ணீர் பொன்னி
திரை கையால் அடி வருட பள்ளி கொள்ளும்
கருமணியை கோமளத்தை  கண்டு கொண்டு என்
கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே
திரு அரங்கம், Thiru Arangam - ஸ்ரீரங்கமென்கிற
பெரு நகருள், Peru Nagarul - பெரிய நகரத்திலே
இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும், Irul Iriya Sudar Manigal Imaikkum - இருளானது சிதறி யொழியும் படி ஒளி விடுகின்ற மணிகள் விளங்கா நிற்கப் பெற்ற
நெற்றி, Netri - நெற்றியையும்
இனம் துத்தி, Inam Thuthi - சிறந்த புள்ளியையும்
அணி, Ani - அழகாக உடைய–
ஆயிரம் பணங்கள் ஆர்ந்த, Aayiram Panangal Aarntha - ஆயிரம் படங்களை உடையவனாய்
அரவு அரசன், Aravu Arasan - நாகங்களுக்குத் தலைவனாய்
பெரு சோதி, Peru Sothi - மிக்க தேஜஸ்ஸை யுடையனான
அனந்தன் என்னும், Ananthan Ennum - திருவனந்தாழ்வானாகிற
அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை, Ani Vilangum Uyar Vellai Anaiyai - அழகு மிக்கு உயர்த்தியை யுடைய வெண்ணிறமான திருப் படுக்கையிலே
மேவி, Mevi - பொருந்தி
தெள் நீர் பொன்னி, Thel Neer Ponni - தெளிந்த தீர்த்தத்தையுடைய காவிரி யானது
திரை கையால் அடி வருட, Thirai Kaiyal Adi Varuda - அலைகளாகிற கைகளாலே திருவடிகளைப் பிடிக்க
பள்ளி கொள்ளும், Palli Kollum - திருக் கண் வளர்ந்தருளா நின்ற
கரு மணியை, Karum Maniyai - நீல மணி போன்றவராய்
கோமளத்தை, Komalathai - ளெஸகுமார்யமே வடிவெடுத்தவரான பெரிய பெருமாளை
என் கண் இணைகள், En Kan Inaihal - என் கண்களானவை
கண்டு கொண்டு, Kandu Kondo - ஸேவிக்கப் பெற்று
களிக்கும் நாள், Kalikkum Naal - ஆநந்தடையும் நாள்
என்று கொல், Endru Kol - எந்நாளோ!
இமைத்தல், Imaitthal - விழித்தல் அதாவது இங்கு, விளங்குதல்.
துத்தி, Thuthi - படத்தின் மேலுள்ள பொறி.
பொன்னி, Ponni - பொன்களைக் கொழிக்கையாலே காவிரிக்குப் பொன்னி யென்று பெயராயிற்று.
“பொன்னி திரைக் கையாலடி வருட” என்றது, Ponni Thiraik Kaiyaladi Varuda Endrathu - காவிரியின் அலைகள் இனிதாக மோதிக் குளிர்ச்சி பெற்றுள்ள
கோமளம், Komalam - வடசொல்,
648பெருமாள் திருமொழி || (இருள் இரிய) - இருள் இரிய திருவரங்கப் பெருமானை கண்டு என்றுகொல் மகிழ்வேன் எனல் 2
வாயோர் ஈர் ரைஞ்சூறு துதங்கள் ஆர்ந்த
வளை வுடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந்தீ
வீயாத மலர் சென்னி விதானமே போல்
மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன் கீழ்
காயாம்பூ மலர் பிறங்கல் அன்ன மாலைக்
கடி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
மாயோனை மணத் தூணே பற்றி நின்று என்
வாயார என்று கொலோ வாழ்த்தும் நாளே ?
கடி அரங்கத்து, Kadi Arangathu - நறு மணம் மிக்க கோயிலிலே
ஓர் ஈர் ஐ நூறு வாய், Oru Eer Ai Nooru Vaai - ஓராயிரம் வாய்களிலே
துதங்கள் ஆர்ந்த, Thuthangal Aarntha - ஸ்தோத்ர வாக்கியங்கள் நிறைந்திருக்கப் பெற்றவனாய்
வளை உடம்பின், Valai Udambin - வெளுத்த உடம்பை யுடையவனாய்
அழல், Azhala - (எதிரிக்ள வந்து கிட்ட வொண்ணாதபடி) அழலை உமிழா நிற்பவனான
நாகம், Naagam - ஆதி சேக்ஷன்
உமிழ்ந்த, Umizhndha - (தன் வாயினின்று) வெளிக் கக்கிய
செம் தீ, Sem Thee - செந் நிறமான ஆகநி ஜ்வாலையானது
சென்னி, Sennai - தலையின் மேலே
வீயாத மலர், Veeyadha Malar - அழிவில்லாத புஷ்பங்களாற் சமைத்த தொரு மேற் கட்டி போல
எங்கும் மேல் மேலும் பரந்து மிக, Engum Mel Maelum Parandhu Mika - மேற்புறமெங்கும் விஸ்தரித்து விளங்க
அதன் கீழ், Adhan Keel - (ஆதிசேக்ஷன் உமிழ்ந்த அக்நி ஜ்வாலையாகிற) அந்தப் புஷ்ப விதாநத்தின் கீழே)
அரவு அணையில், Aravu Anaigal - சேஷ சயநத்திலே
பள்ளி கொள்ளும், Palli Kollum - கண் வளர்ந்தருளா நிற்பவனும்
காயா பூ மலர் பிறங்கல் அன்ன, Kaayaa Poo Malar Pirangal Anna - காயாவின் அழகிய பூக்களாலே தொடுக்கப்பட்ட நீலமாலை போன்றவனாய்
மாலை, Maalai - பெருமை பொருந்தியவனாய்
மாயோனை, Maayoni - ஆச்சர்யனான ஸ்ரீரங்கநாதனை (அடியேன்)
மனம் தூண் பற்றி நின்று, Manam Thoon Patri Nindru - திருமணத் தூண்களிரண்டையும் அவலம்பாகப் பற்றிக்கொண்டு நின்று
என் வாய் ஆர வாழ்த்தும் நாள் என்று கொல், En Vaai Aara Vaazhthum Naal Endru Kol - என் வாய்த்தினவு தீர ஸ்துதி செய்யுங்காலம் என்றைக்கு வாய்க்குமோ?.
649பெருமாள் திருமொழி || (இருள் இரிய) - இருள் இரிய திருவரங்கப் பெருமானை கண்டு என்றுகொல் மகிழ்வேன் எனல் 3
எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும்
எடுத்தேத்தி ஈர் இரண்டு முகமும் கொண்டு
எம்மாடும் எழில் கண்கள் எட்டினோடும்
தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற செம்பொன்
அம்மான் தன் மலர் கமல கொப்பூழ் தோன்ற
அணி அரங்கத்து அர வணையில் பள்ளி கொள்ளும்
அம்மான் தன் அடி இணை கீழ் அலர்கள் இட்டு அங்கு
அடியவரோடு என்று கொலோ அணுகும் நாளே
எம் மாண்பின் அயன், Em Maanpin Ayan - ஸர்வ விதத்தாலுமுண்டான மாட்சிமையை யுடைய நான்முகன்
நான்கு நாவினாலும் (தனது), Naanthu Naavinaalum Thanadhu - நாலு நாக்கினாலும்
எடுத்து, Eduthu - சொற்களை யெடுத்து
ஏத்தி, Aethi - துதித்து
ஈர் இரண்டு முகமும் கொண்டு, Eer Irandu Mukhamum Kondu - நான்கு முகங்களாலும்
இனிது ஏத்தி, Inidhu Aethi - இனிமையாக (வேதங்களாலே) ஸ்தோத்திரம் பண்ணி
எழில் கண்கள் எட்டினோடும், Ezhil Kangal Ettinodum - அழகிய எட்டு கண்களினாலே
எம் மாடும், Em Maadum - எல்லாப் பக்கங்களிலும்
தொழுது இறைஞ்ச நின்ற, Thozhudhu Irajinja Nindra - நன்றாக ஸேவிக்கும்படி அமைந்த
செம் பொன், Sem Pon - செவ்விய பொன் போல் (விரும்பத்தக்க வடிவுடைய) ஸ்வாமியான தன்னுடைய
கமலம் மலர் கொப்பூழ், Kamalum Malar Koppuzh - தாமரைப் பூவை யுடைய திருநாபி யானது
தோன்ற, Thondra - விளங்கும்படி
அம்மான் தன், Ammaan Than - பெரிய பெருமாளுடைய
அடிஇணை கீழ், Adiinai Keel - திருவடிகளின் கீழே
அலர்கள் இட்டு, Alarkal Ittu - புஷ்பங்களை ஸமர்ப்பித்து
அங்கு அடியவரோடு, Angu Adiyavarodu - அங்குள்ள கைங்கர்ய பரர்களோடு கூட
அணுகும் நாள் என்று கொல், Anugum Naal Endru Kol - நெருங்கி வாழ்வது என்றைக்கோ?
எம் மாண்பின், Em Manpin - துதிப்பதற்கு உறுப்பான வாக்தேவியை எப்போதும் தன் வசமாகக் கைக் கொண்டிருக்கும்
650பெருமாள் திருமொழி || (இருள் இரிய) - இருள் இரிய திருவரங்கப் பெருமானை கண்டு என்றுகொல் மகிழ்வேன் எனல் 4
மாவினை வாய் பிளந்து உகந்த மாலை வேலை
வண்ணனை என் கண்ணனை வன் குன்றம் ஏந்தி
ஆவினை அன்று உய்ய கொண்ட ஆயர் ஏற்றை
அமரர்கள் தம் தலைவனை அம் தமிழ் இன்ப
பாவினை அவ் வடமொழியை பற்றற்றார்கள்
பயில் அரங்கத்து அரவு அணை பள்ளி கொள்ளும்
கோவினை நாவுற வழுத்தி என் தன் கைகள்
கொய்ம் மலர் தூ என்று கொலோ கூப்பும் நாளே
மாவினை வாய் பிளந்து உகந்த மாலை, Mavinai Vaai Pilandhu Ugantha Maalai - குதிரை வடிவங்கொண்டு வந்த கேசியினுடைய வாயைக் கிழித்து மகிழ்ந்த பெருமானாய்
வேலை வண்ணணை, Velai Vannana - கடல் போன்ற வடிவை யுடையவனாய்
என் கண்ணணை, En Kannana - என்னுடையவன்’ என்று அபிமானிக்கக் கூடிய (ஸூலபனான) க்ருஷ்ணனாய்’
அன்று, Anru - (இந்திரன் கல் மழை பெய்வித்த) அக் காலத்திலே
வன் குன்றம் ஏந்தி, Van Kuntram Aendhi - வலிய (கோவர்த்தன) மலையை (க்குடையாக)த் தூக்கி
ஆவினை உய்யக் கொண்ட, Aavinai Uyyaik Konda - பசுக்களைக் காப்பாற்றி யருளின
ஆயர் ஏற்றை, Aayar Aetrai - இடையர் தலைவனாய்
அமரர்கள் தம் தலைவனை, Amarar Tham Thalaivana - நித்யஸூரிகளுக்கு ஸ்வாமியாய்,
அம் தமிழ் இன்ப பாவினை, Am Tamil Inba Paavinai - அழகிய தமிழ்ப் பாஷையாலாகிய ஆநந்த மயமான அருளிச் செயல் போல் யோக்கியனாய்
அ வடமொழியை, A Vadamozhiyai - அழகிய ஸம்ஸ்க்ருத பாஷையாலாகிய ராமாயணாதிகள் போல் யோக்யனாய்
பற்று அற்றார்கள் பயில் அரங்கத்து, Patru Atrarhal Payil Arangathu - ஸம்ஸார பந்தம் அற்றவர்களான விரக்தர்கள் நித்திய வாஸம் செய்கிற கோயிலிலே
கோவினை, Kovinai - ஸ்வாமியான ஸ்ரீரங்கநாதனை
நா உற, Na Ur - நாக்குத் தடிக்கும்படி
வழுத்தி, Vazhuthi - துதித்து
என் தன் கைகள், En Than Kaigal - என்னுடைய கைகளானவை
கொய் மலர் தூய், Koyi Malar Thuy - (காலத்தில்) பறிக்கப்பட்ட புஷ்பங்களை பணிமாறி
கூப்பும் நாள் என்று கொல், Kooppum Naal Endru Kol - அஞ்ஜலி பண்ணும் நாள் எதுவோ!
651பெருமாள் திருமொழி || (இருள் இரிய) - இருள் இரிய திருவரங்கப் பெருமானை கண்டு என்றுகொல் மகிழ்வேன் எனல் 5
இணை இல்லா இன் இசை யாழ் கெழுமி இன்பத்
தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்த
துணை இல்லா தொன் மறை நூல் தோத்திரத்தால்
தொன் மலர் கண் அயன் வணங்கி யோவாது ஏத்த
மணி மாட மாளிகைகள் மல்கு செல்வ
மதிள் அரங்கத்து அர வணையில் பள்ளி கொள்ளும்
மணி வண்ணன் அம்மானை கண்டு கொண்டு என்
மலர் சென்னி என்று கொலோ வணங்கும் நாளே ?
இன்பம், Inbam - (வீணா கானத்தாலே) இன்பந்தருகின்ற
தும்புருவும், Thum Puruvum - தும்புரு மஹரிஷியும்
நாரதனும், Naarathanum - நாரத முனிவனும்
இணை இல்லா இன் இசை, Inai Illaa In Isai - ஒப்பற்றதும் போக்யமுமான இசையை
யாழ், Yaazh - வீணையிலே
கெழுமி, Kezhumi - நிறைத்து (வீணா கானத்தைப் பண்ணிக் கொண்டு)
இறைஞ்சி ஏத்த, Irainji Aetha - திருவடிகளிலே விழுந்து) வணங்கித் துதிக்கவும்
தொல் மலர்க் கண் அயன், Thol Malarkk Kan Ayan - நித்யமான நாபீ கமலத்தி லுதித்த நான்முகனானவன்
வணங்கி, Vanangi - நமஸ்கரித்து
துணை இல்லா, Thunai Illaa - ஒப்பு இல்லாததும்
தொல், Thol - அநாதியுமான
மறை நூல் தோத்திரத்தால், Marai Nool Thothiraththal - வேதசாஸ்த்ரங்களாகிற ஸ்தோத்ரங்களால்
ஓவாது ஏத்த, Ovaadhu Aetha - இடைவிடாமல் துதிக்கவும்
மணி மாடம் மாளிகைகள், Mani Maadam Maaligaihal - மணி மயமான மாட மாளிகைகளையும்
மல்கு செல்வம், Malku Selvam - பூர்ணமான ஸம்பத்தையும்
மதிள், Mathil - ஸப்த ப்ராகாரங்களையுமுடைய
அரங்கத்து, Arangaththu - கோயிலிலே
மணி வண்ணன் அம்மானை, Mani Vannan Ammanaik - நீல மணி போன்ற திருநிறத்தை யுடையனான எம்பெருமானை
கண்டு கொண்டு, Kandu Kondo - ஸேவித்து
என் மலர் சென்னி, En Malar Senni - என்னுடைய பூமாலை யணிந்த தலையானது
வணங்கும் நாள் என்று கொல், Vanangum Naal Endru Kol - (அவன் திருவடிகளில்) நமஸ்கரிப்பது என்றைக்கோ!
இன் இசை யாழ் கெழுமி, In Isai Yaazh Kezhumi - இனிய இசையையுடைத்தான வீணையை அப்யஸித்து என்றுமாம்
652பெருமாள் திருமொழி || (இருள் இரிய) - இருள் இரிய திருவரங்கப் பெருமானை கண்டு என்றுகொல் மகிழ்வேன் எனல் 6
அளி மலர் மேல் அயன் அரன் இந்திரனோடு ஏனை
அமரர்கள் தம் குழுவும் அரம்பையரும் மற்றும்
தெளி மதி சேர் முனிவர்கள் தம் குழுவும் முந்தி
திசை திசையில் மலர் தூவி சென்று சேரும்
களி மலர் சேர் பொழில் அரங்கத்து உரகம் ஏறி
கண் வளரும் கடல் வண்ணர் கமல கண்ணும்
ஒளி மதி சேர் திரு முகமும் கண்டு கொண்டு என்
உள்ளம் மிக என்று கொலோ வுருகும் நாளே
அளி மலர் மேல் அயன், Ali Malar Mel Ayan - (மதுபானத்துக்காக) வண்டுகள் படிந்திருக்கிற தாமரைப் பூவில் தோன்றிய பிரமனும் சிவனும்
அரன், Aran - சிவனும்
இந்திரனோடு ஏனை அமரர்கள் தம் குழுவும், Indiranodu Eanai Amarar Galum - இந்திரனோடு கூட மற்றைத் தேவர்களின் திரளும்
அரம்பையரும், Arampaiyarum - ரம்பை முதலிய தேவ மாதரும்
மற்றும், Mattrum - மற்றுமுள்ள
தெளி மதி சேர் முனிவர்கள் தம் குழுவும், Theli Mathi Ser Munivargal Tham Galum - தெளிந்த ஞானத்தை யுடைய (ஸநகாதி) மஹர்ஷிகளின் ஸமூஹமும்
உந்தி, Undhi - ஒருவர்க்கொருவர் நெருக்கித் தள்ளி
திசை திசையில், Thisai Thisaiyil - பார்த்த பார்த்தவிடமெங்கும்
மலர் தூவி, Malar Thuvi - புஷ்பங்களை இறைத்துக் கொண்டு
சென்று சேரும், Sendru Serum - வந்து சேர்தற்கு இடமான
களிமலர் சேர் பொழில் அரங்கத்து, Kalimalar Ser Pozhil Arangathu - தேன் மிக்க மலர்களை யுடைய சோலைகளை யுடைத்தான கோயிலிலே
உரகம் ஏறி, Uragam Eri - திருவனந்தாழ்வான் மீது பள்ளி கொண்டு
கண் வளரும், Kan Valarum - திருக்கண் வளர்ந்தருளா நின்ற
கடல் வண்ணர், Kadal Vannarar - கடல் போன்ற வடிவை யுடையரான பெரிய பெருமாளை யுடைய
கமலம் கண்ணும், Kamalam Kannum - செந்தாமரை போன்ற திருக் கண்களையும்
ஒளி மதி சேர் திரு முகமும், Oli Mathi Ser Thiru Mugamum - ஒளியை யுடைய சந்திரன் போன்ற திருமுக மண்டலத்தையும்
கண்டு கொண்டு, Kandu Kondo - ஸேவிக்கப் பெற்று
என் உள்ளம், En Ullam - என்னுடைய மனமானது
மிக உருகும் நாள் என்று கொல், Miga Urugum Naal Endru Kol - மிகவும் உருகுங்காலம் என்றைக்கோ?
653பெருமாள் திருமொழி || (இருள் இரிய) - இருள் இரிய திருவரங்கப் பெருமானை கண்டு என்றுகொல் மகிழ்வேன் எனல் 7
மறம் திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி
ஐம்புலன்கள் அடக்கி இடர் பார துன்பம்
துறந்து இரு முப் பொழுது ஏத்தி எல்லை இல்லா
தொன் நெறி கண் நிலை நின்ற தொண்டரான
அறம் திகழும்  மனத்தவர் தம் கதியை பொன்னி
அணி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
நிறம் திகழும் மாயோனை கண்டு என் கண்கள்
நீர் மல்க என்று கொலோ நிற்கும் நாளே ?
மறம் நிகழும் மனம் ஒழித்து, Maram Nigazhum Manam Ozhithu - கொடுமையால் விளங்கா நின்றுள்ள மனத்தை ஒழித்து
வஞ்சம் மாற்றி, Vanjam Maatri - வஞ்சனைகளைப் போக்கி
வல் புலன்கள் அடக்கி, Val Pulankal Adakki - கொடிய இந்திரியங்களை அடக்கி
இடர் பாரம் துன்பம் துறந்து, Idar Paaram Thunbam Thurandu - (மேன் மேலும்) துக்கத்தை விளைப்பனவாய்ப்
இரு முப்பொழுது ஏத்தி, Iru Muppozhudhu Aethi - பஞ்ச காலங்களிலும் துதித்து
எல்லை இல்லா தொல் நெறிக் கண் நிலை நின்ற, Ellai Illaa Thol Nerik Kan Nilai Nindra - அளவிறந்த பழைய மர்யாதையிலே நிலை நின்ற
தொண்டர் ஆன, Thondar Aana - தாஸ பூதர்களான
அறம் திகழும் மனத்தவர் தம், Aram Thigazhum Manaththavar Tham - தர்ம சிந்தையே விளங்கும் மனமுடையரான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு
கதியை, Kathiyai - பரம ப்ராப்யனாய்
பொன்னி அணி அரங்கத்து, Ponni Ani Arangathu - காவிரியால் அழகு பெற்ற கோயிலிலே
நிறம் திகழும், Niram Thigazhum - அழகு விளங்கா நின்றுள்ள
மாயோனை, Maayoni - ஆச்சரியனான எம்பெருமானை
என் கண்கள், En Kangal - எனது கண்களானவை
கண்டு, Kandu - ஸேவிக்கப் பெற்று
நீர் மல்க நிற்கும் நாள் என்று கொல், Neer Malku Nirkum Naal Endru Kol - ஆநந்தக் கண்ணீர் ததும்பும்படி நிற்பது என்றைக்கோ?
மறம், Maram - கொலை, கோபம், கொடுமை.
இடர்ப் பாரத் துன்பம் துறந்து, Idarp Paarath Thunbam Thurandu - “பாரமாய பழவினை பற்றறுத்து” என்கை.
654பெருமாள் திருமொழி || (இருள் இரிய) - இருள் இரிய திருவரங்கப் பெருமானை கண்டு என்றுகொல் மகிழ்வேன் எனல் 8
கோலார்ந்த நெடும் சார்ங்கம் கூன் நல் சங்கம்
கொலை ஆழி கொடும் தண்டு கொற்ற ஒள் வாள்
காலார்ந்த கதி கருடன் என்னும் வென்றி
கடும் பறவை இவை அனைத்தும் புறம் சூழ் காப்ப
சேலார்ந்த நெடும் கழனி சோலை சூழ்ந்த
திரு வரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
மாலோனை கண்டு இன்ப கலவி எய்தி
வல் வினையேன் என்று கொலோ வாழும் நாளே ?
கோல் ஆர்ந்த, Kol Aarntha - அம்புகளோடு கூடிய
நெடு சார்ங்கம், Nedu Sargangam - பெரியதான ஸ்ரீ சார்ங்க மென்னும் வில்லும்
கூன் நல் சங்கம், Koon Nal Sangam - வளைந்து விலக்ஷணமான ஸ்ரீ பாஞ்சஜந்யமென்னும சங்கமும்
கொலை ஆழி, Kolai Aazhi - (எதிரிகளைக்) கொலை செய்ய வல்ல ஸூதர்சநமும்
கொடும் தண்டு, Kodum Thandu - (பகைவர்களுக்குக்) கொடுந்தொழில் புரிகின்ற கௌமோதகி யென்னும் கதையும்
கொற்றம் ஒள் வாள், Kotrham Ol Vaal - வெற்றி பெற்று ஒளி மிக்க நந்தகமென்னும் வாளும்
கால் ஆர்ந்த கடும் கதி, Kaal Aarntha Kadum Kathi - வாயு வேகம் போன்ற மிகவும் விரைந்த நடையை யுடைய
கருடன் என்னும், Karudan Ennum - பெரிய திருவடி யென்னும் பேரை யுடைய
வென்றி பறவை இவை அனைத்தும், Ventrip Paravai Ivai Anaithum - ஐய சீலமான பக்ஷிராஜனும் (ஆகிய) இவை யெல்லாம்
புறம் சூழ் காப்ப, Puram Soozh Kaappa - நாற் புறமும் சூழ்ந்து கொண்டு ரக்ஷையிட
சேல் ஆர்ந்த நெடு கழனி, Seyl Aarntha Nedu Kazhani - (நீர் வளத்தால்) மீன்கள் நிரம்பிய விசாலமான
சோலை சூழ்ந்த, Solai Soozhntha - சோலைகளாலும் சூழப்பட்ட
மாலோனை, Maalonai - ஸர்வாதிகனான எம்பெருமானை
வல் வினையேன், Val Vinaiyen - மஹா பாபியான அடியேன்
கண்டு, Kandu - ஸேவிக்கப் பெற்று
இன்பம் கல்வி எய்தி, Inbam Kalvi Eydhi - ஆநந்த மயமான ஸம்ச்லேஷத்தையும் பெற்று
வாழும் நாள் என்று கொல், Vaalum Naal Endru Kol - வாழ்வது என்றைக்கோ?
655பெருமாள் திருமொழி || (இருள் இரிய) - இருள் இரிய திருவரங்கப் பெருமானை கண்டு என்றுகொல் மகிழ்வேன் எனல் 9
தூராத மனக் காதல் தொண்டர் தங்கள்
குழாம் குழுமி திரு புகழ்கள் பலவும் பாடி
ஆராத மனக் களிப்போடு அழுத கண்ணீர்
மழை சோர நினைந்து உருகி ஏத்தி நாளும்
சீர் ஆர்ந்த முழ வோசை பரவை காட்டும்
திரு வரங்கத்து  அரவணையில் பள்ளி கொள்ளும்
போராழி அம்மானை கண்டு துள்ளி
பூதலத்தில் என்று கொலோ புரளும் நாளே?
தூராத காதல் மனம், Thooradha Kaadhal Manam - ஒரு நாளும் த்ருப்தி பெறாத ஆசை கொண்ட மனத்தை யுடையவரான
தொண்டர் தங்கள் குழாம், Thondar Thangal Kuzhaam - ஸ்ரீ வைஷ்ணவர்களின் கோஷ்டியிலே
குழுமி, Kuzhumi - கூடி
திரு புகழ்கள் பலவும் பாடி, Thiru Pugazhgal Palavum Paadi - (எம்பெருமானது) கீர்த்திகளெல்லாவற்றையும் (வாயாரப்) பாடி
ஆராத மனம் களிப்போடு, Aaraadha Manam Kalipodu - (அவ்வளவிலும்) த்ருப்தி பெறாத மநஸ்ஸிலுள்ள ஆனந்தத்தோடே
அழுத கண் நீர், Azhudha Kan Neer - அழுத கண்களிலுண்டான நீர்த் துளிகள்
மழை சோர, Mazhai Soora - மழை போல் பெருகி வர
நினைந்து உருகி ஏந்தி, Ninaindhu Urugi Aendhi - (எம்பெருமானை) நினைத்து (அத்தாலே) மனமுருகி ஸ்தோத்திரம் பண்ணி,
நாளும், Naalum - எப்போதும்
சீர் ஆர்ந்த முழவு ஓசை, Seer Aarntha Muzhavu Oosai - நல்ல வாத்யங்களின் கோஷமானது
பரவை காட்டும், Paravai Kaatum - கடலோசை போல் முழங்கப் பெற்ற
போர் ஆழி, Por Aazhi - (பகைவரோடு) யுத்தஞ்செய்வதையே தொழிலாக வுடைய
அம்மானை, Ammanai - எம்பெருமானை
கண்டு, Kandu - ஸேவிக்கப் பெற்று
துள்ளி, Thulli - ஆநந்தத்துக்குப் போக்கு வீடாகத்) தலை கால் தெரியாமல் கூத்தாடி
பூதலத்திலே, Poothalaththile - பூமியிலே
புரளும் நாள் என்று கொல், Purallum Naal Endru Kol - (உடம்பு தெரியாமல்) புரள்வது என்றைக்கோ!.
பரவை, Paravai - கடல் பரவியது: ஐ-கருத்தாய்ப் பொருள் விகுதி.
656பெருமாள் திருமொழி || (இருள் இரிய) - இருள் இரிய திருவரங்கப் பெருமானை கண்டு என்றுகொல் மகிழ்வேன் எனல் 10
வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய
மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய
துன்பம் மிகு துயர் அகல அயர் ஒன்றில்லா
சுகம் வளர அக மகிழும் தொண்டர் வாழ
அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும்
அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள்
இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும்
இசைந்த உடனே என்று கொலோ விருக்கும் நாளே ?
வன், Van - (நைமித்திக ப்ரளயத்தில்) அழியாதிருக்கக் கடவதும
பெரு, Peru - பெருமை தங்கியதுமான
வானகம், Vaanagam - ஸ்வர்க்கம் முதலிய மேலுலகங்கள்
உய்ய, Uyya - உஜ்ஜீவிக்கவும்
அமரர், Amarar - தேவர்கள்
உய்ய, Uyya - உஜ்ஜீவிக்கவும்
மண் உய்ய, Man Uyya - பூலோகம் உஜ்ஜீவிக்கவும்
மண் உலகில் மனிசர் உய்ய, Man Ulagil Manisar Uyya - பூலோகத்திலுள்ள மனிதர்களெல்லாம் உஜ்ஜீவிக்கவும்
மிகு துன்பம் துயர் அகல, Migu Thunbam Thuyar Akala - மிக்க துக்கத்தை விளைப்பதான பாவங்கள் நீங்கவும்
அயர்வு ஒன்று இல்லா சுகம் வளர, Ayirvu Ondru Illa Sugam Valara - துக்கம் கலசாத சுகம் வளரவும்
அகம் மகிழும், Aham Makizhum - (எப்போதும்) மனதில் ஆனந்தத்தை யுடையரான
தொண்டர், Thondar - ஸ்ரீவைஷ்ணவர்கள்
வாழ, Vazha - உஜ்ஜீவிக்கவும்
அன்போடு, Anbodu - திருவுள்ளத்தில் உகப்போடு
தென் திசை நோக்கி, Then Thisai Nookki - தெற்குத் திக்குக்கு அபிமுகமாக
பள்ளி கொள்ளும், Palli Kollum - பள்ளி கொண்டிரா நின்ற
அணி அரங்கன், Ani Arangan - ஸ்ரீரங்கநாதனுடைய
திரு முற்றத்து, Thiru Muttirathu - ஸந்நிதியுள் திரு முற்றத்திலே
அடியார் தங்கள், Adiyar Thangal - ஸ்ரீவைஷ்ணவர்களுடைய
இன்பம் மிகு பெரு குழுவு கண்டு, Inbam Migu Peru Kuzhuvu Kandu - ஆநந்தம் நிரம்பிய பெரிய கோஷ்டியை சேவித்து
யானும், Yaanum - அடியேனும்
இசைந்து, Isainthu - (அவர்களுள் ஒருவனாக) மனம் பொருந்தி
உடனே, Uthane - அவர்களோடு கூட
இருக்கும் நாள் என்று கொல், Irukkum Naal Endru Kol - வாழ்ந்திருக்குங்காலம் எப்போது (வாய்க்குமோ?).
