| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 691 | பெருமாள் திருமொழி || (தரு துயரம் தடாயேல்) - திருவித்துவக் கோட்டம்மானையே வேண்டி நிற்றல் 4 | வாளால் அறுத்து சுடினும் மருத்துவன் பல் மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் மீளா துயர் தரினும் வித்துவ கோட்டு அம்மா ! நீ ஆளா வுனதருளே பார்ப்பன் அடியேனே | வாளால் அறுத்து, Vaalal Aruthu - (வைத்தியன்) கத்தியைக் கொண்டு அறுத்தலும், (ஊசியைக் காய்ச்சிச்) சுடினும், Sudinum - சூடு போடுதலுஞ் செய்தாலும் மருத்துவன் பால் மாளாத காதல், Maruthuvan Paal Maaladha Kaadhal - அவ்வைத்தியனிடத்து நீங்காத அன்புடைய நோயாளன் போல், Noyaalan Pol - நோயாளியைப் போல மாயத்தால், Maayathaal - (உன்) மாயையினால் நீ மீளா துயர் தரினும், Nee Meela Thuyar Tharinum - நீ நீங்காத துன்பத்தை (எனக்கு) விளைத்தாலும் அடியேன், Adiyen - உனது அடியவனான நான் ஆள் ஆக, Aal Aaga - அவ்வடிமை ஸித்திப்பதற்காக உனது அருளே பார்ப்பன், Unathu Arule Paarppan - உன்னுடைய கருணையையே நோக்கி யிரா நின்றேன் |