| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 727 | பெருமாள் திருமொழி || (மன்னு புகழ்) - கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு 9 | தளை அவிழும் நறும் குஞ்சி தயரதன் தன் குல முதலாய்! வளைய வொரு சிலை யதனால் மதிள் இலங்கை அழித்தவனே! களை கழுநீர் மருங்கலரும் கண புரத்து என் கரு மணியே! இளையவர்கட்க்கு அருள் உடையாய்! ராகவனே! தாலேலோ | தளை அவிழும் நறு குஞ்சி, Thalai Avizhum Naru Kunji - கட்டு அவிழும்படியான நறுநாற்றமுடைய மயிர்முடியை யுடையனான தயரதன் தன், Thayaradhan Than - தசரத சக்ரவாத்தியினுடைய குலம் மதலாய், Kulam Mathalaiy - சிறந்த திருக்குமாரனே! ஒரு சிலை வளைய, Oru Silai Valaiya - ஒப்பற்ற வில்லானது வளைய அதனால், Adhanal - அந்த வில்லாலே களை கழுநீர், Kalai Kazhunir - களையாகப் பறிக்கப்பட்ட செங்கழுநீர்கள் மருங்கு அலரும் கணபுரத்து, Marungu Alarum Kanapurathu - சுற்றிலும் மலரப் பெற்ற திருக்கண்ணபுரத்தி லெழுந்தருளியிருக்கிற இளையவர்கட்கு, Ilaiyavarkadku - இளையவர்கள் விஷயத்திலே அருள் உடையாய், Arul Udaiyai - கருணை பொருந்தியவனே! |