657பெருமாள் திருமொழி || (இருள் இரிய) - இருள் இரிய திருவரங்கப் பெருமானை கண்டு என்றுகொல் மகிழ்வேன் எனல் 11
திடர் விளங்கு கரை பொன்னி நடுவு பாட்டு
திரு வரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்
கடல் விளங்கு கரு மேனி அம்மான் தன்னை
கண்ணார கண்டு உகக்கும் காதல் தன்னால்
குடை விளங்கு விறல் தானை கொற்ற ஒள் வாள்
கூடலர் கோன் கொடை குலசேகரன் சொல் செய்த
நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே
திடர் விளங்கு கரை, Thidar Vilangu Karai - மணற்குன்றுகள் விளங்கா நின்ற கரையை யுடைத்தான
பொன்னி நடுவு பாடு, Ponni Nadivu Paadu - காவிரியின் நடுவிடத்து
கடல் விளங்கு, Kadal Vilangu - கடல் போல் விளங்குகின்ற
கரு மேனி, Karum Meeni - கரிய திருமேனியை யுடைய
அம்மான் தன்னை, Amman Thannai - பெரிய பெருமாளை
கண் ஆர கண்டு உகக்கும் காதல் தன்னால், Kan Aara Kandu Ugakkum Kaadhal Thannal - கண்கள் த்ருப்தி யடையும்படி
குடை விளங்கு, Kudai Vilangu - (அரசாட்சிக்கு ஏற்ப) வெண் கொற்றக் குடையுடன் விளங்கா நிற்பவரும்
விறல் தானை, Viral Thaanai - பராக்கிரமம் மிக்க ஸேஸனைகளை யுடையவரும்
கொற்றம் ஒள் வாள், Kotrham Ol Vaal - வெற்றியும் ஒளியும் பொருந்திய வாளை யுடையவரும்
கூடலர் கோன், Koodalar Kon - மதுரையிலுள்ளவர்களுக்குத் தலைவரும்
கொடை, Kodai - ஔதார்யத்தையே இயற்கையாக வுடையவருமான
குலசேகரன், Kulashekaran - குலசேகரப் பெருமாள்
சொற்செய்த, Sorzseitha - அருளிச் செய்த
நடை விளங்கு, Nadai Vilangu - தமிழ் நடையானது நன்கு விளங்கா நின்ற
தமிழ் மாலை பத்தும், Tamizh Maalai Paththum - தமிழ்ப் பிரபந்தரூபமான இப் பத்துப் பாசரங்களையும்;
வல்லார், Vallaar - ஓத வல்லார்கள்
நலம் திகழ் நாரணன், Nalam Thigazh Naaranan - கல்யாண குண சாலியான ஸ்ரீமந் நாராயணனுடைய
அடி கீழ் நண்ணுவார், Adi Keezh Nannuvaaar - திருவடிகளில் சேரப் பெறுவர்.
658பெருமாள் திருமொழி || (தேட்டரும் திறல்) - அரங்கன் அடியாரது அடிமைத்திறத்தில் ஈடுபடுதல் 1
தேட்டரும் திறல் தேனினை தென் அரங்கனை திரு மாது வாழ்
வாட்டமில் வனமாலை மார்வனை வாழ்த்தி மால் கொள் சிந்தையராய்
ஆட்ட மேவி அலர்ந்து அழைத்து அயர்வு எய்தும் மெய் அடியார்கள் தம்
ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண் பயன் ஆவதே
தேட்டரும், Thettarum - (தன் முயற்சியால்) தேடிப் பெறுதற்கு அருமை யானவனும்
திறல், Thiral - (தன்னை முற்ற அநுபவிப்பதற்கு உறுப்பான) வலிவைக் கொடுப்பவனும்
தேனினை, Theninai - தேன் போல் பரம போக்யனும்
தென் அரங்கனை, Then Aranganai - தென் திருவரங்கத்தில் வாழ்பவனும்
திரு மாது வாழ் வாட்டம் இல் வன மாலை மார்பனை, Thiru Maathu Vaal Vaatam Il Vana Maalai Maarpanai - பெரிய பிராட்டியார் நித்ய வாஸம் செய்தற்கிடமாய்
மால் கொள் சிந்தையர் ஆய், Maal Kol Sinthaiyar Aayi - (அவன் திறத்தில்) மோஹங்கொண்ட மனதை யுடையராய்
ஆட்டம் மேவி, Aattam Mevi - (அந்த மோஹத்தாலே நின்ற விடத்தில் நிற்க மாட்டாமல்) ஆடுவதிலே ஒருப்பட்டு
அலர்ந்து அழைத்து, Alarnthu Azhaithu - (பகவந்நாமங்களை) வாய் விட்டுக் கதறி கூப்பிட்டு
அயர்வு எய்தும், Ayirvu Eydhum - இளைப்படைகின்ற
மெய் அடியார்கள் தம், Mei Adiyaargal Tham - உண்மையான அன்புடைய பாகவதர்களின்
ஈட்டம், Eettam - கோஷ்டியை
கண்டிட கூடும் ஏல், Kandida Koodum Ael - ஸேவிக்கப் பெறுவோமாகில்
அது காணும் கண் பயன் ஆவது, Adhu Kaanum Kan Payan Aavathu - கண் படைத்ததற்குப் பயன் அதுவே யன்றோ!
‘ஸ்ரீ ய:பதியே!, Sri Ya Padhiye - ஸ்ரீ மந்நாராயணனே!’ என்றிப்படி பல திரு நாமங்களைக் கூறி யழைத்து,
மேவி = மேவுதல், Mevi Mevuthal - விரும்புதல்:
“கண்டிடக் கூடு மேல்” என்றது, Kandidak Koodu Mel Endrathu - இத்தகைய மெய்யடியார்களை இந் நிலவுலகத்தில்
659பெருமாள் திருமொழி || (தேட்டரும் திறல்) - அரங்கன் அடியாரது அடிமைத்திறத்தில் ஈடுபடுதல் 2
தோடுலா மலர் மங்கை தோள் இணை தோய்ந்ததும் சுடர் வாளியால்
நீடு மா மரம் செற்றதும் நிரை மேய்த்ததும் இவையே நினைந்து
ஆடி பாடி அரங்காவோ! என்று அழைக்கும் தொண்டர் அடி பொடி
ஆட நாம் பெறில் கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை என்னாவதே ?
தோடு உலாம் மலர் மங்கை, Thodu Ulam Malar Mangai - இதழ்கள் மிக்கிருந்துள்ள தாமரைப் பூவிற் பிறந்த பிராட்டியினது
தோள் இணை தோய்ந்ததும், Thol Inai Thoyndhadum - திருத் தோள்களோடு அணைய வமுக்கிக் கட்டிக் கொண்டதும்
சுடர் வாளியால், Sudar Valiyal - புகரை யுடைய அம்பினால்
நீடு மா மரம் செற்றதும், Needu Maa Maram Settradhum - நீண்ட ஸப்த ஸால வருக்ஷங்களைத் துளை செய்து தள்ளியதும்
நிரை மேய்த்ததும், Nirai Meyththadhum - இப்படிப் பட்ட பகவச் சரிதங்களையே அநுஸந்தித்து
ஆடி, Aadi - சரீர விகாரம் பெற்று
பாடி, Paadi - (காதலுக்குப் போக்கு வீடாக வாய் விட்டுப்) பாடி
ஓ! அரங்க!! என்று, O Arang Endru - ‘ஓ அரங்கனே!’ என்று (அவன் திரு நாமங்களைச் சொல்லி
அழைக்கும், Azaikkum - கூப்பிடுகிற
தொண்டர், Thondar - கைங்கரியத்தையே நிரூபகமாக வுடைய பாகவதர்களின்
அடி பொடி, Adi Podi - திருவடித் தூள்களிலே
நாம் ஆட பெறில், Naam Aada Peril - நாம் அவகாஹிக்கப் பெற்றால் (பிறகு)
கங்கை நீர், Gangai Neer - கங்கா ஜலத்திலே
குடைந்து ஆடும் வேட்கை, Kudaindhu Aadum Vetkai - அவகாஹித்து நீராட வேணுமென்கிற ஆசையானது
என் ஆவது, En Aavathu - ஏதுக்கு?
660பெருமாள் திருமொழி || (தேட்டரும் திறல்) - அரங்கன் அடியாரது அடிமைத்திறத்தில் ஈடுபடுதல் 3
ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன்னி ராமனாய்
மாறு அடர்ததும் மண் அளந்ததும் சொல்லி பாடி வண் பொன்னி பேர்
ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோவில் திரு முற்றம்
சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே
ஏறு அடர்த்ததும், Eru Adarththadhum - (நப்பின்னைக்காக) ஏழு ரிஷபங்களை வலியடக்கியதும்
ஏனம் ஆய் நிலம் கிண்டதும், Enam Aayi Nilam Kintadhum - வராஹ ரூபியாய் பூமியைக் கோட்டாற் குத்தி யெடுத்ததும்
முன் இராமன் ஆய், Mun Iraman Aayi - முன்பு சக்ரவர்த்தி திருமகனாய்ப் பிறந்து
மாறு அடர்த்ததும், Maru Adarththadhum - சத்ரு ராக்ஷஸர்களைக் கிழங்கெடுத்ததும்
மண் அளந்ததும், Man Alandhadum - (த்ரிவிக்ரமனாய்) உலகளந்ததும் (ஆகிய இந்த சரிதங்களை)
சொல்லி பாடி, Solli Paadi - வாயாற் சொல்லி வாய் விட்டுப் பாடி
வண் பேர் பொன்னி ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு, Van Peer Ponni Aaru Pol Varum Kanna Neer Kondu - ஔதார்யத்தையும் பெருமையை யுடைய
அரங்கன் கோயில் திரு முற்றம், Arangan Koyil Thiru Muttram - நம் பெருமாள் ஸந்நதி உள் திரு முற்றத்தை
சேறு செய் தொண்டர், Seru Sei Thondar - சேறாக்குகிற பாகவதர்களின்
சே அடி செழு சேறு, Sae Adi Sezhu Seru - திருவடிகளால் துகை யுண்ட அழகிய சேற்றை
என் சென்னிக்கு அணிவன், En Chennikku Anivan - என்னுடைய நெற்றிக்கு திலகமாகக் கொள்வேன்
கண்ண நீர், Kanna Neer - ஆறாம் வேற்றுமை யுருபு
661பெருமாள் திருமொழி || (தேட்டரும் திறல்) - அரங்கன் அடியாரது அடிமைத்திறத்தில் ஈடுபடுதல் 4
தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பால் உடன் உண்டலும் உடன்று ஆய்ச்சி கண்டு
ஆர்த்த தோள் உடை எம்பிரான் என் அரங்கனுக்கு அடியார்களாய்
நா தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்ப தொழுது
ஏத்தி இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே
தோய்த்த தண் தயிர், Thoyththa Than Thayir - தோய்த்த தண் தயிர்
வெண்ணெய், Vennai - வெண்ணையையும்
பால், Paal - பாலையும்
உடன் உண்டலும், Udan Undalum - ஒரே காலத்திலே அமுது செய்தவளவில்
ஆய்ச்சி, Aaychi - யசோதைப் பிராட்டி யானவள்
கண்டு உடன்று, Kandu Udandru - (அந்த களவு தன்னைப்) பார்த்து கோபித்து
ஆர்த்த, Aartha - (பிறகு அவளாலே) பிடித்துக் கட்டப்பட்ட
தோள் உடை, Thol Udai - தோள்களை யுடைய
எம்பிரான், Embiraan - எமக்குத் தலைவனான
என் அரங்கனுக்கு, En Aranganukku - என் ரங்கநாதனுக்கு
அடியார்கள் ஆய், Adiyargal Aay - ஆட்பட்டவர்களாய்
நா தழும்ப எழ, Na Thazhumba Ezh - நாக்குத் தடிக்கும்படி
நாரணா என்று அழைத்து, Naaranaa Endru Azhaitthu - நாராயணா! என்று கூப்பிட்டு
மெய் தழும்ப தொழுது, Mei Thazhumba Thozhudhu - சரீரம் காய்ப்பேறும்படி ஸேவித்து
ஏத்தி, Aethi - தோத்திரம் பண்ணி
இன்புறும், Inpurum - ஆனந்தமடைகின்ற
தொண்டர், Thondar - ஸ்ரீவைஷ்ணவர்களுடைய
சே அடி, Sae Adi - திருவடிகளை
என் நெஞ்சம், En Nenjam - என் மனமானது
ஏத்தி வாழ்த்தும், Aethi Vaazththum - துதித்து (அவர்களுக்கே) பல்லாண்டு பாடும்
“கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெ யுண்ட வாயன், Kondal Vannanaik Kovalanaai Venne Yundha Vaayan - அணியரங்கன்” என்றபடி
662பெருமாள் திருமொழி || (தேட்டரும் திறல்) - அரங்கன் அடியாரது அடிமைத்திறத்தில் ஈடுபடுதல் 5
பொய் சிலை குரல் ஏறு எருத்தம் இறுத்து போர் அரவீர்த்த கோன்
செய் சிலை சுடர் சூழ் ஒளி திண்ண மா மதிள் தென் அரங்கனாம்
மெய் சிலை கரு மேகம் ஓன்று தம் நெஞ்சில் நின்று திகழ போய்
மெய் சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து என் மனம் மெய் சிலிர்க்குமே
பொய், Poi - க்ருத்ரிமமாய்
சிலை குரல், Silai Kural - கோபத்தை வெளியிடுகின்ற கோஷத்தை யுடைத்தான
ஏறு, Aeru - (ஏழு) ரிஷபங்களின்
எருத்தம் இறுத்து, Eruththam Iruththu - முசுப்புகளை முறித்தவனாய்
போர் அரவு ஈர்த்த கோன், Poar Aravu Eerththa Kon - போர் செய்யவந்த காளிய நாகத்தை நிரஸித்த ஸ்வாமியாய்,
சிலை செய், Silai Sei - கல்லினால் செய்யப்பட்டு
சுடர் ஒளி, Sudar Oli - மிக்க தேஜஸ்ஸை யுடைத்தாய்
திண்ணம், Thinnam - த்ருடமாயிருக்குந் தன்மையையும் உடைத்தாய்
மா, Maa - பெரிதான
மதிள் சூழ், Madhil Soozh - மதிகளாலே சூழப்பட்ட
தென் அரங்கன் ஆம், Then Arangan Aam - தென்னரங்கத்தில் எழுந்தருளி யிருப்பவனான ரங்கநாதனாகிய
மெய் சிலை கரு மேகம் ஒன்று, Mei Silai Karu Megam Ondru - சரீரத்தில் வில்லோடு கூடிய ஒரு காள மேகமானது
தன் நெஞ்சுள் நின்று திகழப் போய், Than Nenjul Nindru Thigazhapp Poi - தங்கள் மனதில் நிலைத்து விளங்கப் பெற்ற
மெய் சிலிர்ப்பவர் தம்மையே, Mei Silirppavar Thammaiye - மயிர்க் கூச் செறியும் சரீரமுடைய ஸ்ரீவைஷ்ணவர்களையே
என் மனம் நினைந்து, En Manam Ninainthu - என் நெஞ்சானது அநுஸந்தித்து
மெய் சிலிர்க்கும், Mei Silirkkum - மயிர்க் கூச்செறியப் பெற்றது.
“திகழப்போய்” என்ற விடத்து, போய், Thigazhappoy Endra Vidathu Poi - வார்த்தைப்பாடு.
“மனம் மெய் சிலிர்க்கும்” என்றது, Manam Mei Silirkkum Endrathu - மனம் விகாரப்படா நின்ற தென்றபடி.
663பெருமாள் திருமொழி || (தேட்டரும் திறல்) - அரங்கன் அடியாரது அடிமைத்திறத்தில் ஈடுபடுதல் 6
ஆதி அந்தம் அநந்தம் அற்புதம் ஆன வானவர் தம்பிரான்
பாத மா மலர் சூடும் பத்தி இலாத பாவிகள் உய்ந்திட
தீதில் நல் நெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே
காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சமே
ஆதி, Aadhi - ஜகத் காரண பூதனாய்
அந்தம், Andham - ப்ரளய காலத்திலும் வாழ்பவனாய்
அநந்தம், Anandham - ஸர்வ வ்யாபியாய்
அற்புதம் ஆன, Arputham Aana - ஆச்சரிய பூதனாய்
வானவர் தம்பிரான், Vaanavar Thambiraan - அமரர்க்கதிபதியான ரங்கநாதனுடைய
மா மலர் பாதம், Maa Malar Paatham - சிறந்த மலர் போன்ற திருவடிகளை
சூடும் பத்தி இலாத, Soodum Paththi Ilaadha - சிரஸா வஹிப்பதற் குறுப்பான அன்பு இல்லாத
பாவிகள் உய்ந்திட, Paavigal Uyndhida - பாபிகளும் உஜ்ஜீவிக்கும்படி
எங்கும் திரிந்து, Engum Thirinthu - ஸர்வ தேசங்களிலும் ஸஞ்சாரஞ் செய்து
தீது இல், Theethu Il - குற்றமற்ற
நல் நெறி, Nal Nerii - நல் வழிகளை
காட்டி, Kaatti - (தமது அநுஷ்டாநமுகத்தாலே) வெளிப்படுத்திக் கொண்டு
எம்மான், Emmaan - நமக்குத் தலைவனான
அரங்கனுக்கே, Aranganukke - ஸ்ரீரங்கநாதனுக்கே
காதல் செய், Kaadhal Sei - பக்தி பூண்டிருக்கின்ற
தொண்டர்க்கு, Thondarkku - பாகவதர்கள் விஷயத்தில்
என் நெஞ்சம், En Nenjam - எனது மனமானது
எப் பிறப்பிலும், Ep Pirappilum - எந்த ஜன்மத்திலும்
காதல் செய்யும், Kaadhal Seyyum - அன்பு பூண்டிருக்கும்.
664பெருமாள் திருமொழி || (தேட்டரும் திறல்) - அரங்கன் அடியாரது அடிமைத்திறத்தில் ஈடுபடுதல் 7
கார் இனம் புரை மேனி நல் கதிர் முத்த வெண்ணகை செய்ய வாய்
ஆர மார்வன் அரங்கன் என்னும் அரும் பெரும் சுடர் ஒன்றினை
சேரும் நெஞ்சினராகி சேர்ந்து கசிந்து இழிந்த கண்ண நீர்களால்
வார நிற்ப்பவர் தாள் இணைக்கு ஒருவாரம் ஆகும் என் நெஞ்சமே
கார் இனம் புரை, Kaar Inam Purai - மேகங்களின் திரளை ஒத்த
மேனி, Meeni - திருமேனியையும்
நல் கதிர், Nal Kadhir - அழகிய லாவண்யத்தையும்
முத்தம் வெண் நகை செய்ய வாய், Muththam Ven Nagai Seyya Vaai - முத்துக்கள் போல் வெளுத்த புன் சிரிப்பை யுடைய சிவந்த திருப் பவளத்தையும்
ஆரம் மார்வன், Aaram Maarvan - முக்தாஹாரமணிந்த மார்வையுமுடையனான
அரங்கன் என்னும், Arangan Ennum - ஸ்ரீரங்கநாதனாகிற
அரும் பெரும் சுடர் ஒன்றினை, Arum Perum Sudar Ondrinai - அருமை பெருமை யுள்ள விலக்ஷணமான தொரு தேஜஸ்ஸை
சேரும் நெஞ்சினர் ஆகி, Serum Nenjinir Aagi - கிட்டி அநுபவிக்க வேணுமென்கிற சிந்தையை யுடையவராய்
சேர்ந்து, Serndhu - (அங்ஙனமே) சேர்ந்து
கசிந்து இழிந்த, Kasinthu Izhindha - (பக்தி பாரவச்யத்தாலே) சுரந்து பெருகின
கண் நீர்கள், Kan Neergal - ஆநந்த பாஷ்பங்கள்
வார நிற்பவர், Vaara Nirpavar - வெள்ளமிட்டொழுகும்படி நிற்குமவர்களுடைய
தாள் இணைக்கு, Thaal Innaikku - இரண்டு திருவடிகள் விஷயத்தில்
என் நெஞ்சம், En Nenjam - என் மனமானது
ஒரு வாரம் ஆகும், Oru Vaaram Aakum - ஒப்பற்ற அன்பையுடையதாகும்.
665பெருமாள் திருமொழி || (தேட்டரும் திறல்) - அரங்கன் அடியாரது அடிமைத்திறத்தில் ஈடுபடுதல் 8
மாலை யுற்ற கடல் கிடந்தவன் வண்டு கிண்டு நறும் துழாய்
மாலை யுற்ற வரை பெரும் திரு மார்வனை மலர் கண்ணனை
மாலை உற்றுஎழுந்து ஆடி பாடி திரிந்து அரங்கன் எம்மானுக்கே
மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை யுற்றது என் நெஞ்சமே
மாலை உற்ற கடல், Maalaik Kutral Kadal - (தன் திருமேனி ஸ்பர்சத்தாலே) அலை யெறிகிற திருப்பாற்கடலில்
கிடந்தவன், Kidandhavan - பள்ளிகொள்பவனும்
வண்டு கிண்டு நறு துழாய் மாலை உற்ற, Vandu Kintu Naru Thuzhai Maalaik Kutral - (தேனுக்காக) வண்டுகள் குடையா நின்றுள்ள திருத்துழாய் மாலையை அணிந்த
வரை பெரு திருமார்பினை, Varai Peru Thirumaarpinai - மலைபோற் பெருமை தங்கிய திருமார்பை யுடையவனும்
மலர் கண்ணனை, Malar Kannanai - செந்தாமரை மலர் போன்ற திருக் கண்களை யுடையவனுமான ஸ்ரீரங்கநாதன் விஷயத்தில்
மாலை உற்று, Maalaik Utrru - வ்யாமோஹத்தை அடைந்து
எழுந்து ஆடி, Ezhunthu Aadi - (இருந்தவிடத்திலிராமல்) எழுந்து கூத்தாடி
பாடி, Paadi - (வாயாரப்) பாடி
திரிந்து, Thirinthu - (திவ்ய தேசங்கள் தோறும்) ஸஞ்சரித்து
அரங்கன் எம்மானுக்கே, Arangan Emmaanukke - எமக்கு ஸ்வாமியான ஸ்ரீரங்கநாதன் விஷயத்திலே
மாலை உற்றிடும், Maalaik Utrridum - பித்தேறித் திரிகின்ற
தொண்டர், Thondar - ஸ்ரீவைஷ்ணவர்களுடைய
வாழ்வுக்கு, Vazhvvukku - ஸ்ரீவைஷ்ணவ லஷ்மிக்கு
என் நெஞ்சம் மாலை உற்றது, En Nenjam Maalaik Utrrathu - என் மனம் மயங்கிக் கிடக்கின்றது.
மற்ற மூன்றடிகளிலுள்ள மாலை, Mattram Moondradigalilulla Maalai - மோஹம் என்னும் பொருளதான் மால் என்னுஞ் சொல்
666பெருமாள் திருமொழி || (தேட்டரும் திறல்) - அரங்கன் அடியாரது அடிமைத்திறத்தில் ஈடுபடுதல் 9
மொய்த்து கண் பனி சோர மெய்கள் சிலிர்ப்ப ஏங்கி இளைத்து நின்று
எய்த்து கும்பிடு நட்டம் இட்டு எழுந்து ஆடி பாடி இறைஞ்சி என்
அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடியார்களாகி அவனுக்கே
பித்தமராம் அவர் பித்தர் அல்லர்கள் மற்றையார் முற்றும் பித்தரே
கண் பனி, Kan Pani - ஆநந்த பாஷ்பமானது
மொய்த்து சோர, Moytthu Soora - இடைவிடாமல் சொரியவும்
மெய்கள் சிலிர்ப்ப, Meigal Silirppa - உடல் மயிர்க் கூச்செறியவும் உடல்
ஏங்கி இளைத்து நின்று, Aengi Ilaitthu Nindru - நெஞ்சு தளர்ந்து களைத்துப் போய்
எய்த்து, Eyththu - நிலை தளர்ந்து
கும்பிடு நட்டம் இட்டு, Kumbidu Nattam Ittu - மஹா கோலாஹலத்தோடு கூடிய நர்த்தனத்தைப் பண்ணி
எழுந்து ஆடி பாடி இறைஞ்சி, Ezhunthu Aadi Paadi Irainji - நின்ற விடத்து நில்லாமல் (பல வித) ஆட்டங்களாடிப் பாட்டுகள் பாடி வணங்கி,
என் அத்தன், En Aththan - எனக்குத் தந்தையாய்
அச்சன், Achchan - ஸ்வாமியான
அரங்கனுக்கு, Aranganukku - ஸ்ரீரங்கநாதனுக்கு
அடியார்கள் ஆகி, Adiyargal Aagi - அடியவர்களாய்
அவனுக்கே, Avanukke - அந்த ரங்கநாதன் விஷயத்திலேயே
பித்தர் ஆமவர், Piththar Aamavar - பித்தேறித் திரிகிறவர்கள்
பித்தர் அல்லர்கள், Piththar Allargal - பைத்தியக்காரர்களல்லர்;
மற்றயார் முற்றும், Mattrayaar Muttum - (பத்தி கார்யமான இந்த வ்யா மோஹமில்லாத) மற்ற பேர்களெல்லாம்
பித்தரே, Piththare - பைத்தியக்காரர்கள் தான்.
667பெருமாள் திருமொழி || (தேட்டரும் திறல்) - அரங்கன் அடியாரது அடிமைத்திறத்தில் ஈடுபடுதல் 10
அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன் மெய் அடியார்கள் தம்
எல்லையில் அடிமை திறத்தினில் என்றும் மேவு மனத்தானாம்
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழி கோன் குலசேகரன்
சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர் தொண்டர் தொண்டர்கள் ஆவரே
அல்லி மாமலர் மங்கை நாதன், Alli Maamalai Mangai Naathan - அக விதழ்களை யுடைய சிறந்த (தாமரை) மலரில் பிறந்த பிராட்டிக்குக் கணவனான
அரங்கன், Arangan - ஸ்ரீரங்கநாதனுடைய
மெய் அடியார்கள் தம், Mei Adiyaargal Tham - உண்மையான பக்தர்களுடைய
என்றும் மேவு மனத்தன் ஆம், Endrum Mevu Manaththan Aam - எப்போதும் பொருந்திய திரு வுள்ளத்தை யுடையவரும்
கொல்லி காவலன், Kolli Kaavalan - கொல்லி நகர்க்கு அரசரும்
கூடல் நாயகன், Koodal Naayagan - மதுரைக்கு அரசரும்
கோழி கோன், Kozhi Kon - உறையூருக்கு அரசருமான
குல சேகரன், Kula Seakaran - குலசேகராழ்வருடைய
சொல்லின், Sollin - ஸ்ரீஸூக்திளாலே அமைந்த
இன் தமிழ் மாலை வல்லவர், In Tamil Maalai Vallar - இனிய தமிழ்ப் பாசுரங்களை ஒத வல்லவர்கள்
தொண்டர் தொண்டர்கள் ஆவர், Thondar Thondargal Aavar - தாஸாநுதாஸராகப் பெறுவர்
668பெருமாள் திருமொழி || (மெய்யில் வாழ்க்கையை) - அழகிய மணவாளன்பால் மயல் விஞ்சிய நிலையில் எழுந்த மாற்றம். 1
மெய்யில் வாழ்க்கையை மெய் என கொள்ளும் இவ்
வையம் தன்னோடும் கூடுவது இல்லை யான்
ஐயனே அரங்கா என்று அழைக்கின்றேன்
மையல் கொண்டு ஒழிந்தேன் என் தன் மாலுக்கே
மெய்யில் வாழ்க்கையை, Meiyil Vaalkkaiyai - ப்ரக்ருதி ப்ராக்ருதங்களோடு பொருந்தி வாழ்வதையே
மெய் என கொள்ளும், Mei En Kollum - பாரமார்த்திகமாகக் கருதுகின்ற
இவ் வையம் தன்னோடும், Iv Vaiyam Thannodum - இவ்வுலகத்தாரோடு
யான் கூடுவது இல்லை, Yaan Kooduvadhu Illai - (இனி) நான் சேர்வதில்லை
ஐயனே, Aiyane - ‘ஸ்வாமீ’
அரங்கா, Arangaa - ‘ஸ்ரீரங்கநாதனே!’
என்று அழைக்கின்றேன், Endru Azhaiykinren - என்று (பகவந் நாமங்களைச் சொல்லி) அழையா நின்றேன்;
என் தன் மாலுக்கே, En Than Maalukke - என்னிடத்தில் வாத்ஸல்யமுடைய எம்பெருமான் பக்கலிலேயே
மையல் கொண்டொழிந்தேன், Maiyal Kondonzhindhen - வ்யாமோஹடைந்திட்டேன்.
669பெருமாள் திருமொழி || (மெய்யில் வாழ்க்கையை) - அழகிய மணவாளன்பால் மயல் விஞ்சிய நிலையில் எழுந்த மாற்றம். 2
நூலினேர் இடையார் திறத்தே நிற்கும்
ஞாலம் தன்னோடும் கூடுவது இல்லை யான்
ஆலியா அழையா அரங்கா! என்று
மால் எழுந்து ஒழிந்தேன் என் தன் மாலுக்கே
நூலின் நேர், Noolin Ner - நூல் போன்று (ஸூக்ஷ்மமான) இடையை யுடைய பெண்டிர் விஷயத்திலேயே பொருந்தி யிருக்கிற
ஞாலம் தன்னொடும், Njaalam Thannodum - (இந்த) ப்ராக்ருத மனிதரோடு
ஆலியா, Aaliya - (காதலுக்குப் போக்கு வீடாகக்) கூத்தாடி
அரங்கா என்று, Arangaa Endru - ‘ஸ்ரீரங்கநாதனே!’ என்று கூப்பிட்டு
அழையா, Azhaiyaa - கூப்பிட்டு
என் தன் மாலுக்கே, En Than Maalukke - என் மேல் வ்யாமோஹமுடையனான எம்பெருமான் திறத்தினாலேயே
மால் எழுந்தொழிந்தேன், Maal Ezhundhonzhindhen - மோஹமுற்றேன்.
