| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 696 | பெருமாள் திருமொழி || (தரு துயரம் தடாயேல்) - திருவித்துவக் கோட்டம்மானையே வேண்டி நிற்றல் 9 | நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான் தன்னையே தான் வேண்டும் செல்வம் போல் மாயத்தால் மின்னையே சேர் திகிரி வித்துவ கோட்டு அம்மா ! நின்னையே தான் வேண்டி நிற்பன் அடியேனே | வித்துவக்கோடு அம்மா!, Vithuvakkodu Amma - ; நின்னையே வேண்டி, Ninnaiye Vendi - உன்னையே விரும்பி நீள் செல்வம் வேண்டா தான் தன்னையே, Neel Selvam Venda Than Thannaiye - மிக்க ஸம்பத்தை விரும்பாதவனையே தான் வேண்டும், Than Vendum - தானாகவே வந்து சேர விரும்புகிற செல்வம் போல், Selvam Pol - அந்த ஐச்வரியம் போல, மாயத்தால், Maayathaal - (உன்) மாயையினால் (நீ என்னை உபேக்ஷித்தாயாகிலும்) அடியேன், Adiyen - உனது அடியவனான நான் நின்னையே வேண்டி நிற்பன், Ninnaiye Vendi Nirpan - உன்னையே அடைய விரும்பி நிற்பேன். |