| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 713 | பெருமாள் திருமொழி || (ஆலை நீள் கரும்பு) - சேய் வளர் காட்சியின் சீரை யசோதை போல் தாய் தேவகி பெறாத் தாழ் வெண்ணிப் புலம்பல் 6 | தண் தாமரை கண்ணனே! கண்ணா ! தவழ்ந்து எழுந்து தளர்ந்த்ததோர் நடையால் மண்ணில் செம் பொடி ஆடி வந்து என் தன் மார்வில் மன்னிடப் பெற்றிலேன் அந்தோ ! வண்ண செஞ்சிறு கை விரல் அனைத்தும் வாரி வாய் கொண்ட அடிசிலின் மிச்சில் உண்ண பெற்றிலேன் ஓ! கொடு வினையேன் என்னை என் செய்ய பெற்றது எம்மோயே | தண் அம் தாமரை கண்ணனனே, Than Am Thamarai Kannananai - குளிர்ந்த அழகிய தாமரை போன்ற திருக்கண்களை யுடையவனே கண்ணா தவழ்ந்து எழுந்து, Kannaa Thavazhndhu Ezhundhu - கண்ணபிரானே (நீ) தவழ்ந்து கொண்டுஎழுந்திருந்து தளர்ந்தது ஓர் நடையால், Thalarndhadhu Oru Nadayal - தட்டுத்தடுமாறி நடப்பதாகிற ஒரு நடையினால் செம்மண் பொடியில், Semman Podiyil - சிவந்த புழதி மண்ணிலே ஆடி வந்து, Aadi Vandu - விளையாடி (அக்கோலத்தோடே) வந்து என் தன் மார்வில், En Than Maarvil - என்னுடைய மார்விலே மன்னிட பெற்றிலேன் அந்தோ, Mannida Pettrileen Andho - நீ அணையும் படியான பாக்கியத்தை பெற்றிலேன்; இஃது என்ன தெளர்ப்பாக்கியம்! வண்ணம் செம், Vannam Sem - அழகு பெற்றுச் சிவந்து சிறு, Siru - சிறிதான கை விரல் அனைத்தும், Kai Viral Anaithum - கைவிரல்களெல்லா வற்றாலும் வாரி வாய்க் கொண்ட அடிசிலின் மிச்சல் உண்ணப் பெற்றிலேன், Vaari Vayk Konda Adichilin Michchal Unnap Pettrileen - வாரிக் கொண்டு அமுது செய்த ப்ரஸாதத்தினுடைய கொடுவினையேன், Koduvinaiyen - (இவற்றை யெல்லாம் நான் இழக்கும் படியாக) மஹா பாபத்தைப் பண்ணினேன்; ஓ எம்மோய் என்னை என் செய்ய பெற்றது, O Emmoiy Ennai En Seyya Pettrathu - ஐயோ! என் தாயானவள் என்னை எதுக்காக பெற்றாளோ! |