670பெருமாள் திருமொழி || (மெய்யில் வாழ்க்கையை) - அழகிய மணவாளன்பால் மயல் விஞ்சிய நிலையில் எழுந்த மாற்றம். 3
மாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆட் செய்யும்
பாரினாரோடும் கூடுவதில்லை யான்
ஆர மார்வன் அரங்கன் அனந்தன் நல்
நாரணன் நர காந்தகன் பித்தனே
மாரனார், Maranar - மன்மதனுடைய
வரி வெம் சிலைக்கு, Vari Vem Silaiyku - அழகிய கொடிய வில்லுக்கு
ஆள் செய்யும், Aal Seyyum - ஆட் பட்டு (விஷய ப்ரவணராய்த்) திரிகிற
பாரினாரொடும், Paarinaarodum - (இப்) பூமியிலுள்ள ப்ராக்ருதர்களோடு
யான் கூடுவது இல்லை, Yaan Kooduvadhu Illai - :
ஆரம் மார்வன், Aaram Maarvan - முக்தாஹாரத்தைத் திரு மார்பிலே அணிந்துள்ளவனாய்
அனந்தன், Ananthan - அளவிட முடியாத ஸ்வரூப ஸ்வ பாவங்களை யுடையவனாய்
நல் நாரணன், Nal Naranan - ஸர்வ ஸ்வாமியாய்
நரக அந்தகன், Naraga Andhagan - அடியவர்களை நரகத்தில் சேராதபடி காத்தருள்பவனான
நரகாந்தகன், Naragandhagan - நரகாஸூரனைக் கொன்றவன் என்றுமாம்.
அரங்கன், Arangan - ஸ்ரீரங்கநாதன் விஷயத்திலே
பித்தன், Piththan - மோஹமுடையனாயிரா நின்றேன்.
671பெருமாள் திருமொழி || (மெய்யில் வாழ்க்கையை) - அழகிய மணவாளன்பால் மயல் விஞ்சிய நிலையில் எழுந்த மாற்றம். 4
உண்டியே வுடையே உகந்து ஓடும் இம்
மண்டலத்தோடோம் கூடுவதில்லை யான்
அண்ட வாணன் அரங்கன் வன் பேய் முலை
உண்ட வாயன் தன் உன்மத்தன் காண்மினே
உண்டியே, Undiye - ஆஹாரத்தையும்
உடையே, Udaye - வஸ்திரத்தையுமே
உகந்து ஓடும், Uganthu Oodum - விரும்பி (க் கண்ட விட மெங்கும்) ஓடித் திரிகிற
இ மண்டலத்தொடும், I Mandalathodum - இந்தப் பூமண்டலத்திலுள்ள பிராகிருதர்களோடு
அண்டம் வாணன், Andam Vaanan - பரம பதத்திலே வாழ்பவனும்
வல் பேய் முலை உண்ட வாயன், Val Pei Mulai Unda Vayan - கல் நெஞ்சை யுடைய பூதனையின் முலையை அமுது செய்த வாயை யுடையனுமான
அரங்கன் தன், Arangan Than - ஸ்ரீரங்கநாதன் விஷயத்தில்
உன்மத்தன், Unmaththan - பைத்தியம் பிடித்தவனா யிரா நின்றேன்
672பெருமாள் திருமொழி || (மெய்யில் வாழ்க்கையை) - அழகிய மணவாளன்பால் மயல் விஞ்சிய நிலையில் எழுந்த மாற்றம். 5
தீதில் நல் நெறி நிற்க அல்லாது செய்
நீதி யாரொடும் கூடுவதில்லை யான்
ஆதி ஆயன் அரங்கன் அம் தாமரை
பேதை மா மணவாளன் தன் பித்தனே
தீது இல் நல் நெறி நிற்க, Theethu Il Nal Nerai Nirka - குற்றமற்ற நல் வழி இருக்கச் செய்தே (அவ்வழியில் போகாமல்)
அல்லாது செய் நீதியாரொடும், Alladhu Sei Neethiyaarodum - நல் வழிக்கு எதிர்த்தட்டான வற்றைச் செய்வதை விரதமாகக் கொண்டுள்ள பிராகிருதர்களோடு
ஆதி, Aadhi - (உலகங்கட்கு) முதல்வனாய்
ஆயன், Aayan - ஸ்ரீகிருஷ்ணனாய் அவதரித்து ஸர்வ ஸூலபனாய்
அம் தாமரை பேதை மா மணவாளன், Am Thamarai Pethai Maa Manavaalan - அழகிய தாமரைப் பூவில் அவதரித்த பிராட்டியின் வல்லபவனான
அரங்கன் தன், Arangan Than - ஸ்ரீரங்கநாதன் திறத்தில்
பித்தன், Piththan - மோஹங் கொண்டிரா நின்றேன்.
தீமையோடு கலசிய நல்ல நெறி, Theemaiyodu Kalasiya Nalla Nerai - என்று கண்டுகொள்க.
673பெருமாள் திருமொழி || (மெய்யில் வாழ்க்கையை) - அழகிய மணவாளன்பால் மயல் விஞ்சிய நிலையில் எழுந்த மாற்றம். 6
எம் பரத்தர் அல்லாரோடும் கூடலன்
உம்பர் வாழ்வை ஒன்றாக கருதிலன்
தம் பிரான் அமரர்க்கு அரங்க நகர்
எம்பிரானுக்கு எழுமையும் பித்தனே
எம் பரத்தர் அல்லா ரொடும், Em Parathar Allaa Rodum - என்னைப் போலே அநந்ய ப்ரயோஜநரா யிராதவர்களோடு;
கூடலன், Koodalan - (நான்) கூட மாட்டேன்;
உம்பர் வாழ்வை, Umbar Vaazvai - தேவதைகளின் ஸ்வர்க்கம் முதலிய போகங்களையும்
ஒன்று ஆக, Ondru Aaga - ஒரு புருஷார்த்தமாக
கருதலன், Karuthalan - எண்ண மாட்டேன்;
அமரர்க்கு, Amararukku - நித்ய ஸூரிகளுக்கு
தம்பிரான், Thampran - ஸ்வாமியாய்
அரங்கம் நகர், Arangam Nagar - கோயிலிலே எழுந்தருளி யிருக்கிற
எம் பிரானுக்கு, Em Piranukku - பெரிய பெருமாள் விஷயத்தில்
த்ழுமையும், Thumaiyum - எப்போதும்
பித்தன், Piththan - பித்தனாகா நின்றேன்.
674பெருமாள் திருமொழி || (மெய்யில் வாழ்க்கையை) - அழகிய மணவாளன்பால் மயல் விஞ்சிய நிலையில் எழுந்த மாற்றம். 7
எத் திறத்திலும் யாரொடும் கூடும் அச்
சித்தம் தன்னை தவிர்த்தனன் செங்கண் மால்
அத்தனே! அரங்கா! என்று அழைகின்றேன்
பித்தனாய் ஒழிந்தேன் எம் பிரானுக்கே
செம் கண் மால், Sem Kan Maal - புண்டரீகாக்ஷனான எம்பெருமான்
எத் திறத்திலும், Eth Thiraththilum - எந்த விஷயத்திலும்
யாரொடும், Yarodum - கண்ட பேர்களோடே
கூடும் அச் சித்தம் தன்னை, Koodum Ach Chiththam Thannai - சேர்ந்து கெட்டுப் போவதற்கு உறுப்பான நெஞ்சை
தவிர்த்தனன், Thavirthanan - நீக்கி யருளினான்; (ஆதலால்)
அத்தனே, Aththane - ஸ்வாமியே!
அரங்கா, Arangaa - ஸ்ரீரங்கநாதனே!
என்று அழைக்கின்றேன், Endru Azhaiykinren - என்று கூவா நின்றேன்;
எம்பிரானுக்கே பித்தனாய் ஒழிந்தேன், Em Piranukke Piththanai Ozhindhen - .
675பெருமாள் திருமொழி || (மெய்யில் வாழ்க்கையை) - அழகிய மணவாளன்பால் மயல் விஞ்சிய நிலையில் எழுந்த மாற்றம். 8
பேயரே எனக்கு யாவரும் யானுமோர்
பேயனே எவர்க்கும் இது பேசி என்?
ஆயனே அரங்கா என்று அழைகின்றேன்
பேயனாய் ஒழிந்தேன் எம் பிரானுக்கே
யாவரும், Yavarum - இவ் வுலகத்தாரடங்கலும்
எனக்கு, Enakku - என் வரைக்கும்
பேயரே, Peyare - பைத்தியக்காரர்கள் தான்;
யானும், Yaanum - (அவர்களிற் காட்டில் விலக்ஷணனான) நானும்
எவர்க்கும், Everkum - எவர்களுக்கும்
ஓர் பேயனே, Or Peyane - ஒரு பைத்தியக்காரன் தான்;
இது, Idhu - இவ் விஷயத்தை
பேசி, Peshi - (விரிவாகச்) சொல்வதனால்
என், En - என்ன ப்ரயோஜநமுண்டு?
ஆயனே, Aayane - ‘ஸ்ரீகிருஷ்ணனே!
அரங்கா, Arangaa - ஸ்ரீரங்கநாதனே!’
என்று அழைக்கின்றேன், Endru Azhaiykinren - என்று (பகவந் நாமங்களைச் சொல்லி) கூவா நின்றேன்;
எம்பிரானுக்கே பேயனாய் ஒழிந்தேன், Em Piranukke Peyanai Ozhindhen - .
என்ற பழமொழியின்படி, Endra Pazhamozhiyinbadi - லோகவிஜாதீயரான நீர் பைத்தியக்காரன்; என்று எல்லாராலும் இகழக் கூடியவராயிருக்கின்றீரே!
676பெருமாள் திருமொழி || (மெய்யில் வாழ்க்கையை) - அழகிய மணவாளன்பால் மயல் விஞ்சிய நிலையில் எழுந்த மாற்றம். 9
அங்கை ஆழி அரங்கன் அடியிணை
தங்கு சிந்தைத் தனிப் பெரும் பித்தனாம்
கொங்கர் கோன் குலசேகரன் சொன்ன சொல்
இங்கு வல்லவர்க்கு ஏதம் ஓன்று இல்லையே
அம் கை ஆழி, Am Kai Aazhi - அழகிய திருக்கையிலே திருவாழி யாழ்வானை ஏந்தி யுள்ள
அரங்கன், Arangan - ஸ்ரீரங்கநாதனுடைய
அடி இணை, Adi Inai - திருவடிகளில்
தங்கு சிந்தை, Thangu Sindhai - பொருந்திய மனமுடையவராய்
தனி பெரு பித்தன் ஆம், Thani Peru Piththan Aam - லோக விலக்ஷணரான பெரிய பித்தராய்
கொங்கர் கோன், Kongar Kon - சேர தேசத்தவர்களுக்குத் தலைவரான
குல சேகரன், Kula Seakaran - குலசேகராழ்வார்
சொன்ன, Sonna - அருளிச் செய்த
சொல், Sol - இப் பாசுரங்களை
இங்கு, Ingu - இவ் விபூதியிலே
வல்லவர்க்கு, Vallavarkku - ஓத வல்லவர்களுக்கு
ஏதம் ஒன்று இல்லை, Edham Ondru Illai - (பகவதநுபவத்திற்கு) ஒருவிதமான இடையூறும் உண்டாக மாட்டாது.
677பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 1
ஊனேறு செல்வத்து உடன் பிறவி யான் வேண்டேன்
ஆன் ஏறு ஏழ் வென்றான் அடிமை திறம் அல்லாமல்
கூனேறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே
ஆன் ஏறு ஏழ் வென்றான், Aan Eru Ezhu Vendran - நப்பின்னைப் பிராட்டிக்காக ஏழு எருதுகளை ஜயித்தவனான எம்பெருமானுக்கு
அடிமை திறம் அல்லால், Adimai Thiram Allaal - கைங்கரியம் செய்வதையே நான் வேண்டுவதல்லாமல்
ஊன் ஏறு செல்வத்து உடல் பிறவி, Oon Eru Selvaththu Udal Piravi - நாளுக்கு நாள் மாம்சம் வளர்ந்து தடிப்பதாகிற செல்வத்தை யுடைய இம் மனிதவுடம்பெடுத்துப் பிறத்தலை
யான் வேண்டேன், Yaan Vaendein - (விவேகம் பெற்ற) நான் (இனி) விரும்ப மாட்டேன்; (அன்றியும்,)
கூன் ஏறு சங்கம், Koon Eru Sangam - வளைந்திருக்கிற ஸ்ரீபாஞ்சஜந்யத்தை
இடத்தான் தன், Idaththaan Than - இடத் திருக் கையிலே யுடையனான எம்பெருமானுடைய
வேங்கடத்து, Vengadaththu - திருவேங்கட மலையில்
கோனேரி வாழும், Konerii Vaalum - திருக் கோனேரி என்கிற ஸ்வாமி புஷ்கரிணியில் வாழ்கிற
குருகு ஆய் பிறப்பேன், Kurugu Aay Pirappen - நாரை யாகவாவது பிறக்கக் கடவேன்.
அடிமைத் திறமாவது, Adimai Thiramavathu - திருவடி திருவனந்தாழ்வான் இளைய பெருமாள் முதலானவர்கள் போலப்
கோன் ஏரி, Kon Aeri - ஸ்வாமி புஷ்கரிணி.
ஊன்,ஆண், கோன் என்பவற்றில், ன், Oon Aan Kon Enbavatril N - சாரியை,
குருகு என்ற சொல், Kurugu Endra Sol - அன்னம் க்ரௌஞ்சம் என்ற நீர் வாழ் பறவைகளைக் குறிப்பதாகவும்.
678பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 2
ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ
வானாளும் செல்வமும் மண் அரசும் யான் வேண்டேன்
தேனார் பூம் சோலை திரு வேங்கட சுனையில்
மீனாய் பிறக்கும் விதி வுடையேன் ஆவேனே
ஆனாத செல்வத்து, Anadha Selvaththu - அழியாத (யௌவநமாகிய) ஸம்பத்தை யுடைய
அரம்பையர்கள், Arambaiyargal - அப்ஸரஸ் ஸ்த்ரீகள்
தன் சூழ, Than Soozh - தன்னைச் சூழ்ந்து நிற்க
வான் ஆளும் செல்வமும, Vaan Aalum Selvamum - மேலுலகத்தை அரசாளுகின்ற ஐச்வர்யத்தையும்
மண் அரசும், Man Arasum - இப் பூலோகத்தை அரசாளும் ஆட்சியையும்
யான் வேண்டேன், Yaan Vaendein - (வருத்தமின்றிக் கிடைப்பதாயினும்) யான் விரும்ப மாட்டேன்
தேன் ஆர் பூ சோலை, Then Aar Poo Solai - தேன் மிக்க மலர்களுள்ள சோலைகளை யுடைய
திருவேங்கடம், Thiruveangadam - திருவேங்கட மலையிலிருக்கின்ற
சுனையில், Sunaiyil - சுனைகளிலே
மீன் ஆய் பிறக்கும், Meen Aayi Pirakkum - ஒரு மீனாகப் பிறக்கத் தக்க
விதி, Vithi - வாக்கியத்தை
உடையேன் ஆவேன், Udaiyen Aaven - உடையவனாகக் கடவேன்.
அரம்பையர்கள், Arambaiyargal - ரம்பை முதலியோர்.
தேன் ஆர், Then Aar - வண்டுகள் ஆரவாரிக்கின்ற என்றுமாம்.
சுனை, Sunai - மலையில் நீரூற்றுள்ள குணம்.
679பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 3
பின் இட்ட சடையானும் பிரமனும் இந்த்ரனும்
துன்னிட்டு புகல் அரிய வைகுண்ட நீள் வாசல்
மின் வட்ட சுடர் ஆழி வேம்கட கோன் தான் உமிழும்
பொன் வட்டில் பிடித்து உடனே புக பெறுவேன் என ஆவேனே
பின்னிட்ட சடையானும், Pinnitta Sadayanum - திரித்து விட்ட சடையை யுடையவனான சிவனும்
பிரமனும், Brahmanum - சதுர்முகனும்
இந்திரனும், Indiranum - தேவேந்திரனும்
துன்னிட்டு, Thunnittu - நெருக்கி
புகல் அரிய, Pugal Ariya - உள்ளே புகுவதற்கு ஸாத்யமில்லாமலிருக்கின்ற
வைகுந்தம் நீள் வாசல், Vaikundham Neel Vaasal - பூலோக வைகுண்டமாகிய திருமலையிலுள்ள திருக்கோயிலின் நீண்ட திருவாசலிலே
மின் வட்டம் சுடர் ஆழி, Min Vattam Sudar Aazhi - மின்னலை வளைத்தாற்போல சோதி மயமாய் விளங்குகின்ற வட்ட வடிவமான சக்ராயுதத்தை யுடைய
வேங்கடம் கோன் தான், Vengadam Kon Thaan - திருவேங்கடமுடையான்
உமிழும், Umizhum - வாய்நீருமிழ்கின்ற
பொன் வட்டில், Pon Vattil - தங்க வட்டிலை
பிடித்து, Pidiththu - கையிலேந்திக் கொண்டு
உடனே புக பெறுவேன் ஆவேனே, Udaney Puga Peruven Aaveney - அந்தரங்க பரிஜநங்களுடனே நானும் உள்ளே புகும் பாக்கியத்தைப் பெறக் கடவேன்.
பின்னிட்ட, Pinnitta - பின்னிய; இடு – துணைவினை.
வட்டில், Vattil - இங்கே, படிக்கம்.
உடனே, Uthane - சீக்கிரமாக எனினுமாம்.
680பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 4
ஒண் பவள வேலை வுலவு தண் பாற் கடலுள்
கண் துயிலும் மாயோன் கழல் இணைகள் காண்பதற்கு
பண் பகரும் வண்டினங்கள் பண் பாடும் வேம்கடத்து
செண்பகமாய் நிற்கும் திரு உடையன் ஆவேனே
ஒண் பவளம் வேலை உலவு, On Pavalham Vela Uluvu - ஒளியுள்ள பவழக் கொடிகளைக் கரையிலே கொணர்ந்து கொழித்து (அலைகள்) உலாவுகிற
தண் பாற்கடலுள், Than Pargadalul - குளிர்ந்த திருப்பாற்கடலிலே
கண் துயிலும், Kan Thuyilum - யோக நித்திரை செய்தருள்கின்ற
மாயோன், Maayon - ஆச்சரிய சக்தி யுக்தனான எம் பெருமானுடைய
கழல் இணைகள், Kazhal Inaihal - இரண்டு திருவடிகளை
காண்பதற்கு, Kaanpadartharku - ஸேவிக்கும் படியாக
பண் பகரும் வண்டு இனங்கள், Pan Pakarum Vandu Inangal - இசையையே பேசுகிற வண்டுகளின் கூட்டங்கள்
பண் பாடும் வேங்கடத்து, Pan Paadum Vengadaththu - பண்ணிசை பாடப் பெற்ற திருமலையிலே
செண்பகம் ஆய் நிற்கும் திரு உடையேன் ஆவேன், Senbagam Aay Nirkum Thiru Udayen Aaven - சண்பக மரமாய் நிற்கும் பாக்கிய முடையேனாகக் கடவேன்.
681பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 5
கம்ப மத யானை கழுத்தகத்தின் மேல் இருந்து
இன்ப மரும் செல்வமும் இவ் அரசும் யான் வேண்டேன்
எம்பெருமான் ஈசன் எழில் வேம்கட மலை மேல்
தம்பகமாய் நிற்கும் தவம் உடையன் ஆவேனே
கம்பம், Kambam - தன்னைக் கண்டவர்கட்கு அச்சத்தால் நடுக்கத்தை விளைக்கின்ற
மதம் யானை, Madhama Yaanai - மதங்கொண்ட யானையினது
கழுத்து அகத்தின் மேல் இருந்து, Kazhuthu Akathin Mael Irundhu - கழுத்தின் மீது வீற்றிருந்து
இன்பு அமரும், Inbu Amarum - நாநாவித ஸுகங்களைப் பொருந்தி அனுபவிக்கும்படியான
செல்வமும், Selvammum - ஐசுவர்யத்தையும்
இவ் அரசம், Iv Arasam - அதற்குக் காரணமான இந்த அரசாட்சியையும்
யான் வேண்டேன், Yaan Vaendein - நான் விரும்ப மாட்டேன்:
எம்பெருமான், Emperumaan - எமது தலைவனும்
ஈசன், Eesan - (எல்லாவுலகுக்கும்) தலைவனுமான பெருமானுடைய
எழில் வேங்கடம் மலை மேல், Ezhil Vengadham Malai Mael - அழகிய திருமலையிலே
தம்பகம் ஆய் நிற்கும், Thambagam Aayi Nirkkum - புதராய் நிற்கும்படியான
உடையேன் ஆவேன், Udaiyen Aaven - உடையவனாகக் கடவேன்.
கம்பம், Kambam - வடசொல்; கம்பமத யானை (கண்டாரனை வரும்) நடுங்கும்படி மதங்கொண்ட யானை.
தம்பகமாய், Thambagamai - புல் கோரை செடி கொடி முதலியவற்றின் புதர் – ஸ்தம்பம் எனப்படும்.
682பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 6
மின் அனைய நுண்ணி இடையார் உருப்பசியும் மேனகையும்
அன்னவர் தம் பாடலொடும் ஆடல் அவை ஆதரியேன்
தென்னவென வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்துள்
அன்னனைய பொற் குவடாம் அரும் தவததேன் ஆவேனே
மின் அனைய நுண் இடையார், Min Anaiya Nun Idaiyaar - மின்னல் போல் ஸூக்ஷ்மமான இடையே உடையவர்களாகிய
உருப்பசியும் மேனகையும் அன்னவர் தம், Urupasiyum Menakaiyum Annavar Tham - ஊர்வசியும் மேனகையும் போலழகியவர்களான ஸ்த்ரீகளின்
பாடலொடும் ஆடல் அவை, Paadalodum Aadal Avai - பாட்டும் ஆட்டமுமாகிய அவற்றை
ஆதரியேன், Aadhariyen - யான் விரும்ப வில்லை
வண்டு இனங்கள், Vandu Inangal - வண்டுகளின் கூட்டம்
தென்ன என பண் பாடும், Thenna Ena Pan Paadum - ” தென தென ” என்று ஆளத்தி வைத்து இசை பாடப் பெற்ற
வேங்கடத்துள், Vengadaththul - திருமலையிலே
அன்னனைய பொன் குவடு ஆம், Annanaiya Pon Kuvalu Aam - அப்படிப்பட்ட பொன் மயமான சிகரமாவதற்கு உரிய
அரு தவத்தன் ஆவேன், Aru Thavaththan Aavein - அருமையான தவத்தை யுடையவனாகக் கடவேன்.
683பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 7
வான் ஆளும் மா மதி போல் வெண் குடை கீழ் மன்னவர் தம்
கோனாகி வீற்று இருந்து கொண்டாடும் செல்வறியேன்
தேனார் பூம் சோலை திரு வேங்கட மலை மேல்
கானாறாய் பாயும் கருத்துடையன் ஆவேனே
பிறை ஏறு சடையானும், Pirai Eru Sadayanum - இளஞ் சந்திரன் ஏறியிரா நின்ற ஜடையை யுடைய சிவனும்
பிரமனும், Brahmanum - ப்ரஹ்மாவும்
இந்திரனும், Indiranum - தேவேந்திரனும்
முறை ஆய, Murai Aaya - தம் தமது யோக்யதைக்குத் தக்கபடி செய்கின்ற
பெரு வேள்வி, Peru Velvi - பெரிய பாகங்களின் பயனாக
குறை முடிப்பான், Kurai Mudippaan - (அவர்களது) குறையைத் தீர்த்து அவர்கள் கோரிக்கையைத் தலைகட்டுவிப்பனும்
மறை ஆனான், Marai Aanaan - வேதங்களிற் பரம்பொருளாகக் கூறப்படுபவனுமான எம்பெருமானுடைய
வெறி ஆர் தண் சோலை, Veri Aar Than Solai - பரிமளம் மிக்க குளிர்ந்த சோலைகளை யுடைய
நெறி ஆய் கிடக்கும், Neri Aay Kidakkum - (போகிற) வழியாய்க் கிடக்கின்ற
நிலை, Nilai - நிலையை
உடையேன் ஆவேன், Udaiyen Aaven - உடையவனாகக் கடவேன்.
குறை முடிப்பான், Kurai Mudippaan - இது இரட்டுற மொழிதலாய்,
684பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 8
பிறையேறு சடையானும் பிரமனு மிந்திரனும்
முறையாய பெருவேள்விக் குறைமுடிப்பான் மறையானான்
வெறியார்தண் சோலைத் திருவேங் கடமலைமேல்
நெறியாய்க் கிடக்கும் நிலையுடையே னாவேனே
பிறை ஏறு சடையானும், Pirai Eru Sadayanum - இளஞ் சந்திரன் ஏறியிரா நின்ற ஜடையையுடைய சிவனும்
பிரமனும், Brahmanum - ப்ரஹ்மாவும்
இந்திரனும், Indiranum - தேவேந்திரனும்
முறை ஆய, Murai Aaya - தம் தமது யோக்யதைக்குத் தக்கபடி செய்கின்ற
பெரு வேள்வி, Peru Velvi - பெரிய பாகங்களின் பயனாக
குறை முடிப்பான், Kurai Mudippaan - (அவர்களது) குறையைத் தீர்த்து அவர்கள் கோரிக்கையைத் தலைகட்டுவிப்பனும்
மறை ஆனான், Marai Aanaan - வேதங்களிற் பரம்பொருளாகக் கூறப்படுபவனுமான எம்பெருமானுடைய
வெறி ஆர் தண்சோலை, Veri Aar Than Solai - பரிமளம் மிக்க குளிர்ந்த சோலைகளையுடைய
நெறி ஆய் கிடக்கும், Neri Aay Kidakkum - (போகிற) வழியாய்க் கிடக்கின்ற
நிலை, Nilai - நிலையை
உடையேன் ஆவேன், Udaiyen Aaven - உடையவனாகக் கடவேன்.
685பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 9
செடியாய வல் வினைகள் தீர்க்கும் திரு மாலே!
நெடியானே! வேம்கடவா! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தது இயங்கும்
படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேன
செடி ஆய, Sedi Aay - செடி போல் அடர்ந்துள்ள
வல் வினைகள், Val Vinaigal - கொடிய கருமங்களை
தீர்க்கும், Theerkum - (ஆச்ரிதர்க்குப்) போக்கி யருள்கிற
திருமாலே, Thirumaale - ஸ்ரீய:பதியான பெருமானே!
நெடியானே, Nediyane - பெரியோனே!
வேங்கடவா, Vengadavaa - திருவேங்கட முடையானே!
நின் கோயிலின் வாசல், Nin Koyilin Vaasal - உனது ஸந்நிதியின் உள் வாசலிலே
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்படி ஆய் கிடந்து, Adiyaarum Vaanavarum Arampaiyarum Kidandhu Iyankumpadi Aay Kidandhu - பாகவதர்களும் மற்றைத் தேவர்களும்
உன் பவளம் வாய் காண்பேன், Un Pavalam Vaai Kaanbaen - உனது பவழம் போன்ற திருவதரத்தைக் காண்பேனாகக் கடவேன்.
686பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 10
உம்பர் உலகாண்டு ஒரு குடை கீழ் உருப்பசி தன்
அம் பொற் கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன்
செம் பவள வாயான் திரு வேம்கடம் என்னும்
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே
உம்பரு உலகு, Umbaru Ulagu - மேலுலகங்களை யெல்லாம்
ஒரு குடை கீழ், Oru Kudai Keel - ஒரு கொற்றக் குடையின் நிழலிலே
ஆண்டு, Aandu - அரசாண்டு
உருப்பசி தன், Uruppasi Than - ஊர்வசியினுடைய
அம், Am - அழகிய
பொன் கலை அல் குல், Pon Kalai Al Kul - பீதாம்பர மணிந்த அல்குலை
பெற்றாலும், Petralum - அடையப் பெறினும்
ஆதரியேன், Aadhariyen - (அதனை) விரும்ப மாட்டேன்;
செம் பவளம் வாயான், Sem Pavalam Vayaan - சிவந்த பவழம் போன்ற வாயை யுடையனான
எம்பெருமான், Emperumaan - எனது அப்பனுடைய
திருவேங்கடம் என்னும் பொன் மலை மேல், Thiruveengadam Ennum Pon Malai Mel - திருவேங்கட மென்ற பெயரையுடைய அழகிய திருமலையின் மேல்
ஏதேனும் ஆவேன், Edhenum Aaven - ஏதேனுமொரு பதார்த்தமாகப் பிறக்கக் கடவேன்
687பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 11
மன்னிய தண் சாரல் வட வேம்கடத்தான் தன்
பொன் இயலும் சேவடிகள் காண்பான் புரிந்து இறைஞ்சி
கொன் நவிலும் கூர் வேல் குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் தமிழ் வல்லார் பாங்காய பத்தர்களே
கொல் நவிலும், Kol Navilum - (பகைவர்களைக்) கொல்லுதலைப் பயின்ற
கூர் வேல், Koora Vel - கூர்மையான வேலாயுதத்தை யுடைய
குல சேகரன், Kula Seakaran - குல சேகராழ்வார்
மன்னிய தண் சாரல் வடவேங்கடத்தான் தன், Manniya Than Saaral Vadaveengadathaan Than - நிலை பெற்ற குளிர்ச்சி யுள்ள சாரல்களை யுடைய
பொன் இயலும் சே அடிகள், Pon Iyalaum Se Adigal - பொன்போற் சிறந்த சிவந்த திருவடிகளை
காண்பான், Kaanbaan - ஸேவிப்பதற்கு
புரிந்து, Purinthu - ஆசைப்பட்டு
இறைஞ்சி, Irainji - வணங்கி
சொன்ன, Sonna - அருளிச் செய்த
பன்னிய நூல் தமிழ், Panniya Nool Tamil - ஆராய்ந்த நூல்களிற் கூறிய இலக்கணத்துக்கு இசைந்த தமிழ்ப் பதிகத்தை
வல்லார், Vallaar - கற்று வல்லவர்
பாங்கு ஆய பத்தர்கள், Paangu Aaya Paththarkal - அப்பெருமான் திருவுள்ளத்துக்கு இனிய பக்தர்களாவர்
அடிவரவு, Adivaravu - ஊன் ஆனாத பின் ஒண் கம்பம் மின் வான் பிறை செடி உம்பர் மன்னிய தரு.
688பெருமாள் திருமொழி || (தரு துயரம் தடாயேல்) - திருவித்துவக் கோட்டம்மானையே வேண்டி நிற்றல் 1
தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை
விரை குழுவும் மலர் பொழில் சூழ் வித்துவ கோட்டு அம்மானே
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள் தன்
அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே
விரை குழுவும், Virai Kuzhuvum - பரிமளம் விஞ்சிய
மலர், Malar - புஷ்பங்களை யுடைய
பொழில் சூழ், Pozhil Soozh - சோலைகளாலே சூழப்பட்ட
வித்துவக்கோடு, Viththu Vakkodu - திருவித்துவக் கோட்டில் எழுந்தருளியிருக்கிற
அம்மானே, Ammaane - ஸ்வாமியே!
