திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 654 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
654பெருமாள் திருமொழி || (இருள் இரிய) - இருள் இரிய திருவரங்கப் பெருமானை கண்டு என்றுகொல் மகிழ்வேன் எனல் 8
கோலார்ந்த நெடும் சார்ங்கம் கூன் நல் சங்கம் கொலை ஆழி கொடும் தண்டு கொற்ற ஒள் வாள் காலார்ந்த கதி கருடன் என்னும் வென்றி கடும் பறவை இவை அனைத்தும் புறம் சூழ் காப்ப சேலார்ந்த நெடும் கழனி சோலை சூழ்ந்த திரு வரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும் மாலோனை கண்டு இன்ப கலவி எய்தி வல் வினையேன் என்று கொலோ வாழும் நாளே ?
பதவுரை Show / Hide
கோல் ஆர்ந்த, Kol Aarntha - அம்புகளோடு கூடிய
நெடு சார்ங்கம், Nedu Sargangam - பெரியதான ஸ்ரீ சார்ங்க மென்னும் வில்லும்
கூன் நல் சங்கம், Koon Nal Sangam - வளைந்து விலக்ஷணமான ஸ்ரீ பாஞ்சஜந்யமென்னும சங்கமும்
கொலை ஆழி, Kolai Aazhi - (எதிரிகளைக்) கொலை செய்ய வல்ல ஸூதர்சநமும்
கொடும் தண்டு, Kodum Thandu - (பகைவர்களுக்குக்) கொடுந்தொழில் புரிகின்ற கௌமோதகி யென்னும் கதையும்
கொற்றம் ஒள் வாள், Kotrham Ol Vaal - வெற்றி பெற்று ஒளி மிக்க நந்தகமென்னும் வாளும்
கால் ஆர்ந்த கடும் கதி, Kaal Aarntha Kadum Kathi - வாயு வேகம் போன்ற மிகவும் விரைந்த நடையை யுடைய
கருடன் என்னும், Karudan Ennum - பெரிய திருவடி யென்னும் பேரை யுடைய
வென்றி பறவை இவை அனைத்தும், Ventrip Paravai Ivai Anaithum - ஐய சீலமான பக்ஷிராஜனும் (ஆகிய) இவை யெல்லாம்
புறம் சூழ் காப்ப, Puram Soozh Kaappa - நாற் புறமும் சூழ்ந்து கொண்டு ரக்ஷையிட
சேல் ஆர்ந்த நெடு கழனி, Seyl Aarntha Nedu Kazhani - (நீர் வளத்தால்) மீன்கள் நிரம்பிய விசாலமான
சோலை சூழ்ந்த, Solai Soozhntha - சோலைகளாலும் சூழப்பட்ட
மாலோனை, Maalonai - ஸர்வாதிகனான எம்பெருமானை
வல் வினையேன், Val Vinaiyen - மஹா பாபியான அடியேன்
கண்டு, Kandu - ஸேவிக்கப் பெற்று
இன்பம் கல்வி எய்தி, Inbam Kalvi Eydhi - ஆநந்த மயமான ஸம்ச்லேஷத்தையும் பெற்று
வாழும் நாள் என்று கொல், Vaalum Naal Endru Kol - வாழ்வது என்றைக்கோ?