| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 676 | பெருமாள் திருமொழி || (மெய்யில் வாழ்க்கையை) - அழகிய மணவாளன்பால் மயல் விஞ்சிய நிலையில் எழுந்த மாற்றம். 9 | அங்கை ஆழி அரங்கன் அடியிணை தங்கு சிந்தைத் தனிப் பெரும் பித்தனாம் கொங்கர் கோன் குலசேகரன் சொன்ன சொல் இங்கு வல்லவர்க்கு ஏதம் ஓன்று இல்லையே | அம் கை ஆழி, Am Kai Aazhi - அழகிய திருக்கையிலே திருவாழி யாழ்வானை ஏந்தி யுள்ள அரங்கன், Arangan - ஸ்ரீரங்கநாதனுடைய அடி இணை, Adi Inai - திருவடிகளில் தங்கு சிந்தை, Thangu Sindhai - பொருந்திய மனமுடையவராய் தனி பெரு பித்தன் ஆம், Thani Peru Piththan Aam - லோக விலக்ஷணரான பெரிய பித்தராய் கொங்கர் கோன், Kongar Kon - சேர தேசத்தவர்களுக்குத் தலைவரான குல சேகரன், Kula Seakaran - குலசேகராழ்வார் சொன்ன, Sonna - அருளிச் செய்த சொல், Sol - இப் பாசுரங்களை இங்கு, Ingu - இவ் விபூதியிலே வல்லவர்க்கு, Vallavarkku - ஓத வல்லவர்களுக்கு ஏதம் ஒன்று இல்லை, Edham Ondru Illai - (பகவதநுபவத்திற்கு) ஒருவிதமான இடையூறும் உண்டாக மாட்டாது. |