தரு துயரம், Tharu Thuyaram - (நீயே எனக்குத்) தந்த இத் துன்பத்தை
தடாய் ஏல், Thadai Ael - நீயே களைந்திடா விட்டாலும்
உன் சரண் அல்லால் சரண் இல்லை, Un Saran Allaal Saran Illai - உனது திருவடிகளை யன்றி (எனக்கு) வேறு புகலில்லை;
ஈன்ற தாய், Eendra Thaai - பெற்ற தாயானவள்
அரி சினத்தால், Ari Sinaththaal - மிக்க கோபங்கொண்டு அதனால்
அகற்றிடினும், Agaridinum - (தனது குழந்தையை) வெறுத்துத் தள்ளினாலும்
மற்று, Mattru - பின்பும்
அவள் தன் அருள் ஏ நினைந்து அழும், Aval Than Arul Ae Ninaindhu Azhum - அத்தாயினுடைய கருணையையே கருதி அழுகின்ற
குழவி யதுவே, Kuzhavi Yadhuve - இளங்குழந்தையையே
போன்று இருந்தேன், Pondru Irundhen - ஒத்திரா நின்றேன்.
வித்துவக்கோடு என்பதற்கு, Viththu Vakkodu Enbatharku - வித்வான்கள் கூடிய இடம் என்று காரணப் பொருள் கூறுவர்.
689பெருமாள் திருமொழி || (தரு துயரம் தடாயேல்) - திருவித்துவக் கோட்டம்மானையே வேண்டி நிற்றல் 2
கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும்
கொண்டானை அல்லால் அறியா குலமகள் போல
விண் தோய் மதிள் புடை சூழ் வித்துவ கோட்டம்மா! நீ
கொண்டு ஆளாய் ஆகிலும் உன் குரை கழலே கூறுவனே
விண் தோய் மதில், Vin Thoy Madil - ஆகாயத்தை அளாவிய மதில்கள்
புடை சூழ், Pudai Soozh - எப்புறத்தும் சூழப் பெற்ற
வித்துவக்கோடு அம்மா, Viththu Vakkodu Amma - திருவித்துவக் கோட்டில் எழுந்தருவியிருக்கிற ஸ்வாமிந்!
காதலன் தான், Kaadhalan Thaan - கணவனானவன்
கண்டார் இதழ்வனவே செய்திடினும், Kandaar Idhalvanave Seithidinum - பார்ப்பவர்களனைவரும் இகழத் தக்க செயல்களையே செய்தாலும்
கொண்டானை அல்லால் அறியா, Kondaanai Allaal Ariya - (தன்னை) மணஞ் செய்து கொண்டவனான அக் கணவனையே யன்றி
குலம் மகள் போல், Kulam Magal Pol - உயர்நத குலத்துப் பிறந்த கற்புடைய மகள் போல்
நீ கொண்டு ஆளாய் ஆகிலும், Nee Kondo Aalai Aagilum - என்னை அடிமை கொண்டவனான நீ குறையும் தலைக் கட்டாமல் உபேக்ஷித்தாயாகிலும்
உன் குரை கழலே, Un Kurai Kazhale - ஒலிக்கின்ற வீரக்கழலை யுடைய உனது திருவடிகளையே
கூறுவன், Koovuvan - சரணமாகக் குறிக் கொள்வேன்
690பெருமாள் திருமொழி || (தரு துயரம் தடாயேல்) - திருவித்துவக் கோட்டம்மானையே வேண்டி நிற்றல் 3
மீன் நோக்கும் நீள் வயல் சூழ் வித்துவ கோட்டு அம்மா ! என்
பால் நோக்காய் ஆகிலும் உன் பற்று அல்லால் பற்றி இலேன்
தான் நோக்காது எத் துயரம் செய்திடினும் தார் வேந்தன்
கோல் நோக்கி வாழும் குடி போன்று இருந்தேனே
மீன் நோக்கும், Meen Nokkum - மீன்களெல்லாம் (தாம் வஸிப்பதற்கு மிகவும் தகுதியான இடமென்று)
நீள் வழல் சூழ், Neel Vazhalsuzh - விசாலமான கழனிகள் சூழ்ந்த
வித்துவக்கோடு, Viththu Vakkodu - திருவித்துவக் கோட்டில் எழுந்தருளியுள்ள
அம்மா, Amma - பெருமானே!
என் பால், En Paal - அடியேன் மீது
நோக்காய் ஆகிலும், Nokkaai Aagilum - நீ அருள் நோக்கம் செய்யாதிருந்தாலும்
உன் பற்று அல்லால் பற்று இலேன், Un Patru Allal Patru Ileen - உன்னைச் சரணமாகப் பற்றுதலை விட்டு வேறொருவரைச் சரணம் புக மாட்டேன்;
தார் வேந்தன், Thaar Vendan - (குடிகளைக் காப்பதற்கென்று) மாலை யணிந்துள்ள அரசன்
தான் நோக்காது, Thaan Nokkadhu - (அதற்கு ஏற்றபடி) தான் கவனித்துப் பாதுகாவாமல்
எத் துயரம் செய்திடினும், Eth Thuyaram Seithidinum - எப்படிப்பட்ட துன்பங்களைச் செய்தாலும்
கோல் நோக்கி வாழும், Kool Nokki Vaalum - அவனுடைய செங்கோலையே எதிர் பார்த்து வாழ்கிற
குடி போன்று இருந்தேன், Kudi Ponder Irundhen - ஒத்திருக்கின்றேன்
691பெருமாள் திருமொழி || (தரு துயரம் தடாயேல்) - திருவித்துவக் கோட்டம்மானையே வேண்டி நிற்றல் 4
வாளால் அறுத்து சுடினும் மருத்துவன் பல்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளா துயர் தரினும் வித்துவ கோட்டு அம்மா ! நீ
ஆளா வுனதருளே பார்ப்பன் அடியேனே
வாளால் அறுத்து, Vaalal Aruthu - (வைத்தியன்) கத்தியைக் கொண்டு அறுத்தலும், (ஊசியைக் காய்ச்சிச்)
சுடினும், Sudinum - சூடு போடுதலுஞ் செய்தாலும்
மருத்துவன் பால் மாளாத காதல், Maruthuvan Paal Maaladha Kaadhal - அவ்வைத்தியனிடத்து நீங்காத அன்புடைய
நோயாளன் போல், Noyaalan Pol - நோயாளியைப் போல
மாயத்தால், Maayathaal - (உன்) மாயையினால்
நீ மீளா துயர் தரினும், Nee Meela Thuyar Tharinum - நீ நீங்காத துன்பத்தை (எனக்கு) விளைத்தாலும்
அடியேன், Adiyen - உனது அடியவனான நான்
ஆள் ஆக, Aal Aaga - அவ்வடிமை ஸித்திப்பதற்காக
உனது அருளே பார்ப்பன், Unathu Arule Paarppan - உன்னுடைய கருணையையே நோக்கி யிரா நின்றேன்
692பெருமாள் திருமொழி || (தரு துயரம் தடாயேல்) - திருவித்துவக் கோட்டம்மானையே வேண்டி நிற்றல் 5
வெம் கண் திண் களிறு அடர்த்தாய் ! வித்துவ கோட்டு அம்மானே !
எங்கு போய் வுய்கேன் ? உன் இணை அடியே அடையல் அல்லால்
எங்கும் போய் கரை காணாது எறி கடல் வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்பேறும் மா பறவை போன்றேனே
வெம் கண், Vem Kan - பயங்கரமான கண்களை யுடைய
திண் களிறு, Thin Kaliru - வலிய (குவலயாபீடமென்னும்) யானையை
அடர்த்தாய், Adartthai - கொன்றவனே!
உன் இணை அடியே அடையல் அல்லால், Un Inai Adiye Adaiyal Allal - உனது உபய பாதங்களையே (நான்) சரணமடைவ தல்லாமல்
எங்கு போய் உய்கேன், Engu Poi Uykeen - வேறு யாரிடத்திற் போய் உஜ்ஜிவிப்பேன்?
எறி, Eri - அலை யெறிகிற
கடல் வாய், Kadal Vaai - கடலினிடையிலே
எங்கும் போய் கரை காணாது, Engum Poi Karai Kaanadhu - நான்கு திக்கிலும் போய்ப் பார்த்து எங்கும் கரையைக் காணாமல்
மீண்டு, Meendu - திரும்பி வந்து
ஏயும், Eyum - (தான் முன்பு) பொருந்திய
வங்கத்தின், Vangathin - மரக் கலத்தினுடைய
கூம்பு ஏறும், Koombu Eerum - பாய் மரத்தின் மீது சேர்கிற
மா பறவை போன்றேன், Maa Paravai Ponderen - பெரியதொரு பக்ஷியை ஒத்திரா நின்றேன்
693பெருமாள் திருமொழி || (தரு துயரம் தடாயேல்) - திருவித்துவக் கோட்டம்மானையே வேண்டி நிற்றல் 6
செந் தழலே வந்து அழலை செய்திடினும் செங்கமலம்
அந்தரம் சேர் வெங்கதிரோர்க்கு அல்லால் அலராவால்
வெந்துயர் வீட்டா விடினும் வித்து கோட்டு அம்மா ! உன்
அந்தமில் சீர்க்கு அல்லால் அகம் குழைய மாட்டேனே
செம் தழலே வந்து, Sem Thazhale Vandu - செந்நிறமுடைய நெருப்பு (தானாக) அருகில் வந்து
அழலை செய்திடினும், Azhalai Seithidinum - வெப்பத்தைச் செய்தாலும்
செம் கமலம் அந்தரம் சேர் வெம், Sem Kamalam Andharam Ser Vem - செந்தாமரைகள் வானத்தில் தோன்றுகிற வெவ்விய
கதிரோற்கு அல்லால், Kathirorku Allal - கிரணங்களை யுடைய ஸூர்யனுக்கு மலருமே யல்லது.
அலரா, Alaraa - (நெருப்புக்கு) மலர மாட்டா;
வெம் துயர், Vem Thuyar - அநுபவித்தே தீர வேண்டியவையான கொடிய (என்) பாவங்களை
வீட்டா விடினும், Veetta Vidinum - தீர்த்தருளா தொழிந்தாலும்
உன் அந்தம் இல் சீர்க்கு அல்லால், Un Andham Il Seerkku Allal - உனது எல்லையில்லாத உத்தம குணங்களுக்கே யல்லாமல்
அகம் குழைய மாட்டேன், Aham Kuzhaiya Maatten - (வேறொன்றுக்கு நான்) நெஞ்சுருக மாட்டேன்.
694பெருமாள் திருமொழி || (தரு துயரம் தடாயேல்) - திருவித்துவக் கோட்டம்மானையே வேண்டி நிற்றல் 7
எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைம் கூழ்கள்
மைத்து எழுந்த மா முகிலே பார்த்து இருக்கும் மற்றவை போல்
மெய் துயர் வீட்டா விடினும் வித்துவ கோட்டு அம்மா! என்
சித்தம் மிக வுன் பாலே வைப்பன் அடியேனே
வான், Vaan - மேகமானது
எத்தனையும் வறந்த காலத்தும், Ethanaiyum Varandha Kaalaththum - எவ்வளவு காலம் மழை பெய்யாமல் உபேக்ஷித்தாலும்
பைங் கூழ்கள், Paing Kuzhgal - பசுமை தங்கிய பயிர்கள்
மைத்து எழுந்த மாமுகிலே பார்த்து இருக்கும், Maiththu Ezhundha Maamugile Paarthu Irukkum - கருநிறங் கொண்டு கிளம்புகின்ற பெரிய மேகங்களையே எதிர்பார்த்திருக்கும்;
அவை போல், Avai Pol - அப் பயிர்கள் போல.
மெய் துயர் வீட்டா விடினும், Mei Thuyar Veetta Vidinum - தவறாது அனுபவிக்கப்படுகிற என் துன்பங்களை நீ போக்காமல் உபேக்ஷித்தாலும்
அடியேன், Adiyen - உனக்கு தாஸனாகிய நான்
என் சித்தம் உன் பாலே மிக வைப்பன், En Sittam Un Paale Mika Vaippan - என் மநஸ்ஸை உன்னிடத்திலேயே மிகவும் செலுத்துவேன்.
695பெருமாள் திருமொழி || (தரு துயரம் தடாயேல்) - திருவித்துவக் கோட்டம்மானையே வேண்டி நிற்றல் 8
தொக்கி இலங்கி ஆறெல்லாம் பரந்தோடி தொடு கடலே
புக்கு அன்றி புறம் நிற்க மாட்டாத மற்றவை போல்
மிக்கு இலங்கு முகில் நிறத்தாய் ! வித்துவ கோட்டு அம்மா ! உன்
புக்கு இலங்கு சீர் அல்லால் புக்கிலன் காண் புண்ணியனே !
மிக்கு இலங்கு, Mikku Ilangu - மிகுதியாய் விளங்குகிற
முகில், Mugil - காளமேகம் போன்ற
நிறத்தாய், Niraththai - கரிய திருநிற முடையவனே!
புண்ணியனே, Punniyane - புண்ய ஸ்வரூபியா யுள்ளவனே!
தொக்கு இலங்குயாறு எல்லாம், Thokku Ilanguyaaru Ellam - (ஜல ப்ரவாஹம்) திரண்டு விளங்குகிற நதிகளெல்லாம்
பரந்து ஓடி, Parandhu Oodi - (கண்டவிடமெங்கும்) பரவியோடி (முடிவில்)
தொடு கடலே புக்கு அன்றி புறம் நிற்க மாட்டாத, Thodu Kadale Pukku Andri Puram Nirka Maattadha - ஆழ்ந்த கடலிலே சென்று சேர்ந்தல்லது மற்றோரிடத்தே புகுந்து நிற்க மாட்டா;
அவை போல், Avai Pol - அவ்வாறுகள் போல,
புக்கு இலங்கு, Pukku Ilangu - (என் நெஞ்சினுள்ளே) புகுந்து விளங்குகிற
சீர் அல்லால், Seer Allaal - (உனது) கல்யாண குணங்கள் தவிர (மற்றோரிடத்தில்)
புக்கிலன், Pukkilan - ஆழ்ந்திடேன்.
696பெருமாள் திருமொழி || (தரு துயரம் தடாயேல்) - திருவித்துவக் கோட்டம்மானையே வேண்டி நிற்றல் 9
நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான்
தன்னையே தான்  வேண்டும் செல்வம் போல் மாயத்தால்
மின்னையே சேர் திகிரி வித்துவ கோட்டு அம்மா !
நின்னையே தான் வேண்டி நிற்பன் அடியேனே
வித்துவக்கோடு அம்மா!, Vithuvakkodu Amma - ;
நின்னையே வேண்டி, Ninnaiye Vendi - உன்னையே விரும்பி
நீள் செல்வம் வேண்டா தான் தன்னையே, Neel Selvam Venda Than Thannaiye - மிக்க ஸம்பத்தை விரும்பாதவனையே
தான் வேண்டும், Than Vendum - தானாகவே வந்து சேர விரும்புகிற
செல்வம் போல், Selvam Pol - அந்த ஐச்வரியம் போல,
மாயத்தால், Maayathaal - (உன்) மாயையினால் (நீ என்னை உபேக்ஷித்தாயாகிலும்)
அடியேன், Adiyen - உனது அடியவனான நான்
நின்னையே வேண்டி நிற்பன், Ninnaiye Vendi Nirpan - உன்னையே அடைய விரும்பி நிற்பேன்.
697பெருமாள் திருமொழி || (தரு துயரம் தடாயேல்) - திருவித்துவக் கோட்டம்மானையே வேண்டி நிற்றல் 10
வித்துவ கோட்டு அம்மா ! நீ வேண்டாயேயா யிடினும்
மற்றாரும் பற்றிலேன் என்று அவனை தாள் நயந்த
கொற்ற வேல்  தானை குலசேகரன் சொன்ன
நல் தமிழ் பத்தும் வல்லார் நண்ணார் நரகமே
நீ வேண்டாயே ஆயிடினும், Nee Vendaaye Aayidinum - நீ (என்னை) உபேக்ஷித்தாயாகிலும்
மற்று ஆரும் பற்றிலேன் என்று, Mattru Aarum Patrilen Endru - வேறு எவரையும் நான் சரணடைய மாட்டேன்’
என்று, Endru - என்று (அத்யவஸாயத்தை வெளியிட்டு)
அவனை தாள் நயந்து, Avanai Thaal Nayandhu - அவ்வெம்பெருமானது திருவடிகளிலேயே ஆசை கொண்டு
கொற்றம் வேல் தானை குலசேகரன் சொன்ன, Kotrham Vel Thaanai Kulashekaran Sonna - வெற்றியைத் தரும் வேலாயுதத்தையும்
நல் தமிழ் பத்தும், Nal Tamil Pathum - நல்ல தமிழ்ப்பாடல்கள் பத்தையும்
வல்லார், Vallaar - ஓத வல்லவர்கள்
நரகம் நண்ணார், Naragam Nannaar - (கொடிய பாவங்கள் செய்திருந்தாலும்) நரகத்திற் சேர மாட்டார்கள்.
698பெருமாள் திருமொழி || (ஏர் மலர் பூம் குழல்) - ஆய்ச்சியர் ஊடி அமலனை எள் கல் 1
ஏர் மலர் பூம் குழல் ஆயர் மாதர்
எனை பலர் உள்ள இவ் ஊரில் உன் தன்
மார்வு தழு வதற்கு ஆசை இன்மை அறிந்து அறிந்தே
உன் தன் பொய்யை கேட்டு
கூர் மழை போல் பனி கூதல் எய்தி
கூசி நடுங்கி யமுனை ஆற்றில்
வார் மணல் குன்றில் புலர நின்றேன்
வாசுதேவா ! வுன் தன வரவு பார்த்தே
வாசுதேவா, Vasudevaa - கண்ணபிரானே!
ஏர் மலர் பூ குழல் ஆயர் மாதர், Aer Malar Poo Kuzhal Aayar Maathar - அழகிய புஷ்பங்களை அணிந்த பரிமளம் மிக்க கூந்தலை யுடைய இடைப் பெண்கள்
எனை பலர் உள்ள, Ennai Paler Ulla - எத்தனையோ பேர்களிருக்கப் பெற்ற
இ ஊரில், I Ooril - இந்தத் திருவாய்ப்பாடியில்
உன் தன் மார்வு தழுவுதற்கு, Un Than Maarvu Thazhuvutharku - உன்னுடைய மார்வோடு அணைவதற்கு
ஆசை இன்மை அறிந்து அறிந்தே, Aasai Inmai Arindhu Arindhe - ஆசை யில்லாமையை நன்றாக அறிந்து வைத்தும்
உன் தன், Un Than - உன்னுடைய
பொய்யை கேட்டு, Poyyai Kaettu - பொய்யான வார்த்தைகளைக் கேட்டு (அவற்றை மெய்யென மயங்கி)
கூசி, Koosi - (யார் பார்த்து விடுகிறார்களோ வென்று) கூச்சமடைந்து
நடுங்கி, Nadungi - நடுங்கிக் கொண்டு
யமுனை ஆற்றில், Yamunai Aatril - யமுநா நதியில்
வார் மணல் குன்றில், Vaar Manal Kunril - பெரியதொரு மணற் குன்றிலே
உன் வரவு பார்த்து, Un Varavu Paarthu - உன் வரவை எதிர்பார்த்துக் கொண்டு
புலர நின்றேன், Pulara Nindren - போது விடியுமளவும் (அங்கேயே) காத்து நின்றேன்.
புலர்தல், Pulardhal - பொழுது விடிதல்.
699பெருமாள் திருமொழி || (ஏர் மலர் பூம் குழல்) - ஆய்ச்சியர் ஊடி அமலனை எள் கல் 2
கெண்டை ஒண் கண் மடவாள் ஒருத்தி
கீழை அகத்து தயிர் கடைய
கண்டு ஒல்லை நானும் கடைவன் என்று
கள்ள விழியை விழித்து புக்கு
வண்டு அமர் பூம் குழல் தாழ்ந்து உலாவ
வாண் முகம் வேர்ப்ப செவ்வாய் துடிப்ப
தண் தயிர் கடைந்திட்ட வண்ணம்
தாமோதரா! மெய் அறிவன் நானே
தமோதரா, Thamodhara - கண்ணபிரானே!
கீழை அகத்து, Keelai Akaththu - (என் வீட்டுக்குக்) கீழண்டை வீட்டில்
கெண்டை ஒண் கண், Kendai On Kan - கயல் போன்று அழகிய கண்களை யுடையளான
மடவாள் ஒருத்தி, Madavaal Oruththi - ஒரு பெண்ணானவள்
தயிர் கடைய கண்டு, Thayir Kadaiya Kandu - (தனியே) தயிர் கடையா நிற்பதைக் கண்டு
நானும், Naanum - நானும் (உன்னோடு கூட)
ஒல்லை கடைவன் என்று, Ollai Kadaivan Endru - சீக்கிரமாக (இத்தயிரைக்) கடைகிறேன்’ என்று (வாயாற் சொல்லி)
கள்ளம் விழியை விழித்து, Kallam Vizhiyai Vizhithu - திருட்டுப் பார்வை பார்த்து
புக்கு, Pukku - (அவளருகே) சென்று சேர்ந்து
வண்டு அமர் பூ குழல், Vandu Amar Poo Kuzhal - வண்டுகள் படிந்த புஷ்பங்களை அணிந்த மயிர் முடியானது
தாழ்ந்து உலாவ, Thazhndu Ulaava - அவிழ்ந்து அசையும் படியாகவும்
வாள் முகம், Vaal Mugam - ஒளி பொருந்திய முகமானது
வேர்ப்ப, Veerppa - வேர்க்கும் படியாகவும்
செம் வாய் துடிப்ப, Sem Vaai Thudippa - சிவந்த அதரமானது துடிக்கும் படியாகவும்
தண் தயிர், Than Thayir - குளிர்ந்த தயிரை
நீ கடைந்திட்ட வண்ணம், Nee Kadainditta Vannam - நீ கடைந்த படியை
நான் மெய் அறிவன், Naan Mey Arivan - நான் மெய்யே அறிவேன்.
700பெருமாள் திருமொழி || (ஏர் மலர் பூம் குழல்) - ஆய்ச்சியர் ஊடி அமலனை எள் கல் 3
கரு மலர் கூந்தல் ஒருத்தி தன்னை
கடை கணித்து ஆங்கே ஒருத்தி தன் பால்
மருவி மனம் வைத்து மற்று ஒருத்திக்கு உரைத்து
ஒரு பேதைக்கு பொய் குறித்து
புரி குழல் மங்கை ஒருத்தி தன்னை
புணர்த்தி அவளுக்கும் மெய்யன் அல்லை
மருது இறுத்தாய் ! உன் வளர்த்தி யோடே
வளர்கின்றதால் உன் தன் மாயை தானே
மலர் கரு கூந்தல், Malar Karu Koondhal - புஷ்பங்களை அணிந்துள்ள கறுத்த மயிர் முடியை யுடையவளான
ஒருத்தி தன்னை, Oruththi Thannai - ஒரு பெண் பிள்ளையை
கடைக் கணித்து, Kadaik Kaniththu - கடைக் கண்ணால் பார்த்து விட்டு
ஆங்கே, Aange - அப்படியிருக்கச் செய்தே.
ஒருத்தி தன் பால் மனம் மருவி வைத்து, Oruththi Than Paal Manam Maruvi Vaiththu - வேறொரு பெண் பிள்ளை யிடத்தில் மனதைப் பொருந்தச் செய்து, (அவளையும் விட்டு)
மற்று ஒருத்திக்கு, Mattru Oruththikku - வேறொரு பெண்ணிடத்தில்
உரைத்து, Uraiththu - உனக்கு நான் அடியேன் என்று சொல்லி வைத்து
ஒரு பேதைக்கு, Oru Paethaikku - வேறொரு பெண்ணுக்கு
பொய் குறித்து, Poi Kuriththu - (ஸம்ச்லேஷத்துக்காகப்) பொய்யாகவே (ஒரு ஏகாந்தஸ்தலத்தைக்) குறிப்பிட்டு வைத்து,
புரி குழல் மங்கை ஒருத்தி தன்னை, Puri Kuzhal Mangai Oruththi Thannai - கடை குழன்று சுருண்ட கூந்தலை யுடையவளான ஒரு இளம் பெண்ணோடு
புணர்தி, Punarthi - கலவி செய்யா நின்றாய்;
அவளுக்கும், Avalukkum - அந்தப் பெண்ணுக்கும்
மெய்யன் அல்லை, Meiyyan Allai - பொய்யனாயிரா நின்றாய்;
மருது இறுத்தாய், Maruthu Iruththai - இரட்டை மருதமரங்களை முறித்துத் தள்ளினவனே!
உன் வளர்த்தியோடே, Un Valarththiyodae - நீ வளர்வதோடு கூடவே
உன் தன் மாயை, Un Than Maayai - உன்னுடைய கள்ளங் கவடுகளும்
வளர்கின்றது, Valarkindrathu - வளர்ந்து வாரா நின்றன;
ஆல், Aal - அந்தோ!.
701பெருமாள் திருமொழி || (ஏர் மலர் பூம் குழல்) - ஆய்ச்சியர் ஊடி அமலனை எள் கல் 4
தாய் முலை பாலில் அமுது இருக்க
தவழ்ந்து தளர் நடை இட்டு சென்று
பேய் முலை வாய் வைத்து நஞ்சை வுண்டு
பித்தன் என்றே பிறர் ஏச நின்றாய்
ஆய மிகு காதலோடு யான் இருப்ப
யான் விட வந்த என் தூதி யோடே
நீ மிகு போகத்தை நன்கு உகந்தாய்
அதுவும் உன் கோரம்புக்கு ஏற்கும் அன்றே
தாய் முலையில், Thaai Mulail - தாயாகிய யசோதைப் பிராட்டியினுடைய முலைகளில்
பால் அமுது இருக்க, Paal Amuthu Irukka - போக்யமான பால் இருக்கச் செய்தேயும் (அதனை விரும்பாமல்)
தவழ்ந்து, Thavazhnthu - தவழ்ந்து கொண்டு
தளர் நடை இட்டு சென்று, Thalar Nadai Ittu Senru - தட்டுத் தடுமாறி நடந்து சென்று
பேய் முலை வாய் வைத்து, Pei Mulai Vaai Vaitthu - பூதனையினுடைய முலையிலே வாயை வைத்து
நஞ்சை உண்டு, Nanjai Undu - (அம்முலை மீது தடவிக் கிடந்த) விஷத்தை உறிஞ்சி அமுது செய்து
பித்தன் என்று, Piththan Endru - (இப்படி செய்தது காரணமாக) ‘பைத்தியக்காரன்’ என்று
பிறர் ஏச நின்றாய், Piraar Aesa Nindraai - அயலாரெல்லாரும் பரிஹஸிக்கும்படி நின்ற பிரானே!
யான், Yaan - நான்
ஆய் மிகு காதலொடு இருப்ப நீ, Aai Migu Kaadhalodu Iruppa Nee - மிகவும் அதிகமான ஆசையோடு எதிர்பார்த்திருக்கையில் , நீ
யான் விட வந்த என் தூதியோடே, Yaan Vida Vantha En Thoodhiyodae - என்னால் தூதனுப்பப்பட்டு (உன்னிடம்) வந்த என் வேலைக்காரியோடே
மிகு போகத்தை, Migu Pogaththai - நல்ல போக ரஸங்களை
நன்கு உகந்தாய், Nangu Ugandhaai - நன்றாக அனுபவித்தாய்
அதுவும், Adhuvum - அந்தச் செய்கையும்
உன் கோரம்புக்கு, nan - உனது தீம்புக்கு
ஏற்கும் அன்றே, nan - தகுந்திருக்குமாய்த்து
702பெருமாள் திருமொழி || (ஏர் மலர் பூம் குழல்) - ஆய்ச்சியர் ஊடி அமலனை எள் கல் 5
மின் ஒத்த நுண் இடையாளை கொண்டு
வீங்கு இருள் வாய் என் தன் வீதி யூடே
பொன் ஒத்த வாடைக்குக் கூடல் இட்டு
போகின்ற போது நான் கண்டு நின்றேன்
கண் உற்றவளை நீ கண்ணால் இட்டு
கை விளிக்கின்றதும் கண்டே நின்றேன்
என்னுக்கு அவளை விட்டு இங்கு வந்தாய் ?
இன்னம் அங்கே நட நம்பி ! நீயே
மின் ஒத்த நுண் இடையாளை கொண்டு, nan - மின்னல் போன்று ஸூக்ஷ்மமான இடையையுடைய ஒரு பெண்ணை அணைத்துக் கொண்டு
வீங்கு இருள்வாய், nan - நிபிடமான (மிக்க) இருள் வேளையிலே
பொன் ஒத்த ஆடை, nan - பீதாம்பரத்தாலே
குக்கூடல் இட்டு, nan - முட்டாக்கிட்டுக் கொண்டு
என்தன் வீதி ஊடே, nan - என் வீதி வழியே
போகின்ற போது, nan - (அவளும் நீயுமாகப்) போகும் போது
நான் கண்டு நின்றேன், nan - நான் பார்த்துக் கொண்டிருந்தேன்:
கண்ணுற்றவளை, nan - கண்ணில் தென்பட்ட (வேறொருத்தியை)
கண்ணால் இட்டு, nan - (உனக்கே அற்றுத் தீரும்படி ) கடாக்ஷித்து
கை விளிக்கின்றதும், nan - (இன்னவிடத்தே வாவென்று) கையாலே அழைத்து ஸம்ஜ்ஞை பண்ணினதையும்
கண்டே நின்றேன், nan - பார்த்துக் கொண்டு தானிருந்தேன்;
அவளை விட்டு, nan - அந்தப் பெண் மணியை விட்டு
இங்கு, Ingu - என்னிடத்திற்கு
என்னுக்கு வந்தாய், nan - ஏதுக்காக வந்தாய்!
நம்பி, nan - ஸ்வாமிந்!
இன்னம் அங்கே நட, nan - இனி மேலும் நீ அவர்களிடத்திற்கே நடப்பாயாக.
என்ற கருத்துக்களை விரித்துக் கொள்க ( குக்கூடல், nan - முட்டாக்கு )
703பெருமாள் திருமொழி || (ஏர் மலர் பூம் குழல்) - ஆய்ச்சியர் ஊடி அமலனை எள் கல் 6
மற்பொரு தோள் உடை வாசுதேவா !
வல்வினையேன் துயில் கொண்டவாறே
இற்றை இரவிடை ஏமத்து என்னை
இன் அணை மேல் இட்டு அகன்று நீ போய்
அற்றை இரவும் ஓர் பிற்றை நாளும்
அரிவையரோடும் அணைந்து வந்தாய்
எற்றுக்கு நீ என் மருங்கில் வந்தாய்?
