| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 670 | பெருமாள் திருமொழி || (மெய்யில் வாழ்க்கையை) - அழகிய மணவாளன்பால் மயல் விஞ்சிய நிலையில் எழுந்த மாற்றம். 3 | மாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆட் செய்யும் பாரினாரோடும் கூடுவதில்லை யான் ஆர மார்வன் அரங்கன் அனந்தன் நல் நாரணன் நர காந்தகன் பித்தனே | மாரனார், Maranar - மன்மதனுடைய வரி வெம் சிலைக்கு, Vari Vem Silaiyku - அழகிய கொடிய வில்லுக்கு ஆள் செய்யும், Aal Seyyum - ஆட் பட்டு (விஷய ப்ரவணராய்த்) திரிகிற பாரினாரொடும், Paarinaarodum - (இப்) பூமியிலுள்ள ப்ராக்ருதர்களோடு யான் கூடுவது இல்லை, Yaan Kooduvadhu Illai - : ஆரம் மார்வன், Aaram Maarvan - முக்தாஹாரத்தைத் திரு மார்பிலே அணிந்துள்ளவனாய் அனந்தன், Ananthan - அளவிட முடியாத ஸ்வரூப ஸ்வ பாவங்களை யுடையவனாய் நல் நாரணன், Nal Naranan - ஸர்வ ஸ்வாமியாய் நரக அந்தகன், Naraga Andhagan - அடியவர்களை நரகத்தில் சேராதபடி காத்தருள்பவனான நரகாந்தகன், Naragandhagan - நரகாஸூரனைக் கொன்றவன் என்றுமாம். அரங்கன், Arangan - ஸ்ரீரங்கநாதன் விஷயத்திலே பித்தன், Piththan - மோஹமுடையனாயிரா நின்றேன். |