எம்பெருமான்! நீ எழுந்து அருளே
மல் பொரு தோள் உடை வாசுதேவா, nan - மல்லரோடு போர் செய்த தோள்களை யுடைய, கண்ணபிரானே!
வல் வினையேன், Val Vinaiyen - மஹாபாவியான நான்
துயில் கொண்டவாறே, nan - தூங்குவதற்கு ஆரம்பித்தவுடனே
இற்றை இரவு இடை ஏமத்து, Ittai Iravu Idai Aemathu - அன்றிரவு நடுச் சாமத்திலே
இன் அணைமேல், In Anmaimel - இனிய படுக்கையிலே
என்னை இட்டு, Ennai Ittu - என்னைப் படுக்க விட்டு
நீ அகன்று போய், Nee Aghandru Poi - நீ விலகிப் போய்
அற்றை இரவும் (அகன்று போன), Atrai Iravum Aghandru Pona - அன்றிரவும்
ஓர் பிற்றை நாளும், Oru Pitrai Naalum - அதற்கு மறுநாளும்
அரிவையரோடும், Arivaiyarodum - (எல்லாப் ) பெண்களோடும்
அணைந்து வந்தாய், Anaindhu Vandhai - கலவி செய்து வந்தாய்;
நீ, Nee - இப்படிப்பட்ட நீ,
என் மருங்கில் எற்றுக்கு வந்தாய், En Marungil Etrukku Vandhai - என்னருகில் ஏதுக்காக வந்தாய்!
எம்பெருமான், Emperumaan - என் நாயகனே!
நீ எழுந்தருள், Nee Ezhundharul - நீ (அவர்களிடமே) போகக் கடவை.
வல்வினையேன், Valvinaiyen - நீ என்னை ஒருத்தியையே விரும்பி மற்றையோரைக் கண்ணெடுத்துப் பாராமலிருப்பதற் குறுப்பான
704பெருமாள் திருமொழி || (ஏர் மலர் பூம் குழல்) - ஆய்ச்சியர் ஊடி அமலனை எள் கல் 7
பைய அரவின் அணை பள்ளியினாய் !
பண்டேயோம் அல்லோம் நாம் நீ வுகக்கும்
மை அரி ஒண் கண்ணினாரும் அல்லோம்
வைகி எம் சேரி வர ஒழி நீ
செய்ய உடையும் திரு முகமும்
செங்கனி வாயும் குழலும் கண்டு
பொய் ஒரு நாள் பட்டதே அமையும்
புள்ளுவம் பேசாதே போகு நம்பி !
பை அரவு இன் அணை பள்ளியினாய், Pai Aravu In Anai Palliyinai - பாடங்களையுடைய இனிய சேஷ சயனத்திலே பள்ளி கொள்பவனே!
நம்பி, nan - பூர்ணனானவனே!
நாம், Naam - நாங்கள்
பண்டையோம் அல்லோம், Pandaiyom Allom - உன் மாயைப் பேச்சு வலையில் அகப்படுகைக்கு பழைய படி ஏமாந்தவர்களல்ல
நீ உகக்கும், Nee Ugakkum - நீ விரும்பத் தக்கவர்களாய்
மை, Mai - மையணிந்து
அரி ஒண், Ari On - மான் போலழகிய
கண்ணினாரும் அல்லோம், Kanninaarum Allom - கண் படைத்தவர்களான பெண்களுமல்லோம்;
வைகி, Vaiki - கால விளம்பஞ் செய்து
எம் சேரி, Em Cheri - எமது அகத்துக்கு
வரவு ஒழி நீ, Varavu Ozhi Nee - வருவதை இனி நீ விட்டிடு;
செய்ய உடையும், Seyya Udayum - அழகிய பீதாம்பரத்தையும்
திரு முகமும், Thiru Mugamum - திரு முக மண்டலத்தையும்
செம் கனி வாயும், Sem Kani Vayum - சிவந்த கோவைக்கனி போன்ற அதரத்தையும்
குழலும், Kuzhalum - கூந்தல் முடியையும்
கண்டு, Kandu - பார்த்து (அவற்றில் ஈடுபட்டு)
பொய், Poi - உன் பொய் வார்த்தைகளில்
ஒரு நாள் பட்டதே அமையும், Oru Naal Pattathe Amayum - ஒரு நாள் பட்டபாடு போதுமே;
புள்ளுவம், Pulluvalam - க்ருத்ரிமமான வார்த்தைகளை
பேசாதே, Pesadhe - (மறுபடியும்) சொல்லாமல்
போகு, Pogu - (உன் தேவிமார்களிடத்தே) போய்ச் சேர்.
புள்ளுவம், Pulluvalam - வஞ்சகம்.
705பெருமாள் திருமொழி || (ஏர் மலர் பூம் குழல்) - ஆய்ச்சியர் ஊடி அமலனை எள் கல் 8
என்னை வருக என குறித்திட்டு
இன மலர் முல்லையின் பந்தர் நீழல்
மன்னி அவளை புணர புக்கு
மற்று என்னை கண்டு உழறா நெகிழ்ந்தாய்
பொன் நிற ஆடையை கையில் தாங்கி
பொய் அச்சம் காட்டி நீ போதியேலும்
இன்னம் என் கையகத்து ஈங்கு ஒரு நாள் வருதியேல்
என் சினம் தீர்வன் நானே
என்னை, Ennai - என்னை
வருக என, Varuga Ena - (இன்னவிடத்திற்கு) வாவென்று
குறித்திட்டு, Kurithittu - ஸந்கேதம் பண்ணி வைத்து விட்டு
இனம் மலர் முல்லையின் பந்தர் நீழல், Inam Malar Mullaiyin Pandhar Neezhal - நிறைந்த மலர்களை யுடைய முல்லைப் பந்தலின் நிழலிலே
மன்னியவளை, Manniya Valai - (வெகு காலமாய்ப்) பதுங்கி நின்ற ஒருத்தியை
புணர புக்கு, Punar Pukku - ஸம்ச்லேஷிக்கப் போய்
மற்று என்னை கண்டு, Mattru Ennai Kandu - பிறகு என்னைப் பார்த்து
உழறா, Uzharah - கலங்கி
நெகிழ்ந்தாய், Negizhndhai - அப்பாலே நழுவினாய்;
பொன் நிறம் ஆடையை, Pon Niram Aadai - பீதாம்பரத்தை
கையில் தாங்கி, Kaiyil Thangi - கையிலே தாங்கிக் கொண்டு
பொய், Poi - பொய்யாக
அச்சம் காட்டி, Acham Kaatti - நீ எனக்கு அஞ்சினமாக நான் பாவிக்கும்படி செய்து கொண்டு
நீ போதி ஏலும், Nee Pothi Aelum - நீ (என் கைக்கு அகப்படாமல்) ஓடிப் போன போதிலும்
இன்னம், Innam - இனி
ஈங்கு, Eengu - இங்கே
என் கை அகத்து, En Kai Akathu - என்னிடத்திற்கு
ஒரு நாள் வருதிஏல், Oru Naal Varudheel - ஒரு நாளாகிலும் வருவாயாகில் ( அப்போது)
நான் என் சினம் தீர்வன், Naan En Sinam Theervan - நான் என் கோபத்தை தீர்த்துக் கொள்வேன்.
அதாவது,, Adhavadhu - மறுபடியும் நீ என் கையில் அகப்படும்போது உன்னை நான் கையாலடித்தும் காலால் துகைத்தும்
706பெருமாள் திருமொழி || (ஏர் மலர் பூம் குழல்) - ஆய்ச்சியர் ஊடி அமலனை எள் கல் 9
மங்கல நல் வனமாலை மார்வில் இலங்க
மயில் தழை பீலி சூடி
பொங்கிள வாடை அரையில் சாத்தி
பூம் கொத்து காதில் புணர பெய்து
கொங்கு நறும் குழலார்களோடு
குழைந்து குழல் இனிது ஊதி வந்தாய்
எங்களுக்கே ஒரு நாள் வந்தூத
உன் குழலின் இன் இசை போதராதே
மங்கலம், Mangalam - மங்களகரமாய்
நல், Nal - விலகூஷணமான
வனமாலை, Vanamalai - வனமாலையானது
மார்பில், Marbil - மார்விலே
இலங்க, Ilanga - பிரகாசிக்க
மயில் தழைப்பீலி, Mayil Thazhaippili - மயிலிறகுகளே
சூடி, Soodi - சூடிக் கொண்டும்
பொங்கு இள ஆடை, Pongu Ila Aadai - பளபளவென்ற மெல்லிய ஆடையை
அரையில் சாத்தி, Araiil Saathi - அரையிலே சாத்திக் கொண்டும்
பூ கொத்து, Poo Kothu - பூங்கொத்துக்களை
காதில், Kaadhil - காதிலே
புணரப் பெய்து, Punarap Peythu - மிகவும் பொருந்த அணிந்து கொண்டும்
கொங்கு நறு குழலார்களோடு, Kongu Naru Kuzhalarkalodu - தேன் மணம் கமழ்கின்ற கூந்தலை யுடைய பெண்களோடு
குழைந்து, Kuzhaindhu - ஸம்ச்லெஷித்து (அத்தாலுண்டான ஸந்தோஷத்துக்குப் போக்கு வீடாக)
குழல், Kuzhal - புல்லாங் குழலை
இனிது ஊதி வந்தாய், Inidhu Oothi Vandhai - போக்யமாக ஊதிக் கொண்டு வந்தாய்;
ஒரு நாள், Oru Naal - ஒரு நாளாகிலும்
எங்களுக்கே, Engalukke - எங்களுக்காக
வந்து ஊத, Vandhu Ootha - வந்து ஊதும்படி
உன் குழலின் இசை, Un Kuzhalin Isai - உனது குழலின் இசையானது
போதராது, Potharathu - வர மாட்டாது காண்.
707பெருமாள் திருமொழி || (ஏர் மலர் பூம் குழல்) - ஆய்ச்சியர் ஊடி அமலனை எள் கல் 10
அல்லி மலர் திரு மங்கை கேள்வன் தன்னை
நயந்து இள ஆய்ச்சிமார்கள்
எல்லி பொழுதினில் ஏமத்தூடி
எள்கி வுரைத்த வுரையதனை
கொல்லி நகர்க்கு இறை கூடல் கோமான்
குலசேகரன் இன் இசையில் மேவி
சொல்லிய இன் தமிழ் மாலை பத்தும்
சொல்ல வல்லார்க்கு இல்லை துன்பம் தானே
இள ஆய்ச்சிமார்கள், Ila Aaychchimargal - இளமை தங்கிய இடைப் பெண்கள்
அல்லி மலர் திருமங்கை கேள்வன் தன்னை நயந்து, Alli Malar Thirumangai Kelvan Thannai Nayandhu - தாமரைப் பூவில் பிறந்த பிராட்டிக்குக் கொழுநனான கண்ண பிரானை ஆசைப்பட்டு,
எல்லி ஏமப் பொழுதினில், Elli Emapp Pozhudhinil - ராத்ரியின் நடுச் சாமத்திலே
ஊடி, Oodi - ப்ரணய கலஹம் பண்ணி
எள்கி, Elgi - ஈடுபட்டு
உரைத்த, Uraitha - சொன்ன
உரை அதனை, Urai Adhanai - பாசுரங்களை (உட்கொண்டு)
கொல்லி நகர்க்கு இறை, Kolli Nagarkku Irai - கொல்லி என்னும் நகருக்குத் தலைவரும்
கூடல் கோமான், Koodal Koman - மதுரைக்கு அரசருமான
குல சேகரன், Kula Seakaran - குலசேராழ்வார்
இன் இசையில் மேவி, In Isaiyil Mevi - இனிய பண்ணிலே பொருந்த
சொல்லிய, Solliya - அருளிச் செய்த
இன் தமிழ், In Tamil - பரம போக்யமான தமிழிலாகிய
மாலை, Maalai - மாலாரூபமான
பத்தும், Pathum - இப் பத்துப் பாட்டையும்
சொல்ல வல்லார்க்கு, Solla Vallar Kku - ஒத வல்லவர்களுக்கு
துன்பம் இல்லை, Thunbam Illai - ஸம்ஸார துக்கம் அணுகாது.
708பெருமாள் திருமொழி || (ஆலை நீள் கரும்பு) - சேய் வளர் காட்சியின் சீரை யசோதை போல் தாய் தேவகி பெறாத் தாழ் வெண்ணிப் புலம்பல் 1
ஆலை நீள் கரும்பு அன்னவன் தாலோ
அம்புயத் தடம் கண்ணினன் தாலோ
வேலை நீர் நிறத் தன்னவன் தாலோ
வேழ போதக மன்னவன் தாலோ
ஏலவார் குழல் என் மகன் தாலோ
என்று என்று உன்னை என் வாய் இடை நிறைய
தால் ஒலித்திடும் திரு வினை இல்லாத
தாயிற் கடை யாயின தாயே
ஆலை நீள் கரும்பு அன்னவன், Aalai Neel Karumbu Annavan - ஆலையிலிட்டு ஆடத் தகுந்த நீண்ட கரும்பு போன்ற கண்ணனே!
தாலோ, Thalo - (உனக்குத்) தாலாட்டு
அம்புயம் தட கண்ணினன், Ambuyam Thada Kanninann - தாமரை போன்று விசாலமான திருக் கண்களை உடையவனே!
தாலோ, Thalo - தாலேலோ;-
வேலை நீர் நிறத்து அன்னவன், Velai Neer Nirathu Annavan - கடலின் நிறம் போன்ற நிறத்தை யுடையவனே!.
தாலோ, Thalo - தாலேலோ
வேழம் போதகம் அன்னவள், Vezham Podhagam Annaval - யானைக் குட்டி போன்றவனே!
தாலோ, Thalo - தாலேலோ;
ஏலம் வார் குழல், Elam Vaar Kuzhal - பரிமளம் மிக்கு நீண்ட திருக் குழலை யுடைய!
என் மகன், En Magan - என் மகனே!
தாலோ, Thalo - தாலேலோ;
என்று என்று, Endru Endru - இப்படி பலகாலுஞ்சொல்லி
என் வாயிடை நிறைய, En Vayidai Niraiya - என் வாய் திருப்தி யடையும்படி
உன்னை தால் ஒலித்திடும் திருவினை இல்லா தாயரில், Unnai Thaal Olithidum Thiruvinai Illa Thayarlil - உன்னை தாலாட்டுகையாகிற ஸம்பத்து இல்லாத தாய்மார்களில்
கடை ஆயின தாய், Kadai Aayin Thay - கடையான தாயாயிரா நின்றேன் நான் (என்கிறாள் தேவகி.)
ஆலையிலிட்டு ஆடத்தகுந்த கரும்பு என்றது, Aalaiyilittu Aadathakunda Karumbu Endrathu - நன்றாக முற்றி ரஸம் நிரம்பிய கரும்பு என்றவாறு;
அதுபோன்றவனே! என்றது, Adhuporandavaney Endrathu - “ஸர்வ ரஸ ஸர்வ கந்த “ என்று உபநிஷத்தில் ஓதியுள்ளபடி –
தாலோ, Thalo - தால் – நாக்கு குழந்தைகளை உறங்கப் பண்ணுவதற்காகப் பெண்கள் நாவை அசைத்துச் சொல்லும் சொலவு.
709பெருமாள் திருமொழி || (ஆலை நீள் கரும்பு) - சேய் வளர் காட்சியின் சீரை யசோதை போல் தாய் தேவகி பெறாத் தாழ் வெண்ணிப் புலம்பல் 2
வடி கொள் அஞ்சனம் எழுது செம் மலர் கண் மருவி
மேல் இனிது ஒன்றினை நோக்கி
முடக்கி சேவடி மலர் சிறு கரும் தாள்
பொலியும் நீர் முகில் குழவியே போலே
அடக்கி ஆர செஞ்சிறு விரல் அனைத்தும்
அம் கை யோடு அணைந்து ஆனையில் கிடந்த
கிடக்கை கண்டிட பெற்றிலன் அந்தோ!
கேசவா ! கெடுவேன் கெடுவேனே
வடி கொள், Vadi Kol - கூர்மையை யுடைத்தாய்
அஞ்சனம் எழுது, Anjanam Ezhuthu - மையிடப் பெற்றதாய்
செம் மலர், Sem Malai - செந்தாமரை மலரை ஒத்ததான
கண், Kan - கண்களாலே
மேல் ஒன்றினை, Mel Onrinai - மேற்கட்டியிலே தொங்க விட்டிருக்கும் கிளி முதலியவற்றில் ஒரு வஸ்துவை
இனிது, Inidhu - இனிதாக
மருவி நோக்கி, Maruvi Nookki - பொருந்தப் பார்த்துக் கொண்டும்
கரு தாள், Karuthal - கறுத்த புறந்தாளை யுடையதும்
மலர், Malar - செந்தாமரை மலரை யொத்து
சிறு, Siru - சிறுத்த
சே அடி, Sae Adi - சிவந்த அகவாயை உடையதுமான திருவடிகளை
முடக்கி, Mudakki - முடக்கிக் கொண்டும்
நீர் பொலியும், Neer Poliyum - (கழுத்தளவும் பருகின) நீர் விளங்கப் பெற்ற
முகில் குழவி போல, Mugil Kuzhavi Pola - மேகக் குட்டிப் போல,
செம்சிறு விரல் அனைத்தும், Semsiru Viral Anaithum - அழகிய சிறுத்த திரு விரல்களெல்லாவற்றையும்
அம் கையோடு, Am Kaiyodu - உள்ளங்கையிலே
அடக்கி ஆர, Adakki Aara - அடங்கும் படி
அணைந்து, Anaindhu - முடக்கிப் பிடித்துக் கொண்டும்
ஆனையின் கிடந்த கிடக்கை, Anainai Kidandha Kidakkai - ஆனை கிடக்குமா போலே பள்ளி கொண்டருளுமழகை.
கண்டிட பெற்றிலேன், Kandida Pettrilain - கண்டு அநுபவிக்கப் பெறாத பாவியானேன்;
அந்தோ, Andho - ஐயோ!
கேசவா, Kesavaa - கண்ண பிரானே!
கெடுவேன் கெடுவேன், Keduvein Keduvein - ஒன்று மநுபவிக்கப்பெறாத பெரும் பாவியானேன்.
710பெருமாள் திருமொழி || (ஆலை நீள் கரும்பு) - சேய் வளர் காட்சியின் சீரை யசோதை போல் தாய் தேவகி பெறாத் தாழ் வெண்ணிப் புலம்பல் 3
முந்தை நன் முறை அன்புடை மகளிர்
முறை முறை தம் தம் குறங்கிடை இருத்தி
எந்தையே ! என் தன் குல பெரும் சுடரே !
எழு முகில் கணத்து எழில் கவரேறே!
உந்தை யாவன் என்று உரைப்ப நின் செங்கேழ்
விரலினும் கடை கண்ணினும் காட்ட
நந்தன் பெற்றனன் நல்வினை இல்லா
நாங்கள் கோன் வாசுதேவன் பெற்றிலனே
அன்பு உடை, Anbu Udai - ப்ரீதியை யுடையவர்களான
முந்தை நல் முறை மகளிர், Mundai Nal Murai Makalir - பரம்பரையாக வருகிற நல்ல உறவு முறையை யுடைய பெண்கள்
தம் தம் குறங்கிடை, Tham Tham Kurangidai - தங்கள் தங்கள் துடைகளிலே
முறை முறை, Murai Murai - க்ரமம் க்ரமமாக
இருத்தி, Irudhi - வைத்துக் கொண்டு
எந்தையே, Endhaie - “என் அப்பனே!
என் தன் குலம் பெருசுடரே, En Than Kulam Perusudare - எங்கள் குலத்துக்குப் பெருத்ததொரு விளக்கானவனே!
எழு முகில் கணத்து, Ezhu Mukil Kanathu - (கடலில் நீரை முகந்து கொண்டு) மேலேழுகின்ற மேக ஸமூஹத்தினுடைய
எழில் கவர், Ezil Kavar - அழகைக் கவர்ந்து கொண்ட
ஏறே, Ere - “ காளை போன்றவனே!” (என்றிப்படி பலவாறாகத் துதித்து)
உந்தையாவன் என்று உரைப்ப, Undaiyavan Endru Uraippa - உன் தகப்பனார் யார்? (காட்டு,) என்றவளவிலே
நின், Nin - உன்னுடைய
செம் கேழ் விரலினும், Sem Kezh Viralinum - சிவந்து சிறந்த விரலினாலும்
கடை கண்ணினும், Kadai Kanninum - கடைக் கண்ணாலும்
காட்ட, Kaata - (இன்னார் என் தகப்பனார் என்று) காட்ட (அந்தப் பாக்கியத்தை)
நந்தன் பெற்றனன், Nandan Pettran - நந்தகோபர் பெற்றார்;
நல் வினை இல்லா நங்கள் கோன், Nal Vinai Illa Nangal Kon - பாக்யஹீநையான என்னுடைய பர்த்தாவான
வசுதேவன், Vasudevan - வஸுதேவர்
பெற்றிலன், Pettrilan - (நந்தகோபர் பெற்ற பாக்கியத்தைப்) பெறவில்லை.
711பெருமாள் திருமொழி || (ஆலை நீள் கரும்பு) - சேய் வளர் காட்சியின் சீரை யசோதை போல் தாய் தேவகி பெறாத் தாழ் வெண்ணிப் புலம்பல் 4
களி நிலா எழில் மதி புரைமுகமும்
கண்ணனே ! திண் கை மார்வும் திண் தோளும்
தளி மலர் கரும் குழல் பிறை யதுவும்
தடம் கொள் தாமரை கண்களும் பொலிந்த
இளமை இன்பத்தை இன்று என் தன் கண்ணால்
பருவேற்க்கு இவள் தாய் என நினைந்த
அளவில் பிள்ளைமை இன்பத்தை இழந்த
பாவியேன் எனது ஆவி நில்லாதே
கண்ணனே களி நிலா, Kannane Kali Nila - ஸ்ரீ கிருஷ்ணனே! ஆநந்தத்தை விளைவிக்கும் நிலாவை யுடைய
எழில் மதி புரை முகமும் திண் கை, Ezil Mathi Purai Mukamum Thin Kai - பூர்ண சந்திரனை ஒத்த திருமுகமும் திண்ணிதான திருக் கைகளும்
மார்வும், Marvum - திரு மார்பும்
திண் தோளும், Thin Tholum - வலிமை பொருந்திய திருத் தோள்களும்
தளிர் மலர் கரு குழல், Thalir Malar Karu Kuzhal - தளிரையும் மலரையும் முடைத்தாய்க் கறுத்த திருக் குழற்கற்றையும்
பிறை அதுவும் தடங்கொள், Pirai Adhuvum Thadankol - அஷ்டமீ சந்திரன் போன்ற திருநெற்றியும் விசாலமான
தாமரை கண்களும், Thamarai Kangkalum - தாமரை போன்ற திருக் கண்களும் (ஆகிய இவை)
பொலிந்த இளமை இன்பத்தை, Polintha Ilamai Inbathai - அழகு பெற்று விளங்கும்படியான யௌவநாவஸ்தையின் போக்யதையை
இன்று, Indru - இப்போது
என் தன் கண்ணால், En Than Kannal - என்னுடைய கண்ணாலே
பருகுவேற்கு, Paruguveyru - நான் அநுபவியா நின்றாலும்
இவள் தாய் என நினைந்த, Ival Thai Ena Ninaindha - (இவள் என்னுடைய) தாய் என்று நினைப்பதற்குத் தகுதியான
பிள்ளைமை, Pillaimai - சைசவப் பருவத்திலுண்டான
அளவு இல் இன்பத்தை, Alavu Il Inbathai - அளவில்லாத ஆநந்தத்தை
இழந்த, Izhanda - அநுபவிக்கப் பெறாமல் இழந்த
பாவியேன் எனது, Paviyen Enathu - பாவியான என்னுடைய
ஆவி நில்லாது, Aavi Nilladhu - உயிரானது தரித்து நிற்க வழி யில்லையே!.
712பெருமாள் திருமொழி || (ஆலை நீள் கரும்பு) - சேய் வளர் காட்சியின் சீரை யசோதை போல் தாய் தேவகி பெறாத் தாழ் வெண்ணிப் புலம்பல் 5
மருவு நின் திரு நெற்றியில் சுட்டி அசை தர
மணி வாய் இடை முத்தம்
தருதலும் உன் தன் தாதையை போலும்
வடிவு கண்டு கொண்டு உள்ளம் உள் குளிர
விரலை செஞ்சிறு வாய் இடை சேர்த்து
வெகுளியாய் நின்று உரைக்கும் அவ் வுரையும்
திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம்
தெய்வ நங்கை யசோதை பெற்றாளே
நின் திரு நெற்றியில் மருவும் சுட்டி அசை தர, Nin Thiru Nettiyil Maruvum Sutti Asai Thara - உன்னுடைய திரு நெற்றியிலே பொருந்தியிருக்கிற சுட்டியானது அசையும்படி
மணிவாயிடை முத்தம் தருதலும் உன்தன் தாதையை போலும், Manivayidai Muththam Tharuthalum Unthan Thathaiya Polum - அழகிய வாயிலுண்டான
வடிவு, Vadivu - (உன்) வடிவழகை
கண்டு கொண்டு, Kandu Kondo - (நான்) பார்த்து
உள்ளம் டீள் குளிர, Ullam Teel Kulira - (கடலில் நீரை முகந்து கொண்டு) மேலேழுகின்ற மேக ஸமூஹத்தினுடைய
செம் சிறு வாயிடை, Sem Siru Vayidai - சிவந்த சிறிய திருவாயிலே
விரலை சேர்த்து வெகுளியாய் நின்று உரைக்கும் அ உரையும், Viralai Serthu Veguliyai Nindru Uraikkum A Uraiyum - விரல்களை வைத்துக் கொண்டு (நீ) சீற்றத்தோடே
ஒன்றும் திரு இலேன் பெற்றிலேன், Ondrum Thiru Ileen Pettrileen - ஒன்றையும் பாக்யமற்றவளான நான் அநுபவிக்கப்பெறவில்லை.
தெய்வ நங்கை எசோதை, Deiva Nangkai Eshodhai - ‘தெய்வமாது’ என்று சொல்ல லாம்படியான யசோதைப் பிராட்டி
எல்லாம் பெற்றாளே, Ellam Pettraale - அந்த பால்யசேஷ்டிதங்கள் எல்லாவற்றையும் அநுபவிக்கப் பெற்றாளே!.
வெகுளியாய் நின்று, Veguliyai Nindru - சீறுபாறென்று பேசுதல் குழந்தைகளின் இயல்வாம்.
713பெருமாள் திருமொழி || (ஆலை நீள் கரும்பு) - சேய் வளர் காட்சியின் சீரை யசோதை போல் தாய் தேவகி பெறாத் தாழ் வெண்ணிப் புலம்பல் 6
தண் தாமரை கண்ணனே! கண்ணா !
தவழ்ந்து எழுந்து தளர்ந்த்ததோர் நடையால்
மண்ணில் செம் பொடி ஆடி வந்து என் தன்
மார்வில் மன்னிடப் பெற்றிலேன் அந்தோ !
வண்ண செஞ்சிறு கை விரல் அனைத்தும்
வாரி வாய் கொண்ட அடிசிலின் மிச்சில்
உண்ண பெற்றிலேன் ஓ! கொடு வினையேன்
என்னை என் செய்ய பெற்றது எம்மோயே
தண் அம் தாமரை கண்ணனனே, Than Am Thamarai Kannananai - குளிர்ந்த அழகிய தாமரை போன்ற திருக்கண்களை யுடையவனே
கண்ணா தவழ்ந்து எழுந்து, Kannaa Thavazhndhu Ezhundhu - கண்ணபிரானே (நீ) தவழ்ந்து கொண்டுஎழுந்திருந்து
தளர்ந்தது ஓர் நடையால், Thalarndhadhu Oru Nadayal - தட்டுத்தடுமாறி நடப்பதாகிற ஒரு நடையினால்
செம்மண் பொடியில், Semman Podiyil - சிவந்த புழதி மண்ணிலே
ஆடி வந்து, Aadi Vandu - விளையாடி (அக்கோலத்தோடே) வந்து
என் தன் மார்வில், En Than Maarvil - என்னுடைய மார்விலே
மன்னிட பெற்றிலேன் அந்தோ, Mannida Pettrileen Andho - நீ அணையும் படியான பாக்கியத்தை பெற்றிலேன்; இஃது என்ன தெளர்ப்பாக்கியம்!
வண்ணம் செம், Vannam Sem - அழகு பெற்றுச் சிவந்து
சிறு, Siru - சிறிதான
கை விரல் அனைத்தும், Kai Viral Anaithum - கைவிரல்களெல்லா வற்றாலும்
வாரி வாய்க் கொண்ட அடிசிலின் மிச்சல் உண்ணப் பெற்றிலேன், Vaari Vayk Konda Adichilin Michchal Unnap Pettrileen - வாரிக் கொண்டு அமுது செய்த ப்ரஸாதத்தினுடைய
கொடுவினையேன், Koduvinaiyen - (இவற்றை யெல்லாம் நான் இழக்கும் படியாக) மஹா பாபத்தைப் பண்ணினேன்;
ஓ எம்மோய் என்னை என் செய்ய பெற்றது, O Emmoiy Ennai En Seyya Pettrathu - ஐயோ! என் தாயானவள் என்னை எதுக்காக பெற்றாளோ!
714பெருமாள் திருமொழி || (ஆலை நீள் கரும்பு) - சேய் வளர் காட்சியின் சீரை யசோதை போல் தாய் தேவகி பெறாத் தாழ் வெண்ணிப் புலம்பல் 7
குழகனே !என் தன் கோமள பிள்ளாய்
கோவிந்தா ! என் குடங்கையில் மன்னி
ஒழுகு பேர் எழில் இளம் சிறு தளிர் போல்
ஒரு கையால் ஒரு முலை முகம் நெருடா
மழலை மென் நகை இடை இடை அருளா
வாயிலே முலை இருக்க வென் முகத்தே
எழில் கொள் நின் திரு கண் இணை நோக்கம்
தன்னையும் இழந்தேன் இழந்தேனே
குழகனே, Kuzhaganai - எல்லாரோடும் கலக்கும் ஸ்வபாவமுடையவனே!
என் தன் கோமளம் பிள்ளாய், En Than Komalam Pillai - என் வயிற்றிற் பிறந்த அழகிய குமாரனே!
கோவிந்தா, Kovindaa - கோவிந்தனே!
என் குடங்கை யில் மன்னி ஓழுகு பேர், En Kudangai Yil Manni Ozhugu Peer - என்னுடைய குடங்கையிலே பொருந்தியிருந்து வெள்ளமிடாநின்ற மிக்க
எழில் இள சிறு தளிர் போல், Ezhil Ila Siru Thalir Pol - அழகை யுடைத்தாயும் மிகவும் இளைசான தளிர் போன்றதுமான
ஒரு கையால் ஒரு முலை முகம், Oru Kaiyal Oru Mulai Mukam - ஒரு திருக் கையாலே (என்னுடைய) ஒரு முலைக் காம்பை
நெருடா, Neruda - நெருடிக் கொண்டு
முலை வாயிலே இருக்க, Mulai Vayile Irukka - மற்றொரு முலையானது (உன்) வாயில் இருக்க
இடை இடை, Idai Idai - நடு நடுவே
என் முகத்தை மழலை மெல் நகை அருளா, En Mukaththai Mazhalai Mel Nakai Arula - என் முகத்தை நோக்கி புன் சிரிப்பைச் செய்து கொண்டு
எழில் கொள் நின் திரு கண் இணை நோக்கம் தன்னையும், Ezhil Kol Nin Thiru Kan Inai Nokkam Thannaiyum - அழகிய உன் இரண்டு கண்களாலும் பார்க்கிற பார்வையையும்
இழந்தேன் இழந்தேன், Izhandhen Izhandhen - ஐயோ! இழந்தேனே!
குழகன், Kuzhagan - எல்லாரோடும் கலந்து பரிமாறுவதையே இயல்வாக வுடையவன்
கோமளம், Komalam - ஸுகுமாரம்.
நெருடா, அருளா, Neruda Arula - ‘ செய்யா’ என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம்; நெருடி, அருளி என்றபடி.
715பெருமாள் திருமொழி || (ஆலை நீள் கரும்பு) - சேய் வளர் காட்சியின் சீரை யசோதை போல் தாய் தேவகி பெறாத் தாழ் வெண்ணிப் புலம்பல் 8
முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும்
முகிழ் இளம் சிறு தாமரை கையும்
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு
நிலையும் வெண் தயிர் தோய்ந்த செவ் வாயும்
அழுகையும் அஞ்சி நோக்கும் அந் நோக்கும்
அணி கொள் செஞ்சிறு வாய் நெளிப்பதுவும்
தொழுகையும் இவை கண்ட வசோதை
தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே
வெண்ணெய் முழுதும் அளைந்து, Venney Muzhudhum Alainthu - வெண்ணெய் குடத்திலுள்ளவளவும கையை விட்டு (அளைந்து)
தொட்டு உண்ணும், Thottu Unnum - எடுத்து உண்கிற
இள முகிழ் தாமரை சிறுகையும், Ila Mukizh Thamarai Sirukaiyum - இளந்தளிரையும் தாமரையையும் போன்ற சிறிய திருக் கைகளும்
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு, Ezhil Kol Thambu Konda Adippadharku - அழகிய தாம்பாலே அடிக்க (அதற்கு)
எள்கு நிலையும், Elku Nilaiyum - அஞ்சி நிற்கும் நிலையும்
வெண் தயிர் தோய்ந்த செம் வாயும், Venn Thayir Thoyndha Sem Vayum - வெளுத்த தயிர் பூசிய சிவந்த வாயும்,
அழுகையும், Azhugaiyum - அழுவதும்,
அஞ்சி நோக்கும் அ நோக்கும், Anji Nokkum A Nokkum - பயந்து பார்க்கிற அப்பார்வையும்
அணி கொள் செம் சிறு வாய் நெளிப்பதுவும், Ani Kol Sem Siru Vay Nelippadhuvum - அழகிய சிவந்த சிறிய வாய் துடிப்பதும்
தொழுகையும், nan - அஞ்ஜலி பண்ணுகையும் (ஆகிற
இவை, nan - இவற்றையெல்லாம்
கண்ட, nan - நேரில் கண்ணாற்கண்டு அநுபவித்த
அசோதை, nan - யசோதை யானவள்
தொல்லை இன்பத்து, nan - பரமானந்தத்தினுடைய
இறுதி, nan - எல்லையை
கண்டாள், nan - காணப் பெற்றாள்
“அடிப்பதற்கு”, nan - அடிப்ப, அதற்கு எனப் பிரித்துரைத்தலுமாம்;
அழுகையும் தொழுகையும் பரிச்சிந்நர்களுடைய க்ருத்யமிறே. (பரிச்சிந்நர், nan - ஓரளவு பட்டவர்.
716பெருமாள் திருமொழி || (ஆலை நீள் கரும்பு) - சேய் வளர் காட்சியின் சீரை யசோதை போல் தாய் தேவகி பெறாத் தாழ் வெண்ணிப் புலம்பல் 9
குன்றினால் குடை கவித்ததும் கோல
குரவை கோத்ததும் குடமாட்டும்
கன்றினால் விள வெறிந்ததும் காலால்
காளியன் தலை மிதித்ததும் முதலா
வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டம் அனைத்திலும்
அங்கு என் உள்ளம் குளிர
ஒன்றும் கண்டிட பெற்றிலேன் அடியேன்
காணுமாறு இனி வுண்டேனில் அருளே
குன்றினால் குடை கவித்ததும், nan - கோவர்த்தன மலையைக் குடையாகத் தாங்கி நின்றதும்
கோலம் குரவை கோத்ததும், nan - அழகாக ராஸ க்ரீடை செய்ததும்
குடம் ஆட்டும், nan - குடக் கூத்தாடினதும்
கன்றினால் விள எறிந்ததும், nan - கன்றாய் வந்த ஒரு அசுரனைக் கொண்டு (அஸுராவேசமுடைய) விளங்காய்களை உதிர்த்ததும்
காலால் காளியன் தலை மிதித்ததும் முதலா, nan - திருவடிகளாலே காளிய நாகத்தின் தலையை மர்த்தித்ததும் (ஆகிய இவை) முதலாகவுள்ள
வென்றி சேர், nan - வெற்றி பொருந்திய
நல் பிள்ளை விளையாட்டம் அனைத்திலும், nan - விலக்ஷணமான பால்ய சேஷ்டிதங்க ளெல்லா வற்றினுள்ளும்
ஒன்றும், nan - ஒரு சேஷ்டிதத்தையும்
என் உள்ளம் உள் குளிர, nan - என் நெஞ்சு குளிரும்படி
அடியேன், Adiyen - நான்
அங்கு கண்டிட பெற்றிலேன், nan - அச்சேஷ்டிதங்களை நீ செய்தவிடத்தில் கண்ணாரக் கண்டு களிக்க பெற்றிலேன்;-
இனி, nan - இப்போது
காணும் ஆறு, Kaanum Aaru - (அவற்றை நான்) காணத் தக்க உபாயம்
உண்டு எனில், Undu Enil - இருக்குமாகில்
717பெருமாள் திருமொழி || (ஆலை நீள் கரும்பு) - சேய் வளர் காட்சியின் சீரை யசோதை போல் தாய் தேவகி பெறாத் தாழ் வெண்ணிப் புலம்பல் 10
வஞ்ச மேவிய நெஞ்சுடைப் பேய்ச்சி
வரண்டு நார் நரம்பு எழக் கரிந்துக்க
நஞ்சமார் தரு சுழி முலை அந்தோ !
சுவைத்து நீ அருள் செய்து வளர்ந்தாய்
கஞ்சன் நாள் கவர் கரு முகில் எந்தாய் !
கடைப் பட்டேன் வெறிதே முலை சுமந்து
தஞ்சம் மேல் ஒன்றி இலேன் உய்ந்து இருந்தேன்
தக்கதே நல்ல தாயைப் பெற்றாயே
வஞ்சம் மேவிய நெஞ்சு உடை பேய்ச்சி, Vanjam Meviyai Nenju Udai Paeychchi - வஞ்சனை பொருந்திய நெஞ்சை யுடையளான பூதனை யானவள்
வரண்டு, Varandu - உடம்பு சோஷித்து
எழ, Ezha - (உள்ளுள்ள ரத்தமாம்ஸங்கள) வெளியிற் கொழிக்கும் படியாகவும்
நார் நரம்பு கரிந்து உக்க, Naar Narambu Karinthu Ukka - நார் போன்ற நரம்புகள் கருகி உதிரும் படியாகவும (அவளுடைய)
நஞ்சம் ஆர் தரு சுழி முலை, Nanjam Aar Tharu Suzhi Mulai - விஷந்தீற்றிய கள்ள முலையை
நீ சுவைத்து, Nee Suvaithu - நீ ஆஸ்வாதநம் பண்ணியும்
அருள் செய்து, Arul Seidhu - (என் மேல்) கிருபையினாலே
வளர்ந்தாய், Valarnthai - உயிருடன் வளரப் பெற்றாய்
அந்தோ, Andho - ஆச்சரியம்!
கஞ்சன் நாள் கவர், Kanjan Naal Kavar - கம்ஸனுடைய ஆயுஸ்ஸை அபஹரித்த
கரு முகில் எந்தாய், Karum Mukil Endhai - காளமேகம் போன்ற நாயனே!
முலை வெறிதே சுமந்து, Mulai Veridhae Sumandhu - (நான்) முலையை வியர்த்தமாகச் சுமந்து
கடைப்பட்டேன், Kadaipattain - கெட்டவரிலும் கடைகெட்டவளானேன்;
தஞ்சம் ஒன்று இலேன், Thanjam Ondru Ilaan - (உன்னையொழிய வேற) புகலற்றிராநின்றேன்;
உய்ந்திருந்தேன், Uyandhirundhen - (என்றைக்காகிலு முன்னைக் கண்ணால் காண்போமென்று)பிராணனைப் பிடித்துக் கொண்டு ஜீவிக்கிறேன்;
தக்கது, Thakkadhu - உனக்குத் தகுதியான
நல்ல தாயை, Nalla Thaayai - நல்ல தாயாரை
பெற்றாய், Petrayi - ஸம்பாதித்துக் கொண்டாய்.
718பெருமாள் திருமொழி || (ஆலை நீள் கரும்பு) - சேய் வளர் காட்சியின் சீரை யசோதை போல் தாய் தேவகி பெறாத் தாழ் வெண்ணிப் புலம்பல் 11
மல்லை மா நகர்க்கு இறையவன் தன்னை
வான் செலுத்தி வந்து ஈங்கு அணை மாயத்து
எல்லையில் பிள்ளை செய்வன காணாத்
தெய்வ தேவகி புலம்பிய புலம்பல்
கொல்லி காவலன் மாலடி முடி மேல்
கோலமாம் குலசேகரன் சொன்ன
நல் இசை தமிழ் மாலை வல்லார்கள்
நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே
மல்லை மா நகர்க்கு, Mallai Maa Nagarkku - செல்வம் நிரம்பிய பெரிய நகரமாகிய வட மதுரைக்கு
இறையவன் தன்னை, Irayavan Thannai - தலைவனாயிருந்த கம்ஸனை
வான் செலுத்தி, Vaan Seluththi - வீர ஸ்வர்க்கத்திற்கு அனுப்பி
ஈங்கு வந்து அணை, Eengu Vandu Anai - (தேவகீ ஸமீபமாகிய) இங்கே வந்து சேர்ந்த
பிள்ளை, Pillai - கண்ண பிரானுடைய
மாயத்து எல்லை இல் செய்வன, Maayaththu Ellai Il Seivana - அற்புதத்தில் எல்லை யில்லாத சேஷடிதங்களை
காணா, Kaanaa - (நடந்த போது) காணப் பெறாத
தெய்வத் தேவகி, Deivath Devaki - தெய்வத் தன்மை பொருந்திய தேவகி யானவள்
புலம்பிய புலம்பல், Pulambiya Pulambal - புலம்பிக் கொண்டு சொன்ன பாசுரங்களை
கொல்லி காவலன், Kolli Kaavalan - கொல்லி நகர்க்கு அரசராய்
மால் அடி முடி மேல் கோலம் ஆம், Maal Adi Mudi Mael Kolam Aam - ஸர்வேச்வரனுடைய திருவடிகளைத் தம் திருமுடிக்கு அலங்காரமாக வுடையரான
குலசேகரன், Kulashekaran - குலசேகராழ்வார்
சொன்ன, Sonna - அருளிச் செய்த
நல் இசை தமிழ் மாலை, Nal Isai Tamil Maalai - நல்ல இசையையுடைய தமிழினாலாகிய சொல் மாலையை
வல்லார்கள், Vallargal - ஓத வல்லவர்கள்
ஒல்லை, Ollai - விரைவாக
நாரணன் உலகு, Naaranan Ulagu - ஸ்ரீவைகுண்டத்தை
நண்ணுவார், Nannuvaar - சேரப் பெறுவர்
719பெருமாள் திருமொழி || (மன்னு புகழ்) - கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு 1
மன்னு புகழ் கௌசலை தன் மணி வயிறு வாய்த்தவனே!
தென் இலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்
கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்து என் கரு மணியே!
என்னுடைய இன் அமுதே! ராகவனே! தாலேலோ
மன்னு புகழ், Mannu Pugazh - நிலை நின்ற புகழை யுடைய
கௌசலை தன், Kausalai Than - கௌஸல்யையினுடைய்
மணி வயிறு, Mani Vayiru - அழகிய வயிற்றிலே
வாய்த்தவனே, Vaiththavane - பிள்ளையாகத் திருவவதரித்தவனே!
தென் இலங்கை கோன், Then Ilangai Kon - தென்னிலங்கைக்கு இறைவனான ராவணனுடைய
முடிகள், Mudigal - பத்துத் தலைகளையும்
சிந்துவித்தாய், Sindhuviththai - சிதறப் பண்ணினவனே!
செம் பொன் சேர், Sem Pon Ser - செவ்விய பொன்னாலே செய்யப்பட்டதாய்
கன்னி, Kanni - அழிவில்லாததாய்
நல், Nal - விலக்ஷணமாய்
மா, Maa - பெரிதான
மதில், Madhil - திருமதிளாலே
புடை சூழ், Pudai Soozh - நாற் புறமும் சூழப்பட்ட
கணபுரத்து, Kanapurathu - திருக் கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கிற
என் கருமணியே, En Karumanie - நீல ரத்நம் போன்ற எம்பெருமானே!
என்னுடைய இன் அமுதே, Ennudaiya In Amudhe - எனக்கு போக்யமான அம்ருதமாயிருப்பவனே!
இராகவனே!, Irakavaney - ஸ்ரீராமனே!
தாலேலோ, Thaleloo - (உனக்குத்) தாலாட்டு
கணபுரம், Kanapuram - கண்ணபுரம் என்பதன் தொகுத்தல்,
தாலேலோ, Thaleloo - வளர்பிள்ளைத் தொட்டிலிலே வளர்த்திக் கண்வளரப் பண்ணுகைக்காகச் சீராட்டித் தாலாட்டுதல்;
தால், Thal - நாக்கு; தமிழில் தொண்ணாற்றாறு வகைப் பிரபந்தங்களுள் ஒன்றாகிய பிள்ளைத் தமிழில்
720பெருமாள் திருமொழி || (மன்னு புகழ்) - கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு 2
புண்டரீக மலர் அதன் மேல் புவனி எல்லாம் படைத்தவனே!
திண் திற லாள் தாடகை தன் உரம் உருவ சிலை வளைத்தாய்!
கண்டவர் தம் மனம் வழங்கும் கண புரத்து என் கருமணியே !
எண் திசையும் ஆள் உடையாய்! ராகவனே! தாலேலோ
புண்டரிகம் மலர் அதன் மேல், Pundarikam Malar Athan Mel - (திருநாபியில் அலர்ந்த) தாமரைப் பூவின் மேல் (பிரமனைத் தோற்றுவித்து அவன் முகமாக)
புவனி எல்லாம் படைத்தவனே, Puvani Ellam Padaithavaney - உலகங்கள் எல்லாவற்றையும் ஸ்ருஷ்டித்தவனே!
திண் திறலாள் தாடகை தன், Thin Thiralal Thadakai Than - த்ருடமான பலத்தை யுடையளான தாடகையினுடைய
உரம் உருவ, Uram Uruva - மார்வைத் துளைக்கும் படியாக
சிலை வளைத்தாய், Silai Valaiththai - வில்லை வளைத்து அம்புகளை எய்தவனே!
கண்டவர், Kandavar - ஸேவித்தவர்கள்
தம் மனம் வழங்கும், Tham Manam Vazhangu - தங்கள் மனத்தைத் தாங்களே இசைந்து கொடுப்பதற்குத் தகுந்த
எண் திசையும், En Thisaiyum - எட்டுத் திக்கிலுள்ளவர்களையும்
ஆள் உடையாய், Aal Udaiyaay - அடிமை கொண்டருளுபவனே!
இராகவனே! தாலேலோ, Irakavane Thalelo - ஸ்ரீராமனே! (உனக்குத்) தாலாட்டு
721பெருமாள் திருமொழி || (மன்னு புகழ்) - கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு 3
கொங்கு மலி கரும் குழலாள் கௌசலை தன் குல முதலாய் !
தங்கு பெரும் புகழ் சனகன் திரு மருகா ! தாசரதீ !
கங்கையிலும் தீர்த்த மலி கண புரத்து என் கரு மணியே
எங்கள் குலத்தின் இன் அமுதே !ராகவனே !தாலேலோ !
கொங்குமலி கரு குழலாள், Kongumali Karu Kuzhalal - பரிமளம் மிகுந்த கறுத்த கூந்தலை யுடையளான
கௌசலை தன், Kausalai Than - கௌஸல்யையினுடைய
குலம் மதலாய், Kulam Mathalaiy - சிறந்த பிள்ளையானவனே!
தங்கு பெருபுகழ் சனகன், Thangu Perupugazh Sanakan - பொருந்திய மஹா கீர்த்தியை யுடைய ஜநக மஹாராஜனுக்கு
திரு மருகா, Thiru Maruga - மாப்பிள்ளை யானவனே!
தாசரதீ, Dasarathe - சக்ரவர்த்தி திருமகனே!
கங்கையிலும், Gangaiyilum - கங்கா நதியிற் காட்டிலும்
மலி தீர்த்தம், Mali Theertham - சிறப்பு மிக்க தீர்த்தங்களை யுடைய
கண புரத்து, Kanna Purathu - திருக் கண்ணபுரத்தி லெழுந்தருளி யிருக்கிற
எங்கள் குலம், Engal Kulam - எங்கள் ராஜ வம்சத்துக் கெல்லாம்
இன் அமுதே, In Amude - போக்யமான அமுதம் போன்றவனே!
எங்கள் குலத்து இன்னமுதே, Engal Kulaththu Innamude - ஸ்ரீராமன் ராஜவம்ஸத்திற் பிறந்தாற்போல
722பெருமாள் திருமொழி || (மன்னு புகழ்) - கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு 4
தாமரை மேல் அயன் அவனை படைத்தவனே! தயரதன் தன்
மா முதலாய்! மைதிலி தன் மணவாளா வண்டினங்கள்
காமரங்கள் இசை பாடும் கண புரத்து என் கருமணியே!
ஏமருவும் வெம் சிலை வலவா! ராகவனே! தாலேலோ
தாமரை மேல், Thamarai Mel - (திருநாபிக்) கமலத்திலே
அயன் அவனை படைத்தவனே, Ayan Avanai Padaiththavane - பிரமனை உண்டாக்கினவனே!
தயரதன் தன் மாமதலாய், Thayaradhan Than Mamathalaiy - தசரதனுடைய மூத்த குமாரனே!
மைதிலி தன் மணவாளா, Maithili Than Manavala - பிராட்டிக்கு வல்லபனே!
வண்டு இனங்கள், Vandu Inangal - வண்டுகளின் கூட்டங்கள்
காமரங்கள் இசை பாடும், Kamarangkal Isai Padum - காமரமென்னும் இசையைப் பாடப் பெற்ற
கண புரத்து, Kanna Purathu - திருக் கண்ணபுரத்தி லெழுந்தருளி யிருக்கிற
ஏ மருவும் சிலை வலவா, E Maruvum Silai Valava - அம்புகள் பொருந்திய (ஸ்ரீசார்ங்கமென்னும்) வில்லை ஆள வல்லவனே
“ஏமருவுஞ்சிலை” = ஏ, Emaruvunchilai E - எய்கையிலே, மருவும் – மூட்டாநின்ற, சிலை – வில் என்றும் பொருளாகலாம்.
வெகு சாதுரியமாய் அடக்கி ஆளத்தக்க வில், Vegu Sadhuriyamaiy Adakki Aalaththakka Vil - என்றவாறு
723பெருமாள் திருமொழி || (மன்னு புகழ்) - கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு 5
பாராளும் படர் செல்வம் பாரத நம்பிக்கே அருளி
ஆரா அன்பில் இளையவனோடு அரும் கானம் அடைந்தவனே
சீராளும் வரை மார்பா ! திரு கண்ண புரத்தரசே !
தாராளும் நீண் முடி என் தாசரதீ ! தாலேலோ
பார் ஆளும் படர் செல்வம், Paar Aalum Padar Selvam - பூமி முழுவதையும் ஆட்சி புரிகையாகிற பெரிய ராஜ்ய ஸம்பத்தை
பரதன் நம்பிக்கே, Barathan Nambikke - ஸ்ரீ பரதாழ்வானுக்கே
அருளி, Aruli - நியமித்து விட்டு
ஆரா அன்பு இளையவனோடு, Aaraa Anbu Ilaiyavanodu - பரிபூர்ணமான பக்திப் பெருங்காதலை யுடைய இளைய பெருமாளுடன் கூட
அரு கானம் அடைந்தவனே, Aru Kaanam Adaindavaney - (புகுவதற்கு) அருமையான காட்டைக் குறித்து எழுந்தருளினவனே!
சீர் ஆளும் வரை மார்பா, Seer Aalum Varai Maarbaa - வீர லெக்ஷ்மிக்கு இருப்பிடமாய் மலை போன்ற திரு மார்பை யுடையவனே!
தார் ஆளும் நீள் முடி, Thaar Aalum Neel Mudi - மாலையோடு கூடின சிறந்த திரு முடியை யுடையவனே!
724பெருமாள் திருமொழி || (மன்னு புகழ்) - கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு 6
சுற்றம் எல்லாம் பின் தொடர தொல் கானம் அடைந்தவனே!
அற்றவர்கட்க்கு அரு மருந்தே! அயோத்தி நகர்க்கு அதிபதியே!
கற்றவர்கள் தாம் வாழும் கண புரத்து என் கரு மணியே!
சிற்றவை தன் சொல் கொண்ட சீ ராமா! தாலேலோ
சுற்றம் எல்லாம் பின் தொடர, Sutram Ellam Pin Thodara - எல்லா உறவினரும் பின்னே தொடர்ந்து வர
தொல் கானம் அடைந்தவனே, Thol Kaanam Adaindavaney - புராதநமான தண்டகாரண்யத்துக் கெழுந்தருளினவனே!
அற்றவர்கட்கு, Attravarkadku - உனக்கே அற்றுத் தீர்ந்த பரம பக்தர்களுக்கு
அரு மருந்தே, Aru Marundhe - ஸம்ஸார ரோகத்தைத் (தணிக்க) அருமையான மருந்து போன்றவனே!
அயோத்தி நகர்க்கு அதிபதியே, Ayodhya Nagarkku Adhipathiye - அயோத்யா நகரத்திற்கு அரசனே!
கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்து, Kattravargal Thaam Vaalum Kanapurathu - ஞானிகள் வாழ்தற்கு இடமான திருக்கண்ணபுரத்திலே எழுந்தருளியிருக்கிற
என் கருமணியே, En Karumanie - நீலமணி போலழகிய எம்பெருமானே!
சிற்றவை தன், Sitravai Than - சிறிய தாயாராகிய கைகேயியினுடைய
சொல் கொண்ட சீராமா, Sol Konda Seerama - சொல்லை ஏற்றுக்கொண்ட ஸ்ரீராமமே!
அது கேட்ட இராமபிரான், Adhu Ketta Irambiraan - “ஸீதே! நான் பிராணனை விட்டாலும் விடுவேன்; லக்ஷ்மணனையும் உன்னையும் விட்டாலும் விடுவேன்;
725பெருமாள் திருமொழி || (மன்னு புகழ்) - கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு 7
ஆலின் இலை பாலகனாய் அன்று உலகம் உண்டவனே!
வாலியை கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே!
காலின் மணி கரை அலைக்கும் கண புரத்து என் கரு மணியே!
ஆலி நகர்க்கு அதிபதியே! அயோத்தி மனே! தாலேலோ
அன்று, Anru - முன்பு மஹாப்ரளயம் வந்த போது
ஆலின் இலை, Aalin Ilai - ஓர் ஆலந்தளிரிலே
பாலகன் ஆய், Paalagan Aayi - குழந்தை வடிவாய்க் கொண்டு
உலகம் உண்டவனே, Ulagam Undavaney - லோகங்களை யெல்லாம் திருவயிற்றில் வைத்து நோக்கினவனே!
வாலியை கொன்று, Vaalaiyai Konru - வாலியைக் கொலை செய்து
இளைய வானரத்துக்கு, Ilaiya Vaanarathukku - அவனது தம்பியான ஸுகரீவனுக்கு
அரசு அளித்தவனே, Arasu Alithavane - ராஜ்யத்தைக் கொடுத்தவனே!
காலில் மணி, Kaalil Mani - கால்வாய்களிலுள்ள ரத்நங்களை
கரை அலைக்கும், Karai Alaikkum - கரையிலே கொண்டு கொழிக்கப் பெற்ற
கண புரத்து, Kanna Purathu - திருக் கண்ணபுரத்தில் எழுந்தளி யிருக்கிற
ஆலி நகர்க்கு, Aali Nagarkku - திருவாலி திருநகரிக்கு
அதிபதியே, Adhipathiye - தலைவனே!
அயோத்திமனே, Ayothimane - அயோத்தி நகர்க்கு அரசனே!
726பெருமாள் திருமொழி || (மன்னு புகழ்) - கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு 8
மலை அதனால் அணை கட்டி மதிள் இலங்கை அழித்தவனே!
அலை கடலை கடைந்து அமரர்க்கு அருளி செய்தவனே!
கலை வலவர் தாம் வாழும் கண புரத்து என் கரு மணியே!
சிலை வலவா! சேவகனே! சீ ராமா! தாலேலோ
மலை அதனால் அணை கட்டி, Malai Adhanal Anaik Katti - மலைகளைக் கொண்டு ஸேது பந்தனம் பண்ணி
மதிள் இலங்கை அழித்தவனே, Mathil Ilangai Azhithavane - அரணை யுடைத்தான லங்காபுரியைப் பாழ்படுத்தினவனே
அலை கடலை கடைந்து, Alai Kadalai Kadaindhu - அலை யெறிகின்ற திருப்பாற்கடலைக் கடைந்து
அமரர்க்கு, Amararukku - தேவர்களுக்கு
அமுது, Amuthu - அம்ருதத்தை
அருளிச் செய்தவனே, Arulich Seithavane - கொடுத்தருளினவனே!
கலை வலவர் தாம் வாழும் கணபுரத்து, Kalai Valavar Thaam Vaalum Kanapuraththu - ஸகல சாஸ்த்ரங்களையும் அறிந்தவர்கள் வாழ்கிற திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கிற
சிலைவலவா, Silaivalavaa - (ஸ்ரீ சார்ங்கமென்னும்) வில்லைச் செலுத்த வல்லவனே!
சேவகனே, Sevagane - வீரனே!
727பெருமாள் திருமொழி || (மன்னு புகழ்) - கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு 9
தளை அவிழும் நறும் குஞ்சி தயரதன் தன் குல முதலாய்!
வளைய வொரு சிலை யதனால் மதிள் இலங்கை அழித்தவனே!
களை கழுநீர் மருங்கலரும் கண புரத்து என் கரு மணியே!
இளையவர்கட்க்கு அருள் உடையாய்! ராகவனே! தாலேலோ
தளை அவிழும் நறு குஞ்சி, Thalai Avizhum Naru Kunji - கட்டு அவிழும்படியான நறுநாற்றமுடைய மயிர்முடியை யுடையனான
தயரதன் தன், Thayaradhan Than - தசரத சக்ரவாத்தியினுடைய
குலம் மதலாய், Kulam Mathalaiy - சிறந்த திருக்குமாரனே!
ஒரு சிலை வளைய, Oru Silai Valaiya - ஒப்பற்ற வில்லானது வளைய
அதனால், Adhanal - அந்த வில்லாலே
களை கழுநீர், Kalai Kazhunir - களையாகப் பறிக்கப்பட்ட செங்கழுநீர்கள்
மருங்கு அலரும் கணபுரத்து, Marungu Alarum Kanapurathu - சுற்றிலும் மலரப் பெற்ற திருக்கண்ணபுரத்தி லெழுந்தருளியிருக்கிற
இளையவர்கட்கு, Ilaiyavarkadku - இளையவர்கள் விஷயத்திலே
அருள் உடையாய், Arul Udaiyai - கருணை பொருந்தியவனே!
728பெருமாள் திருமொழி || (மன்னு புகழ்) - கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு 10
தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே!
யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர் துயின்றவனே!
காவிரி நல் நதி பாயும் கண புரத்து என் கரு மணியே!
ஏவரி வெஞ்சிலை வலவா! ராகவனே! தாலேலோ
தேவரையும், Devaraiyum - தேவர்களையும்
அசுரரையும், Asuraraiyum - அஸுரர்களையும்
திசைகளையும், Thisaigalaiyum - திக்குக்களையும் (அதாவது எல்லா ப்ரதேசங்களையும்)
படைத்தவனே, Padaithavaney - ஸ்ருஷ்டித்தவனே
யாவரும் வந்து அடி வணங்க, Yavarum Vandu Adi Vananga - ஸகல சேதநரும் வந்து திருவடிகளில் ஸேவிக்கும்படியாக
அரங்கம் நகர், Arangam Nagar - ஸ்ரீரங்கத்திலே
துயின்றவனே, Thuyinravane - பள்ளி கொண்டிருப்பவனே!
காவிரி நல் நதி, Kaviri Nal Nathi - காவேரி யென்கிற சிறந்த நதி யானது
பாயும், Payum - ப்ரவஹிக்கப் பெற்ற
கண புரத்து, Kanna Purathu - திருக் கண்ணபுரத்தில் எழுந்தருளி யிருக்கிற
ஏ வரி வெம் சிலை வலவா, E Vari Vem Silai Valavaa - அம்புகள் தொடுக்கப்பெற்று அழகியதாய் (ச் சத்துருக்களுக்கு)க் கொடிதா யிருந்துள்ள வில்லை ஆள வல்லவனே
729பெருமாள் திருமொழி || (மன்னு புகழ்) - கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு 11
கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்து என் காகுத்தன்
தன் அடி மேல் தாலேலோ என்று உரைத்த தமிழ் மாலை
கொல் நவிலும் வேல் வலவன் குடை குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே
என் காகுத்தன் தன் அடி மேல், En Kaakuththan Than Adi Mel - என் ஸ்வாமியான இராமபிரான் விஷயமாக
தாலேலோ என்று உரைத்த, Thalelo Endru Uraitha - (கௌஸல்யை) தாலாட்டிச் சொன்ன பாசுரங்களை (உட்கொண்டு)
கொல் நவிலும் வேல் வலவன் குடை குலசேகரன், Kol Navilum Vel Valavan Kudai Kulashekaran - கொலைத் தொழில் புரிகின்ற வேலாயுதத்தைச் செலுத்த
கன்னி நல் மா மதிள் புடை சூழ் கண புரத்து, Kanni Nal Maa Mathil Pudai Soozh Kanapurathu - சாச்வதமான சிறந்த அழகிய மதிள்கள் நாற்புறமும் சூழப் பெற்ற திருக்கண்ணபுரத்திலே
சொன்ன, Sonna - அருளிச் செய்த
பன்னிய நூல் தமிழ் மாலை பத்தும், Panniya Nool Tamil Maalai Paththum - பரம்பியதாய் ஸலக்ஷணமாய்த் தமிழ்ப் பாமாலை ஆகிய இப்பத்துப் பாசுரங்களையும்
வல்லார், Vallaar - அதிகரிக்க வல்லவர்கள்
730பெருமாள் திருமொழி || (வன் தாள் இணை) - தனயன் கான் புகத் தசரதன் புலம்பல் 1
வன் தாள் இணை வணங்கி வள நகரம்
தொழுது ஏத்த மன்னனாவான்
நின்றாயை அரி அணை மேல் இருந்தாயை
நெடும் கானம் படர போகு
வென்றாள் எம்மி ராமாவோ!
உன்னை பயந்த கைகேசி தன் சொல் கேட்டு
நன்றாக நானிலத்தை ஆள்வித்தேன்
நன் மகனே! உன்னை நானே
எம் இராமாவோ, Em Iraamavo - ஓ எமது இராமனே!
வளம் நகரம், Valam Nagaram - அழகிய அயோத்தி மாநகரத்துப் பிரஜைகள் அனைவரும்
வல் தாளின் இணை வணங்கி தொழுது ஏத்த, Val Thaalin Inai Vanangi Thozhudhu Aetha - (சரணமடைந்தவர்களை எப்பொழுதும் விடாமற் பாதுகாக்கும்)
மன்னன் ஆவான் நின்றாயை, Mannan Aavaan Nindraaiyai - அரசனாகப் பட்டாபிஷேகஞ் செய்து கொள்ளுதற்கு ஸித்தனாய் நின்றவனும்
அரி அணை மேல் இருந்தாயை, Ari Anai Mel Irundhaaiyai - சிங்காசனத்தின் மீது வீற்றிருக்க ஸித்தனாயிருந்தவனுமான உன்னை
நெடுங்கானம் படர போகு என்றாள், Nedungaanam Padara Pogu Endraal - பெரிய காட்டிற்கு செல்லுதற்கு (இந்நகர் விட்டு நீங்கிப்) போ என்று (கைகேயி) கூறினாள்
நல் மகனே, Nal Maganae - நல்ல குமாரனே!
நான், Naan - நான்
உனை பயந்த கைகேசி தன் சொல் கேட்டு, Unai Bayandha Kaikesi Than Sol Kaettu - உன்னைப் பெற்று வளர்த்த தாயான கைகேயியின் வார்த்தையைக் கேட்டு
நன்றாக உன்னை நானிலத்தை ஆள்வித்தேன், Nandraaga Unnai Naanilaththai Aalviththen - நன்றாக! உன்னை நிலவுலகத்தை ஆளும்படி செய்தேன்.
போகு, Pogu - என்றாள் = போகென்றாள் என்று புணரத்தக்கது,
இராமாவோ, Iraamavo - ஒகாரம் மிக்கது, புலம்பல் விளியாகலின் புலம்பின் ஓவும் ஆகும் என்றார்.
731பெருமாள் திருமொழி || (வன் தாள் இணை) - தனயன் கான் புகத் தசரதன் புலம்பல் 2
வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு இரு நிலத்தை
வேண்டாதே விரைந்து ,வென்றி
மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து
மா ஒழிந்து வானமே மேவி
நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும்
இளம் கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ!
எம்பெருமான்! என் செய்கேனே ?
வெவ் வாயேன் வெவ் உரை கேட்டு, Veve Vaayaan Veve Urai Kaettu - கொடிய வாயை யுடையேனை என்னுடைய கடுஞ்சொற்களைக் கேட்டு
இரு நிலத்தை வேண்டாதே, Iru Nilaththai Vendaadhe - பெரிய நிலவுலகத்து அரசாட்சியை விரும்பாமலே விட்டிட்டு
விரைந்து, Viraindhu - சீக்கிரமாக
வென்றி மை வாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து மா ஒழிந்து, Vendri Mai Vaaya Kaliru Ozhindhu Ther Ozhindhu Maa Ozhindhu - வெற்றியை விளைப்பதான
வனமே மேவி, Vaname Mevi - காட்டையே சேர்ந்து
நெய் வாய வேல் நெடு கண் நேரிழையும், Ney Vaaya Veel Nedhu Kann Nerizhaiyum - நெய்ப்பூசிய நுனியையுடைய வேலாயுதம் போன்ற
இளங்கோவும், Ilankovum - இளைய பெருமாளும்
பின்பு போக, Pinbu Poga - உடன் தொடர்ந்து வர
எவ்வாறு நடந்தனை, Evvaaru Nadandhanai - எங்ஙனம் நடந்து சென்றாயோ!
எம் பெருமான், Em Perumaan - எமது ஐயனே!
என் செய்கேன், En Seigkaen - நான் என் செய்வேன்!
732பெருமாள் திருமொழி || (வன் தாள் இணை) - தனயன் கான் புகத் தசரதன் புலம்பல் 3
கொல் அணை வேல் வரி நெடும் கண் கௌசலை தன்
குலமதலாய்! குனி வில்லேந்தும்
மல்லணைந்த வரை தோளா! வல் வினையேன்
மனம் உருக்கும் வகையே கற்றாய்
மெல்லணை மேல் முன் துயின்றாய்
இன்று இனி போய் வியன் கான மரத்தின் நீழல்
கல்லணை மேல் கண் துயில கற்றனையோ?
காகுத்தா! கரிய கோவே!
கொல் அணை, Kol Anai - கொலைத் தொழில் பொருந்தின
வேல், Vel - வேலாயுதம் போன்ற
வரி நெடுங்கண், Vari Nedungkan - செவ்வரி பரந்த நீண்ட கண்களையுடைய
கௌசலை தன், Kausalai Than - கௌஸல்யையினது
குலம், Kulam - குலத்தில் தோன்றிய
மதலாய், Madalai - குமாரனே!
குனி வில் ஏந்தும், Kuni Vil Aenthum - வளைந்த வில்லைத் தரித்த
மல் அணைந்த வரை தோளா, Mal Anaintha Varai Thola - வலிமை பொருந்திய மலைகள் போன்ற தோள்களை யுடையவனே!
வல் வினையேன், Val Vinaiyen - மஹா பாபியான என்னுடைய
மனம் உருக்கும் வகையே கற்றாய், Manam Urukkum Vagaiye Kattrai - மனதை உருகச் செய்வதற்கே வல்லவனே!
காகுத்தா, Kaakuththa - ககுத்ஸ்தனென்னும் அரசனது குலத்தில் தோன்றியவனே!
கரிய கோவே, Kariya Kove - கருநிறமுடைய ஐயனே!
மெல் அணை மேல் முன் துயின்றாய், Mel Anai Mel Mun Thuyinraai - மென்மையான பஞ்சனை மெத்தையின் மேல் முன்பெல்லாம் படுத்து உறங்கிப் பழகினவனான நீ
இனி இன்று போய், Ini Indru Poi - இனிமேற் புதிதாக இன்றைக்குச் சென்று
வியன் கானம் மரத்தின் நீழல், Viyan Kaanam Marathin Neezhal - பெரிய காட்டிலுள்ள மரத்தின் நிழலிலே
கல் அணை மேல் கண் துயில கற்றனையோ, Kal Anai Mel Kan Thuyil Kattranaiyo - கருங்கற் பாறைகளையே படுக்கையாகக் கொண்டு அதன் மேற்படுத்துத் துயிலப் பழகின்றாயோ
முருக்குதல், Murukkuthal - அழித்தல். முருங்கு என்பதன் பிறவினை.
வியன், Viyan - உரிச்சொல். வியல் என்பதன் விகாரமுமாம். நீழல் – நிழல் என்பன் நீட்டல்
733பெருமாள் திருமொழி || (வன் தாள் இணை) - தனயன் கான் புகத் தசரதன் புலம்பல் 4
வா போகு வா இன்னம் வந்து
ஒருகால் கண்டு போ மலராள் கூந்தல்
வேய் போலும் எழில் தோளி தன் பொருட்டா
விடையோன் தன் வில்லை செற்றாய்!
மா போகு நெடும் கானம் வல் வினையேன்
மனம் உருக்கும் மகனே! இன்று
நீ போக என் நெஞ்சம் இரு பிளவாய்ப்
போகாதே நிற்க்குமாறே!
வா, Vaa - (சற்று இங்கே) வா
போகு, Pogu - இனிச் செல்வாய்
வா, Vaa - மறுபடியும் இங்கு வா
இன்னம் வந்து ஒருகால் கண்டு போ, Innam Vandu Orukal Kandu Po - (போம்போது) பின்னையும் ஒரு தரம் வந்து என்னைப் பார்த்து விட்டுப் போ
மலர் ஆள் கூந்தல், Malai Aal Koondhal - பூக்களை எப்பொழுதும் தரிக்கிற மயிர் முடியை யுடையவளும்
வேய் போலும் எழில் தோளி தன் பொருட்டு ஆ, Veiy Poalum Ezhil Tholi Than Poruttu Aa - மூங்கில் போன்ற அழகிய தோள்களை யுடையளுமான பிராட்டியை மணஞ்செய்து கொள்ளுதற்காக
விடையோன் தன் வில்லை செற்றாய், Vidaiyon Than Villai Settrai - சிவனுடைய வில்லை முறித்தவனே!
வல் வினையேன் மனம் உருக்கும் மகனே, Val Vinaiyen Manam Urukkum Magane - மஹா பாபியான எனது மனதை உருகச் செய்கிற மைந்தனே!
இன்று, Indru - இப்பொழுது
நீ, Nee - நீ
மா போகு நெடுங்கானம் போக, Maa Pogu Nedungaanam Poga - யானைகள் ஸஞ்சரிக்கிற பெரிய காட்டுக்குப் போக
என் நெஞ்சம், En Nenjam - எனது மனமானது
இரு பிளவு ஆய் போகாதே நிற்கும் ஆறே, Iru Pilavu Aay Pogaadhe Nirkum Aare - இரண்டு பிளப்பாகப் பிளந்து போகாமலே வலியதாய் நிற்கும் தன்மை என்னோ?
734பெருமாள் திருமொழி || (வன் தாள் இணை) - தனயன் கான் புகத் தசரதன் புலம்பல் 5
பொருந்தார் கை வேல் நுதி போல்
பரல் பாய மெல் அடிகள் குருதி சோர
விரும்பாத கான் விரும்பி வெயில் உறைப்ப
வெம்பசி நோய் கூர இன்று
பெரும் பாவியேன் மகனே! போகின்றாய்
கேகயர் கோன் மகளாய் பெற்ற
அரும் பாவி சொல் கேட்ட அரு வினையேன்
என் செய்கேன்? அந்தோ! யானே
பொருந்தார் கை வேல் நுதி போல், Porundhaar Kai Vel Nuthi Pol - பகைவர்கள் கையிலேந்தும் கூர்மையான வேலாயுதத்தின் நுனி போன்ற
பரல், Paral - பருக்கைக் கற்கள்
பாய, Paaya - (காலில் தைத்து அழுத்தவும்)
மெல் அடிக்கள் குருதி சோர, Mel Adikkal Kuruthi Soora - மென்மையான (உனது) பாதங்களினின்று ரத்தம் பெருகவும்
வெயில் உறைப்ப, Veil Uraippa - (மேலே) வெயிலுறைக்கவும்
வெம் பசி நோய் கூர, Vem Pasi Noi Koora - (வேண்டிய போது உணவு கிடையாமலே) வெவ்விய பசியாகிய நோய் மிகவும்
பெரும் பாவி யேன் மகனே, Perum Paavi Yen Magane - மஹா பாபியான எனது மைந்தனே!
இன்று, Indru - இப்பொழுது
விரும்பாத கான் விரும்பி போகின்றாய், Virumbadha Kaan Virumbi Pogaindraai - (எவரும்) விரும்பாத காட்டை (நான் போகச் சொன்னேனென்பதனாலே) விரும்பி (அவ்விடத்துக்குச் செல்கிறாய்)
கேகயர்கோன் மகள் ஆய்பெற்ற அரும்பாவி, Kekayar Koan Magal Aaypetra Arumpaavi - கேகயராஜன் பெற்ற மகளான கொடிய பாவியாகிய கைகேயியினுடைய
சொல் கேட்ட அரு வினையேன் யான், Sol Kaetta Aru Vinaiyen Yaan - வார்த்தையைக் கேட்ட கொடியேனாகிய நான்
அந்தோ! என் செய்கேன், Andho En Seigken - ஐயோ! என்ன செய்வேன்!
வெம்பசி நோய் கூர = கூர, Vembasi Noi Koora Koora - மிகுதி யுணர்த்தும் கூர் என்ற உரிச்சொற் பகுதியினடியாய் பிறந்த செயவெனெச்சம்.
கேகயர், Kekayar - கேகய தேசத்திலுள்ளவர்கள்.
735பெருமாள் திருமொழி || (வன் தாள் இணை) - தனயன் கான் புகத் தசரதன் புலம்பல் 6
அம்மா என்று அழைக்கும் ஆர்வ சொல்
கேளாதே அணி சேர் மார்வம்
என் மார்வத் திடை அழுந்த தழுவாதே
முழுசாதே மோவாது உச்சி
கைம்மாவின் நடை அன்ன மென்னடையும்
கமலம் போல் முகமும் காணாது
எம்மானை என் மகனை இழந்திட்ட
இழி தகையேன் இருகின்றேனே
அம்மா என்று உகந்து அழைக்கும், Amma Endru Ughandhu Azaikkum - ஐயா! என்று மகிழ்ச்சி கொண்டு (என்னை) அழைக்கின்ற
ஆர்வம் சொல் கேளாதே, Aarvam Sol Kelaadhe - ப்ரீதி விளங்குஞ்சொல்லை (நான்) கேட்கப் பெறாமலும்
அணி சேர் மார்வம், Ani Seer Maarvam - ஆபரணங்கள் பொருந்திய (என் மகனது) மார்பு
என் மார்வத்திடை அழுந்த, En Maarvathidai Azhundhu - என் மார்பிலே அழுந்தும்படி
தழுவாதே, Thazhuvathae - (நான் அவனை) இறுக அணைத்துக் கொள்ளாமலும்
முழுசாதே, Muzhusaathae - (அந்த ஆலிங்கந போகக் கடலில்) முழுகாமலும்
உச்சி மோவாது, Uchi Moavathu - உச்சியை மோந்திடாமலும்
கைம்மாவின் நடை அன்ன மெல் நடையும், Kaimmaavin Nadai Anna Mel Nadaiyum - யானையினது நடை போன்ற (கம்பீரமான அம்மகனது) மென்மையான நடையின் அழகையும்
கமலம் போல் முகமும் காணாது, Kamalam Pol Mukamum Kaanathu - தாமரை மலர்போன்ற (அவனது) முகப் பொலிவையும் காணமாலும்
எம்மானை என் மகனை இழந்திட்ட, Emmaanai En Maganai Izhandhitta - எமது ஐயனான என் மகனைக் (காடேறப் போக்கி) இழந்து விட்ட
இழி தகையேன், Izhil Thagaiyen - இழிவான செயலைச் செய்தவனான நான்
இருக்கின்றேனே, Irukkindraen - (இன்னமும் அழிந்திடாமல்) உயிர் வாழ்ந்திருக்கின்றேனே.
736பெருமாள் திருமொழி || (வன் தாள் இணை) - தனயன் கான் புகத் தசரதன் புலம்பல் 7
பூ மருவி நறும் குஞ்சி சடையா புனைந்து
பூம் துகில் சேர் அல்குல்
காமர் எழில் விழல் உடுத்து கலன் அணியாது
அங்கங்கள் அழகு மாறி
ஏமரு தோள் என் புதல்வன் யான் இன்று
செல தக்க வனம் தான் சேர்த்தல்
தூ மறையீர்! இது தகவோ? சுமந்திரனே!
வசிட்டனே! சொல்லீர் நீரே
தூ மறையீர், Thoo Maraiyir - நித்ய நிர்த் தோஷமான வேதத்ததை ஓதி யிருக்கிற பிராமணர்களே!
சுமந்திரனே, Sumandhiranae - (ராஜ தர்மத்தை நன் கறிந்து நடத்திப் போந்த ஸுமந்த்ரரே!)
வசிட்டனே, Vachittanae - ராஜ தர்மங்களை உபதேசித்துப் போருகிற) வஸிஷ்ட மஹர்ஷியே (உங்களை ஒரு விஷயம் கேட்கிறேன்)
பூ மருவும் நறு குஞ்சி, Poo Maruvum Naru Kunchi - புஷ்பம் மாறாதே யிருப்பதாய் மணம் கமழா நின்ற திருக் குழலை
புன் சடை ஆ புனைந்து, Pun Sadai Aa Punaindhu - விகாரமான ஜடையாகத் திரித்து
பூ துகில் சேர் அல்குல், Poo Thugil Ser Alkul - நல்ல பட்டுப் பீதாம்பரங்கள் சாத்த வேண்டிய திருவரையிலே
காமர் எழில் விழல் உடுத்து, Kaamar Ezhil Vizhal Uduthu - காண்கைக்கு ஆசைப்படத்தக்க அழகிய விச்வாமித்ரத்தைக் கயிறாக முறுக்கிச் சாத்தி
கலன் அணி யாது, Kalan Ani Yaadhu - திருவாபரணங்கள் அணியாமல்
அங்கங்கள் அழகு மாறி, Angangal Azhagu Maari - இயற்கை யழகுக்கு மேல் திருவாபரணங்களால் உண்டாகக்கூடிய செயற்கை யழகின்றியிலே
ஏமரு தோள் என் புதல்வன் தான், Aemaru Thol En Puthalvan Thaan - ஸுரக்ஷிதமான தோள்களை யுடையனான எனது குமாரனானவன்
யான் இன்று செல தக்க வனம் சேர்தல், Yaan Indru Sela Thakka Vanam Serthal - நான் இப்போது போகவேண்டிய காட்டுக்குத் தான் போவது
தகவோ, Thagavoe - தகுதி தானோ!
நீரே சொல்லீர், Neere Solliir - (தர்மஜ்ஞரான) நீங்களே (ஆராய்ந்து) சொல்லுங்கள்
737பெருமாள் திருமொழி || (வன் தாள் இணை) - தனயன் கான் புகத் தசரதன் புலம்பல் 8
பொன் பெற்றார் எழில் வேத புதல்வனையும்
தம்பியையும் பூவை போலும்
மின் பற்றா நுண் மருங்குல் மெல்லியல் என்
மருகியையும் வனத்தில் போக்கி
நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு
என்னையும் நீள் வானில் போக்க
என் பெற்றாய்? கைகேசி! இரு நிலத்தில்
இனிதாக இருக்கின்றாயே
கைகேசீ, Kaikeesi - கைகேயியே
பொன் பெற்றார் எழில் வேதம் புதல்வனையும், Pon Pettraar Ezhil Vedham Puthalvanaiyum - கல்விச் செல்வத்தைப் பெற்றவர்களான உபாத்தியாயரின்
தம்பியையும், Thambiyaiyum - (அவனது) தம்பியான லக்ஷ்மணனையும்
பூவை போலும், Poovai Polum - (பேச்சின் இனிமையிற் கொஞ்சுகிற) கிளி போன்றவளும்
மின் பற்றா நுண் மருங்குல் மெல் இயல்என் மருகியையும், Min Patraa Nun Marungul Mel Iyalen Marugiyaiyum - மின்னலும் ஈடாகமாட்டாத நுண்ணிய இடையையும்
வனத்தில் போக்கி, Vanathil Pookki - காட்டுக்குப் போகச்செய்து
நின் பற்று ஆம் நின் மகன் மேல் பழி விளைத்திட்டு, Nin Pattru Aam Nin Magan Mel Pazhi Vilaittittu - உனது அன்புக்கு இடமான உன் மகனான பரதன்
என்னையும் நீள் வானில் போக்க, Ennaiyum Neel Vaanil Pookka - (புத்ர விரஹத்தால்) என்னையும் தூரத்திலுள்ள மேலுலகத்திற்குச் செலுத்துதலினால்
என் பெற்றாய், En Pettraai - நீ என்ன பயனடைந்தாய்!
இரு நிலத்தில், Iru Nilathil - பெரிய இவ்வுலகத்தில்
இனிது ஆக, Inidhu Aaga - சுகமாக
இருக்கின்றாயே, Irukkindraaye - வாழ்கின்றாயே
மருகி, Marugi - மகன் மனைவி (இதன் ஆண்பால்-மருகன்) என் பெற்றாய் = இவ்வளவு கொடுமைகளை ஒருங்கே செய்தற்கு
738பெருமாள் திருமொழி || (வன் தாள் இணை) - தனயன் கான் புகத் தசரதன் புலம்பல் 9
முன் ஒரு நாள் மழு வாளி சிலை வாங்கி
அவன் தவத்தை முற்றும் செற்றாய்
உன்னையும் உன் அருமையையும் உன் நோயின்
வருத்தமும் ஒன்றாக கொள்ளாது
என்னையும் என் மெய் உரையும் மெய்யாக
கொண்டு வனம் புக்க எந்தாய்!
நின்னையே மகனாய் பெற பெறுவேன்
ஏழ் பிறப்பும் நெடும் தோள் வேந்தே
முன் ஒருநாள், Mun Orunaal - முன்பு ஒரு நாளிலே
மழு ஆளி சிலை வாங்கி, Mazhu Aali Silai Vaangi - பரசுராமனிடத்திலிருந்து அவன் கை வில்லை வாங்கி
அவன் தவத்தை முற்றும் பெற்றாய், Avan Thavathai Muttrum Pettraai - அவனியற்றிய தபஸ்ஸின் பயனை முழுதும் (அம்புக்கு இலக்காக்கி) அழித்திட்டவனே!
உன்னையும் உன் அருமையையும், Unnaiyum Un Arumaiyaiyum - உன்னுடைய மேன்மையையும் (நான் பெருந்தவஞ் செய்து) உன்னை அருமை மகனாகப் பெற்ற தன்மையையும்
உன் மோயின் வருத்தமும், Un Moyin Varuththamum - உனது பெற்ற தாயான கௌசல்யை (உன்னை பிரியில் தரியேன் என்று) உன் பின் தொடர்ந்த வருத்தத்தையும்
ஒன்று ஆக கொள்ளாது, Ondru Aaga Kollaadhu - ஒரு பொருளாகக் கொள்ளாமல்
என்னையும், Ennaiyum - என்னையும்
என் மெய் உரையும், En Mei Uraiyum - எனது ஸத்ய வாக்கையும்
மெய் ஆக கொண்டு, Mei Aak Kondu - பொருளாகக் கருதி
வனம் புக்க எந்தாய், Vanam Pukka Endhai - காடேறச் சென்ற எமது ஐயனே!
நெடுந்தோள் வேந்தே, Nedunthol Vende - பெரிய தோள்களை யுடைய அரசனே!
ஏழ் பிறப்பும், Ezhu Pirappum - இனி அனேக ஜன்மங்கள் பிறந்து பிறந்த ஜன்மந்தோறும்
நின்னையே மகன் ஆக பெற பெறுவேன், Ninnaiye Magan Aak Perap Peruven - நீ எனக்குப் பிள்ளையாய்ப் பிறக்கும்படி பேறு பெறக் கடவேன்.
மழு ஆளி, Mazhu Aali - மழுவை (ஆயுதமாக) ஆள்பவன்; இ-கருத்தாப்பொருள் விகுதி.
அன்றியே, மழு வாளி, Andriye Mazhu Vaali - மழுவாகிய ஆயுதத்தை யுடையவன் இ-பெயர் விகுதி.
மழு வாள், Mazhu Vaal - இரு பெயரொட்டுப் பண்புத்தொகை. மழு – கோடாலி
தந்தை, மகனை எந்தாய் என்றது, அன்புபற்றிய வழுவமைதி. செற்றாய், Thandai Maganai Endhai Endrathu Anbu Patriya Vazhvu Amaithi Settrai - செறு-பகுதி
739பெருமாள் திருமொழி || (வன் தாள் இணை) - தனயன் கான் புகத் தசரதன் புலம்பல் 10
தேனகுமா மலர் கொந்தாள் கௌசலையும்
சுமித்ரையும் சிந்தை நோவ
கூன் உருவில் கொடும் தொழுத்தை சொல் கேட்ட
கொடியவள் தன் சொல் கொண்டு இன்று
கானகமே மிக விரும்பி நீ துறந்த
வள நகரைதுறந்து நானும்
வானகமே மிக விரும்பி போகின்றேன்
மனு குலத்தார் தங்கள் கோவே!
மனுகுலத்தார் தங்கள் கோவே, Manukulathar Thangal Kove - மநுகுலத்திற் பிறந்த அரசர்களிற் சிறந்தவனே!
தேன் நகு மா மலர் கூந்தல், Then Nagu Maa Malar Koondhal - தேனைப் புறப்பட விடுகிற சிறந்த மலர்களைச் சூடிய கூந்தலையுடைய
கௌசலையும், Kausalayum - கௌஸல்யையும்
சுமித்திரையும், Sumithirayum - ஸுமித்ரையும்
சிந்தை நோவ, Sindhai Nova - மனம் வருந்த
கூன் உருவின் கொடும் தொழுத்தை சொல் கேட்ட கொடியவள் தன்சொல் கொண்டு, Koon Uruvin Kodum Thozuthai Sol Ketta Kodiyaval Than Sol Kondu - வக்ரமான வடிவம் போலவே
கானகமே மிக விரும்பி இன்று நீ துறந்த, Kaanagame Miga Virumbi Indru Nee Thurandha - காட்டையே மிகவும் விரும்பி இப்பொழுது நீ கைவிட்ட
வளம் நகரை, Valam Nagara - (உன் பட்டாபிஷேகத்தின் பொருட்டு) அலங்கரிக்கப் பட்டிருக்கிற இந்நகரத்தை
நானும் துறந்து, Naanum Thurandu - நானும் விட்டிட்டு
வானகமே மிக விரும்பி போகின்றேன், Vaanagame Mika Virumbi Pokingren - மேலுலகத்தையே மிகவும் விரும்பி (அவ்விடத்திற்குச்) செல்கின்றேன்.
கூனுருவின் = இன், Koonuruvin In - ஐந்தனுருபு ஒப்புப்பொருள். கொடுமை- தீமையே யன்றி வளைவுமாதலை
தொழுத்தை தொழும்பன என்பதன் பெண்பால். மநு, Thozhuthai Thozhumpana Enbathin Penpaal Maanu - ஸூர்யனது குமாரன்; வைவஸ்வதமநு.
740பெருமாள் திருமொழி || (வன் தாள் இணை) - தனயன் கான் புகத் தசரதன் புலம்பல் 11
ஏரார்ந்த கரு நெடுமால் ராமனாய்
வனம் புக்க வதனுக்கு ஆற்றா
தாரர்ந்த தடவரை தோள் தயரதன் தான்
புலம்பிய அப் புலம்பல் தன்னை
கூரார்ந்த வேல் வலவன் கோழியூர் கோன்
குடை குலசேகரன் சொல் செய்த
சீரார்ந்த தமிழ் மாலை இவை வல்லார்
தீ நெறி கண் செல்லார் தாமே
ஏர் ஆர்ந்த, Aer Aarntha - அழகு நிறைந்த
கரு, Karuthu - கரு நிறமுடைய
நெடுமால், Nedumaal - மஹா விஷ்ணு
இராமன் ஆய், Iraman Aayi - ஸ்ரீ ராமனாகத் திருவவதரித்து
வனம் புக்க, Vanam Pukka - காட்டுக்குச் சென்றதான
அதனுக்கு, Adhanukku - அச் செயலை
ஆற்றா, Aartra - பொறுக்க மாட்டாமல்
தார் ஆர்ந்த தட வரை தோள் தயரதன் புலம்பிய, Thaar Aarntha Thada Varai Thol Thayaratthan Pulampiya - வெற்றி மாலை பொருந்திய பெரிய மாலை போன்ற
அப் புலம்பல் தன்னை, Ap Pulampal Thannai - அக் கதறல்களை,
கூர் ஆர்ந்த, Koora Aarntha - கூர்மை மிக்க
வேல் வலவன், Vel Valavan - வேற்படையின் தொழிலில் வல்லவரும
கோழியர் கோன், Kozhiyar Kon - உறையூரிலுள்ளார்க்குத் தலைவரும்
குடை, Kudai - கொற்றக்குடையை உடையவருமான
குலசேகரன், Kulashekaran - குலசேகராழ்வார்
சொல் செய்த, Sol Seitha - அருளிச் செய்த
சீர் ஆர்ந்த, Seer Aarntha - சிறப்பு மிக்க
தமிழ் மாலை இவை, Tamil Maalai Ivai - தமிழ்ப் பிரபந்தரூபமான இப் பத்துப் பாசுரங்களையும்
வல்லார், Vallaar - கற்க வல்லவர்கள்
தீ நெறிக்கண், Thee Nerikkan - கொடிய வழி யொன்றிலும்
செல்லார், Sellaar - சென்று சேர மாட்டார்கள். (தான், தாம்–அசைகள்)
741பெருமாள் திருமொழி || (அம் கண் நெடு மதிள்)- தில்லைநகர் திருச்சித்திர கூடத்தில் தொல்லிராமனாய்த் தோன்றிய கதைமுறை 1
அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்
அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி
வெம் கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் தோன்றி
விண் முழுதும் உய்ய கொண்ட வீரன் தன்னை
செம் கண் நெடும் கரு முகிலை ராமன் தன்னை
தில்லை நகர் திரு சித்திர கூடம் தன்னுள்
எங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை
என்று கொலோ? கண் குளிர காணும் நாளே
அம் கண், Am Kan - அழகிய இடத்தை யுடையதும்
நெடு மதிள், Nedu Mathil - உயர்ந்த மதிள்களினால்
புடை சூழ், Pudai Soozh - நாற்புறமும் சூழப்பட்டதும்
அயோத்தி என்னும், Ayothi Ennum - அயோத்யா என்று ப்ரஸித்தமுமான
அணி நகரத்து, Ani Nagaratthu - அழகிய நகரத்திலே
உலகு அனைத்தும், Ulaku Anaithum - ஸகல லோகங்களையும்
விளக்கும் சோதி, Vilakkum Sothi - விளங்கச் செய்கிற தனது ஒளியின் அம்சத்தாலே
வெம் கதிரோன் குலத்துக்கு, Vem Kathiron Kulaththukku - ஸூர்ய வம்சத்துக்கு (விளக்க முண்டாம்படி)
ஓர் விளக்கு ஆய் தோன்றி, Oru Vilakku Aay Thonri - ஒப்பற்தொரு விளக்கு போல (அதில்) வந்து அவதரித்து
விண் முழுதும், Vin Muzhudhum - தேவர்களெல்லாரையும்
உயக் கொண்ட, Uyak Konda - துன்பந்தீர்ந்து வாழச்செய்த
வீரன் தன்னை, Veeran Thannai - மஹாவீரனும்
செம் கண், Sem Kan - சிவந்த திருக்கண்களையுடைய
நெடு கரு முகிலை, Nedu Karu Mukilai - பெரிய காளமேகம் போன்ற வடிவ முடையவனும்
இராமன் தன்னை, Iraman Thannai - ஸ்ரீராமனென்னும் திருநாமமுடையவனும்
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள், Thillai Nagar Thiru Chithra Koodam Thannul - தில்லை நகரத்திலுள்ள திருச்சித்திர கூடத்தில் (எழுந்தருளியிருக்கிற)
எங்கள் தனி முதல்வனை, Engal Thani Muthalvanai - எமக்கு ஒப்பற்ற காரணமாகிறவனும்
எம் பெருமான் தன்னை, Em Perumaan Thannai - எமக்குத் தலைவனுமான பரமனை
கண் குளிர காணும் நாள், Kan Kulira Kaanum Naal - கண்கள் குளிரும்படி ஸேவிக்கும் நாள்
என்று கொல் ஓ, Endru Kol O - எந்நாளோ!
742பெருமாள் திருமொழி || (அம் கண் நெடு மதிள்)- தில்லைநகர் திருச்சித்திர கூடத்தில் தொல்லிராமனாய்த் தோன்றிய கதைமுறை 2
வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தை கீறி
வரு குருதி பொழி தர வன் கணை ஒன்றேவி
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து
வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்
செந்தளிர் வாய் மலர் நகை சேர் செழும் தண் சோலை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த
அணி மணி யாசனத்து இருந்த அம்மான் தானே
வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தை கீறி, Vandhu Edhirntha Thaadagai Than Uraththai Keerii - செருக்கிவந்து எதிரிட்ட தாடகையினுடைய மார்பைப் பிளந்து
வரு குருதி பொழிதர, Varu Kuruthi Pozhithara - ரத்தம் வெளிவந்து சொரியம் படி
வல் கணை ஒன்று ஏவி, Val Kanai Ondru Aevii - வலிய ஒப்பற்றதோர் அம்பைச் செலுத்தி
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து, Manthiram Kol Marai Munivan Vellvi Kaaththu - எல்லா மந்திரங்களையும் தம்மிடத்திலே கொண்ட
வல் அரக்கர், Val Arakkar - (அந்த யாகத்துக்கு இடையூறு செய்த ஸுபாஹூ முதலிய) வலிய ராக்ஷஸர்களுடைய
உயிர் கண்ட, Uyir Kanda - உயிரைக் கொள்ளை கொண்ட
மைந்தன், Maindhan - மிடுக்கை யுடையவன் (யாரென்னில்)
செம் தளிர்வாய் மலர், Sem Thalirvaai Malar - சிவந்த தளிர்களின் நடுவே மலர்ந்த புஷ்பங்களை யுடையதும்
நகை சேர், Nagai Seer - (காண்பவர்) மகிழும்படியான அழகு பொருந்தினதும்
செழு, Sezhu - செழுமையை யுடையதுமான
தண், Than - குளிர்ந்த
சோலை, Solai - சோலைகளை யுடைய
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த, Andhanargal Oru Moovaayiravar Aetha - ப்ரர்மணர் மூவராயிரம் பேர் (திரண்டு துதிக்க)
அணி மணி ஆசனத்து இருந்த, Ani Mani Aasanaththu Irundha - அழகிய ரத்நஸிம்ஹாஸநத்திலே வீற்றிருந்த
அம்மான் தானே, Ammaan Thaaney - ஸர்வேச்வரனே யாவன்;
காண்மின், Kaanmin - அறியுங்கள்.
743பெருமாள் திருமொழி || (அம் கண் நெடு மதிள்)- தில்லைநகர் திருச்சித்திர கூடத்தில் தொல்லிராமனாய்த் தோன்றிய கதைமுறை 3
செவ்வரி நல் கரு நெடும் கண் சீதைக்காகி
சின விடையோன் சிலை இருத்து மழு வாள் ஏந்தி
செவ்வரி நல் சிலை வாங்கி வென்றி கொண்டு
வேல் வேந்தர் பகை தடிந்த வீரன் தன்னை
தெவ்வர் அஞ்சு நெடும் புரிசை வுயர்ந்த பாங்கர்த்
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
எவ்வரு வெஞ்சிலை தடக் கை ராமன் தன்னை
இறைஞ்சுவார் இணை அடியே இறைஞ்சினேனே
செவ்வரி நல் கரு நெடு கண், Sevvari Nal Karu Nedhu Kan - (உத்தம லக்ஷ்ணமான) சிவந்த ரேகைகள் படர்ந்த அழகிய கருமையான நீண்ட கண்களை யுடைய
சீதைக்கு ஆக, Seethaikku Aaga - வநிதையை மணம் புரிதற் பொருட்டு
சினம் விடையோன், Sinam Vidaiyon - கோபத்தை யுடைய ரிஷபத்தை வாஹநமாக வுடையனான சிவபிரானுடைய
சிலை இறுத்து, Silai Iruththu - வில்லை முறித்து (பின்பு மிதிலா புரியினின்று மீளும் வழியில்)
மழுவாள் ஏந்தி, Mazhuvaal Aendi - கோடாலியாகிய ஆயுதத்தை ஏந்தியவனான பரசுராமனுடைய
வெவ் வரி நல் சிலை, Veve Vari Nal Silai - பயங்கரமான கட்டமைந்த சிறந்த வில்லை
வாங்கி, Vaangi - கையிற்கொண்டு (வளைத்து)
வென்றி கொண்டு, Vendri Kondu - (அவனை) வென்று
வேல் வேந்தர் பகை தடித்த, Vel Vendar Pagai Thaditha - (தான் அவதரித்த ஜாதியிற்பிறந்த) வேற்படையை யுடைய க்ஷத்ரியர்களுக்குப் பகையைத் தீர்த்த
வீரன் தன்னை, Veeran Thannai - மஹா வீரனான
தெவ்வர், Thevvar - பகைவர்கள்
அஞ்சு, Anju - (கண்டமாத்திரத்திலே, கடக்க வொண்ணா தென்று) அஞ்சும் படியான
நெடு புரிசை, Nedu Purisai - உயர்ந்த மதிளையும்
உயர்ந்த பாங்கர், Uyarntha Paankar - ஓங்கிய (அட்டாலை யென்னும்) மதிற்பக்கத் திடத்தையுமுடைய (எழுந்தருளியிருக்கிற)
எவ்வரு வெம் சிலை தடகை இராமன் தன்னை, Evvaru Vem Silai Thadakai Raaman Thannai - (வேறொருவரால்) அடக்கியாளுதற்கு அரியதும் (பகைவர்க்குப்)
இறைஞ்சுவார், Iraichuvar - வணங்குகிற அடியார்களுடைய
இணை அடியே, Inai Adiye - இரண்டு திருவடிகளையே
இறைஞ்சினேன், Iraichinena - வணங்கினேன்.
ஏ, Ae - அம்பு தொடுப்பதற்கு உரிய வரி – நீண்ட என்று கஷ்டப்பட்டு பொருள் கொள்ளலாமாயினும்,
ஏவு, Aevu - ஏவுதல்,அடக்கியாளுதல்; (முதனிலைத் தொழிற்பெயர்) அரு-ஒண்ணாத; எனவே, அடக்கியாள முடியாத என்றதாயிற்று.
744பெருமாள் திருமொழி || (அம் கண் நெடு மதிள்)- தில்லைநகர் திருச்சித்திர கூடத்தில் தொல்லிராமனாய்த் தோன்றிய கதைமுறை 4
தொத்தலர் பூம் சுரி குழல் கைகேசி சொல்லால்
தொன் நகரம் துறந்து துறை கங்கை தன்னை
பத்தி உடை குகன் கடத்த வனம் போய் புக்கு
பரதனுக்கு பாதுகமும் அரசும் ஈந்து
சித்ர கூடத்து இருந்தான் தன்னை இன்று
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
எத்தனையும் கண் குளிர காண பெற்ற
இரு நிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார் தாமே
தொத்து அலர் பூ சுரி குழல், Thoththu Alar Poo Suri Kuzhal - கொத்துக் கொத்தாக மலர்ந்த புஷ்பங்களைச் சூடிய நுனி சுருண்ட கூந்தலை யுடைய
கைகேசி, Kaikesi - கைகேயியினது
சொல்லால், Sollaal - சொல்லின்படி
தொல் நகரம் துறந்து, Thol Nagaram Thurandhu - தொன்று தொட்டுப் பரம்பரையாய் வருகிற ராஜ்யத்தைக் கை விட்டு
துறை கங்கை தன்னை, Thurai Gangai Thannai - கங்கையின் துறையை
பத்தி உடை குகன் கடத்த, Pathi Udai Kugan Kadatha - மஹா பக்தனான குஹப் பெருமான் புணை செலுத்தி யுதவ; (கடந்து)
வனம் போய் புக்கு, Vanam Poi Pukku - காட்டிற்போய்ச் சேர்ந்து
பரதனுக்கு, Barathanukku - (அங்கு வந்த) பரதாழ்வானுக்கு
பாதுகமும் அரசும் ஈந்து, Pathugamum Arasum Eendu - (தனது) மரவடியையும் ராஜ்யத்தையுங் கொடுத்து
சித்திர கூடத்து இருந்தான் தன்னை, Siththira Koodaththu Irundhaan Thannai - சித்ரகூட பர்வதத்தி லெழுந்தருளி யிருந்த ஸ்ரீராமபிராணை
இன்று, Indru - இப்பொழுது (பிற்காலத்தில்)
கண் குளிர காண பெற்ற, Kan Kulira Kaana Petra - கண் குளிரும்படி ஸேவிக்கப் பெற்ற
இரு நிலத்தார்க்கு, Iru Nilaththaar Kku - பெரிய (சிறந்த) பூலோகத்திலுள்ளவர்களுக்கு
இமையவர், Imayavar - நித்யஸூரிகளும்
எத்தனையும் நேர் ஒவ்வார், Ethanaiyum Neer Ovar - சிறிதும் ஸமமாக மாட்டார்கள். (தாம் ஏ–ஈற்றசைகள், தோற்றமுமாம்)
745பெருமாள் திருமொழி || (அம் கண் நெடு மதிள்)- தில்லைநகர் திருச்சித்திர கூடத்தில் தொல்லிராமனாய்த் தோன்றிய கதைமுறை 5
வலி வணக்கு வரை நெடும் தோள் விராதை கொன்று
வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி
கலை வணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கி
கரனோடு தூடணன் தன் உயிர் ரை வாங்கி
சிலை வணக்கி மான் மறிய வெய்தான் தன்னை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
தலை வணக்கி கை கூப்பி ஏத்த வல்லார்
திரிதலால் தவமுடைத்து தரணி தானே
வலி வணக்கு, Vali Vanakku - (எதிரிகளுடைய) வலிமையைத் தோற்பிக்கின்ற
வரை நெடு தோள், Varai Nedu Thol - மலை போன்ற பெரிய தோள்களை யுடைய
விராதை, Virathai - விராதனென்னும் இராக்ஷஸனை
கொன்று, Kondru - கொன்று
வண் தமிழ் மா முனி கொடுத்த, Van Tamil Maa Muni Kodutha - சிறந்த தமிழ்ப பாஷைக்கு உரியவரான அகஸ்திய முனிவர் கொடுத்த
வரி வில் வாங்கி, Vari Vil Vaangi - கட்டமைந்த வில்லை பெற்று
கலை வணக்கு நோக்கு அரக்கி மூக்கை நீக்கி, Kalai Vanakku Nookku Arakki Mookkai Neekki - மானின் பார்வையைத் தோற்பிக்கும் யடியான பார்வை யழகை
கானோடு தூடணன் தன் உயிரை வாங்கி, Kaanodu Thoodanthan Than Uyirai Vaangi - கரன் தூஷணன் என்னும் அரக்கர்களின் உயிரை (அவர்களுடம்பினின்று) கவர்ந்து
மான், Maan - மாரீசனாகிய மாயா ம்ருகமானது
மறிய, Mariya - அழியும்படி
சிலை வணக்கி எய்தான் தன்னை, Silai Vanakki Eydhaan Thannai - தனது வில்லை வளைத்து அம்புகளை எய்தவனான இராமபிரானை
தலை வணங்கி கை கூப்பி ஏத்த வல்லார், Thalai Vanangi Kai Koopi Aetha Vallar - தலை வணங்கி அஞ்ஜலி பண்ணித் துதிக்கவல்ல அடியார்கள்
திரிதலால், Thirithalaal - (தன்மீது) ஸஞ்சரிக்கப் பெறுதலால்
தரணி, Tharani - பூமியானது
தவம் உடைத்து, Thavam Udaithu - பாக்கியமுடையது (தான், ஏ -ஈற்றசைகள், தேற்றமுமாம்)
இங்கே மூக்கு என்றது, Inge Mookku Endrathu - மற்றும் அறுபட்ட அவயவங்களுக்கும் உபலக்ஷணம்.
746பெருமாள் திருமொழி || (அம் கண் நெடு மதிள்)- தில்லைநகர் திருச்சித்திர கூடத்தில் தொல்லிராமனாய்த் தோன்றிய கதைமுறை 6
தன மருவு வைதேகி பிரியல் உற்று
தளர்வெய்தி சடாயுவை வைகுந்தத்து ஏற்றி
வன மருவு கவி அரசன் காதல் கொண்டு
வாலியை கொன்று இலங்கை நகர் அரக்கர் கோமான்
சினம் அடங்க மாருதியால் சுடுவித்தானை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
இனிது அமர்ந்த வம்மானை ராமன் தன்னை
ஏத்துவார் இணை அடியே யேத்தினேனே
தனம் மருவு, Thanam Maruvu - (தான் விரும்புஞ்) செல்வமாகப் பொருந்திய
வைதேகி பிரியல் உற்று, Vaidhegi Piriyal Utru - பிராட்டி பிரியப் பெற்று
தளர்வு எய்தி, Thalarvu Eydhi - (அதனால்) வருத்தமடைந்து
சடாயுவை, Sadaayuvai - ஜடாயுவென்னும் கழுகரசை
வைகுந்தத்து ஏற்றி, Vaikundhathu Aetri - பரமபதத்திற் செலுத்தி
வனம் மருவு, Vanam Maruvu - (வாலிக்கு அஞ்சிக்) காட்டில் மறைந்து வசிக்கிற
கவி அரசன், Kavi Arasan - வாநர ராஜனான சுக்ரீவனுடன்
காதல் கொண்டு, Kaadhal Kondo - ஸ்நேஹஞ் செய்து கொண்டு
இலங்கை நகர், Ilankai Nagar - இலங்காபுரியை
அரக்கர் கோமான் சினம் அடங்க, Arakkar Koman Sinam Adanga - (அதற்குத் தலைவனாகிய) ராக்ஷஸராஜானான ராவணனுடைய செருக்கு ஒழியும்படி
மாருதியால் சுடுவித்தானை, Maarudhiyaal Suduvithaanai - அனுமானைக் கொண்டு எரிப்பித்தவனும்
இனிது அமர்ந்த, Inidhu Amarntha - இனிமையாய் எழுந்தருளியிருக்கிற
அம்மானை, Ammanai - ஸர்வேச்வரனுமான
இராமன் தன்னை, Iraman Thannai - இராமபிரானை
ஏத்துவார், Aeththuvaar - துதிக்கின்ற அடியார்களுடைய
இணை அடியே, Inai Adiye - உபய பாதத்தையே
எத்தினேன், Eththinain - துதிக்குந் தன்மையேன் (யான்.)
747பெருமாள் திருமொழி || (அம் கண் நெடு மதிள்)- தில்லைநகர் திருச்சித்திர கூடத்தில் தொல்லிராமனாய்த் தோன்றிய கதைமுறை 7
குரை கடலை அடல் அம்பால் மறுக வெய்து
குலை கட்டி மறு கரையை அதனால் ஏறி
எரி நெடு வேல் அரக்கரோடும் இலங்கை வேந்தன்
இன் உயிர் கொண்டவன் தமிபிக்கு அரசும் ஈந்து
திரு மகளோடு இனிது அமர்ந்த செல்வன் தன்னை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால்
அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே
குரை கடலை, Kurai Kadal - கோஷிக்கின்ற கடலை
அடல் அம்பால், Adal Ampaal - தீக்ஷ்ணமான அம்பைக் கொண்டு
மறுக எய்து, Maruga Eythu - கலங்கும்படி எய்யத் தொடங்கி
குலை கட்டி, Kulai Katti - (அதில்) அணை கட்டி
அதனால், Adhanal - அந்த அணை வழியாக
மறு கரையை ஏறி, Maru Karaiyai Eri - (கடல் கடந்து) அக்கரை சேர்ந்து
எரி நெடு வேல் அரக்கரொடும், Eri Nedhu Vel Arakkarodum - (சத்துருக்களை) எரிக்கின்ற நீண்ட வேற்படையை யுடைய இராக்கதர்களும்
இலங்கை வேந்தன், Ilankai Vendan - இலங்கைக்கு அரசனான இராவணனும் ஆகிய அனைவர்களுடைய
இன் உயிர் கொண்டு, In Uyir Kondu - இனிய உயிரைக் கவர்ந்து (கொன்று)
அவன் தம்பிக்கு, Avan Thambikku - அவ்விராவணனது தம்பியான விபீஷணனுக்கு
அரசும் இந்து, Arasum Hindu - ராஜ்யத்தைக் கொடுத்து
திருமகளோடு, Thirumagalodu - லக்ஷ்மியின் அவதாரமான பிராட்டியுடனே
இனிது அமர்ந்த, Inidhu Amarntha - இனிமையாகச் சேர்ந்த
செல்வன் தன்னை, Selvan Thannai - எல்லா வகைச் செல்வங்களுமுடையவனும்
அரசு அமர்ந்தான், Arasu Amarnthaan - தனது மேன்மை தோன்ற எழுந்தருளி யிருப்பவனுமான
அடி சூடும், Adi Soodum - இராமபிரானது திருவடிகளைத் தலைமேற் கொள்ளுதலாகிற
அரசை அல்லால், Arasai Allal - அரசாட்சியைப் பெற விரும்புவேனே யன்றி
மற்று அரசு, Mattru Arasu - அதற்கு மாறாக ஸ்வாதந்திரியம் பாராட்டுகிற அரசாட்சியை
அரசு ஆக எண்ணேன், Arasu Aaga Ennen - ஒரு பொருளாக மதிக்க மாட்டேன்.
748பெருமாள் திருமொழி || (அம் கண் நெடு மதிள்)- தில்லைநகர் திருச்சித்திர கூடத்தில் தொல்லிராமனாய்த் தோன்றிய கதைமுறை 8
அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி
அரசு எய்தி அகத்தியன் வாய் தான் முன் கொன்றான்
தன் பெரும் தொல் கதை கேட்டு மிதிலை செல்வி
உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்
செம் பவள திறல் வாய் தன் சரிதை கேட்டான்
தில்லை நகர் சித்ர கூடம் தன்னுள்
எம்பெருமான் தான் சரிதை செவியால் கண்ணால்
பருகுவோம் இன் அமுதம் மதியோம் அன்றே
அம் நெடு பொன் மணி மாடம், Am Nedhu Pon Mani Maadam - அழகிய உயர்ந்த பொன்னையும் இரத்தினங்களையுங் கொண்டு
அயோத்தி, Ayodhya - அயோத்யா நகரத்துக்கு
எய்தி, Eythi - மீண்டு வந்து
அரசு எய்தி, Arasu Eythi - அரசாட்சியை அடைந்து
தான் முன் கொன்றான் தன், Thaan Mun Konraan Than - தன்னால் முன்பு கொல்லப்பட்டவனான இராவணனுடைய
பெரு தொல் கதை, Peru Thol Kadhai - பெரிய பூர்வ வ்ருத்தாந்தங்களை யெல்லாம்
அகத்தியன் வாய் கேட்டு, Akathiyan Vaai Kaettu - அகஸ்திய மகாமுனிவன் வாயாற் சொல்லக் கேட்டு
மிதிலை செல்வி, Mithilai Selvi - மிதிலா நகரத்தில் தோன்றிய பிராட்டி
உலகு உய்ய, Ulaku Uyya - உலக முழுவதும் வாழும்படி
திரு வயிறு வாய்த்த, Thiru Vayiru Vaayththa - பெற்ற
மக்கள், Makkal - தன் பிள்ளைகளான குசலவர்களுடைய
செம் பவளம் திரள் வாய், Sem Pavalam Thiral Vaai - சிவந்த பவழத்துண்டு போன்ற வாயினால்
தன் சரிதை, Than Sarithai - தனது சரித்திரமான ஸ்ரீராமாயணத்தை
கேட்டான், Kaettaan - கேட்டருளினவனான (எழுந்தருளியிருக்கிற)
எம் பெருமான் தன், Em Perumaan Than - எமது தலைவனுடைய
சரிதை, Sarithai - சரித்திரத்தை
செவியால் கண்ணால், பருகுவோம், Seviyal Kannal Paruguvom - காதினாற்கேட்டு (அப்பெருமானைக்) கண்ணால் ஸேவிக்கப் பெறுவோம்யாம் (அதுவேயன்றி)
இன் அமுதம், In Amudham - இனிய தேவாம்ருதத்தையும்
மதியோம், Madhiyom - ஒரு பொருளாக நன்கு மதிக்க மாட்டோம்
அன்றே, Andrae - அல்லவா! (ஈற்றசை, தோற்றமுமாம்)
அமுதம், Amudham - அமுதத்தை, ஒன்று – ஒரு பொருளாக மதியோம் என்றவாறு.
749பெருமாள் திருமொழி || (அம் கண் நெடு மதிள்)- தில்லைநகர் திருச்சித்திர கூடத்தில் தொல்லிராமனாய்த் தோன்றிய கதைமுறை 9
செறி தவ சம்புகன் தன்னை சென்று கொன்று
செழு மறையோன் உயிர் மீட்டு தவத்தோன் ஈந்த
நிறை மணி பூண் அணியும் கொண்டு இலவணன் தன்னை
தம்பியால் வான் ஏற்றி முனிவன் வேண்ட
திறல் விளங்கும் இலகுமனை பிரிந்தான் தன்னை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
உறைவானை மறவாத வுள்ளம் தன்னை
வுடையோம் மற்று உறு துயர் அடையோம் அன்றே
செறி தவம், Serri Thavam - மிக்க தபஸ்ஸை யுடையனான
சம்புகன் தன்னை, Sambugan Thannai - (சூத்ரசாதியனான) சம்புகனை
சென்று, கொன்று, Sendru Konru - (அவனிருக்கு மிடந்தேடிச்) சென்று தலையறுத்து
செழுமறை யோன் உயிர் மீட்டு, Sezhumarai Yon Uyir Meettu - சிறந்த ப்ராஹ்மண குமாரனுடைய உயிரை மீட்டுக் கொடுத்து
தவத்தோன் ஈந்த, Thavaththon Eentha - அகஸ்திய மா முனிவன் கொடுத்த
நிறைமணி பூண் அணியும் கொண்டு, Niraimani Poon Aniyum Konda - பெருவிலையுள்ள ரத்நஹாரமான ஆபரணத்தையும் சாத்தியருளி
இலவணன் தன்னை, Ilavanan Thannai - லவணாஸுரனை
தம்பியால், Thambiyal - சத்ருக்நனைக் கொண்டு
வான் ஏற்றி, Vaan Aetri - வீர ஸ்வர்க்கத்திற் குடியேற்று வித்து
முனிவன் வேண்ட, Munivan Venda - துர்வாஸமுனிவனது சாபத்தால்
திறல் விளங்கும் இலக்குமனை பிரிந்தான் தன்னை, Thiral Vilangum Ilakkumanai Pirindhan Thannai - பலபராக்கிரமம் விளங்கப் பெற்ற லக்ஷ்மணனை துறந்தவனும்
உறைவானை, Uraivaanai - நித்யவாஸம் பண்ணுகிறவனுமான இராமபிரானை
மறவாத உள்ளம் தன்னை உடையோம், Maravaadha Ullam Thannai Udaiyom - மறவாமல் எப்பொழுதும் தியானிக்கிற மனத்தையுடைய நாம்
மற்று உறு துயரம் அடையோம், Mattru Uru Thuyaram Adayom - இனி (எம்பெருமானை அநுபவிக்கப் பெற்றிலோ மென்று வருந்துன்பத்தை அடையமாட்டோம்) (அன்று, எ – ஈற்றசை)
750பெருமாள் திருமொழி || (அம் கண் நெடு மதிள்)- தில்லைநகர் திருச்சித்திர கூடத்தில் தொல்லிராமனாய்த் தோன்றிய கதைமுறை 10
அன்று சரா சரங்களை வைகுந்தத்து ஏற்றி
அடல் அரவ பகை ஏறி அசுரர் தம்மை
வென்று இலங்கு மணி நெடும் தோள் நான்கும் தோன்ற
விண் முழுதும் எதிர் வர தான் தாமமேவி
சென்று இனிது வீற்று இருந்த அம்மான் தன்னை
தில்லை நகர் சித்ர கூடம் தன்னுள்
என்றும் நின்றான் அவன் இவன் என்று ஏத்தி நாளும்
இறைஞ்சுமினோ எப் பொழுதும் தொண்டீர்! நீரே
அன்று, Anru - (தன்னடிச்சோதிக்கு எழுந்தருள்கிற) அந்நாளில்
சர அசரங்களை, Sara Asarangalai - (அயோத்யாபுரியிலுள்ள) ஜங்கமும் தாவரமுமான எல்லா வுயிர்களையும்
வைகுந்தத்து ஏற்றி, Vaikundhathu Aetri - பரமபதத்துக்குப் போகச் செய்து
அடல் அரவம் பகை ஏறி, Adal Aravam Pagai Aeri - வலிமையை யுடைய பாம்புகளுக்குப் பகையான கருடன் மேல் ஏறிக் கொண்டு
அசுரர் தம்மை வென்று, Asurar Thammai Vendru - அசுரர்களை ஜயித்து
இலங்கும் அணி நெடு தோள் நான்கும் தோன்ற, Ilangum Ani Nedu Thol Naangum Thondra - (அந்த ஜயலக்ஷ்மி) விளங்கப் பெற்ற அழகிய
விண் முழுதும், Vin Muzhudhum - பரமபதத்திலுள்ளாரெல்லாரும்
எதிர் வர, Edhir Vara - எதிர் கொண்டு உபசரிக்கும்படி
தன் தாமம் மேவி சென்று, Than Thaamam Mevi Sendru - தமது ஸ்தாநமான அப் பரம பதத்திலே போய்ப் புக்கு
இனிது வீற்றிருந்த, Inidhu Veetirundha - (தன் மேன்மை யெல்லாம் தோன்றும்படி) இனிமையாகத் (திவ்ய ஸிம்ஹாஸநத்தில்) எழுந்தருளியிருந்த
அம்மான் தன்னை தில்லை நகர் திரு சித்ரகூடம் தன்னுள் என்றும் நின்றான் அவன் இவன் என்று ஏத்தி, Ammaan Thannai Thillai Nagar Thiru Chithrakoodam Thannul Endrum Nindraan Avan Ivan Endru Aethi - ஸர்வேச்வரனை (அந்த இருப்பில் ஒன்றுங் குறையாமல் அவ்வாறே) தில்லைச் சித்ரக்கூடத்தில் எந்நாளும் (நமக்காக)
தொண்டீர் நீர், Thondir Neer - அவனுக்கு அடியவர்களான நீங்கள்
நாளும் எப்பொழுதும், Naalum Eppozhudhum - தினந்தோறும் எப்பொழுதும்
இறைஞ்சு மின், Irainthu Min - வணங்கி உஜ்ஜீவியுங்கள் (ஏ – இசைநிறை.)
751பெருமாள் திருமொழி || (அம் கண் நெடு மதிள்)- தில்லைநகர் திருச்சித்திர கூடத்தில் தொல்லிராமனாய்த் தோன்றிய கதைமுறை 11
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று
அது முதலா தன் உலகம் புக்கது
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள்
கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே
திறல் விளங்கும், Thiral Vilangum - பல பராக்கிரமம் விளங்கப் பெற்ற
மாருதியோடு, Marudiyodu - அனுமானுடனே
அமர்ந்தான் தன்னை, Amarnthaan Thannai - நித்யவாஸம் பண்ணுகிற எம் பெருமானைக் குறித்து
எல்லை இல்சீர் தயரதன் தன் மகன் ஆய் தோன்றிற்று அது முதல் ஆ தன் உலகம் புக்கது ஈறு ஆ, Ellai Ilseer Thayaratthan Than Magan Aayi Thonrihtru Adhu Muthal Aa Than Ulagam Pukkadhu Eeru Aa - அழிவில்லாத (ஸ்ரீராமாயணத்தை முழுதையும் ஸங்க்ரஹமாக அமைத்து)
கொல் இயலும் படை தானை கொற்றம் ஒள்வாள் கோழியர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த, Kol Iyallum Padai Thaanai Kotrham Olvaal Kozhiyer Kon Kudai Kulashekaran Sol Seitha - (பகைவர்களைக்) கொல்லுதல்
நல் இயல், Nal Iyall - சிறந்த இயற்றமிழிலக் கணத்துக்கு இசைந்த
இன் தமிழ் மாலை பத்தும், In Tamil Maalai Paththum - இனிய தமிழ்ப் பிரபந்த ரூபமான இப்பத்துப் பாசுரங்களையும்
வல்லார், Vallaar - கற்று வல்லவர்கள்
நலம் திகழ, Nalam Thigazha - பரமபதத்தில் விளங்குகிற
நாரணன், Naaranan - ஸ்ரீமந் நாராயணனுடைய
அடிகீழ் நண்ணுவார், Adikeezh Nannuvaar - திருவடிகளிற் சேரப் பெறுவார்கள்.