| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 681 | பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 5 | கம்ப மத யானை கழுத்தகத்தின் மேல் இருந்து இன்ப மரும் செல்வமும் இவ் அரசும் யான் வேண்டேன் எம்பெருமான் ஈசன் எழில் வேம்கட மலை மேல் தம்பகமாய் நிற்கும் தவம் உடையன் ஆவேனே | கம்பம், Kambam - தன்னைக் கண்டவர்கட்கு அச்சத்தால் நடுக்கத்தை விளைக்கின்ற மதம் யானை, Madhama Yaanai - மதங்கொண்ட யானையினது கழுத்து அகத்தின் மேல் இருந்து, Kazhuthu Akathin Mael Irundhu - கழுத்தின் மீது வீற்றிருந்து இன்பு அமரும், Inbu Amarum - நாநாவித ஸுகங்களைப் பொருந்தி அனுபவிக்கும்படியான செல்வமும், Selvammum - ஐசுவர்யத்தையும் இவ் அரசம், Iv Arasam - அதற்குக் காரணமான இந்த அரசாட்சியையும் யான் வேண்டேன், Yaan Vaendein - நான் விரும்ப மாட்டேன்: எம்பெருமான், Emperumaan - எமது தலைவனும் ஈசன், Eesan - (எல்லாவுலகுக்கும்) தலைவனுமான பெருமானுடைய எழில் வேங்கடம் மலை மேல், Ezhil Vengadham Malai Mael - அழகிய திருமலையிலே தம்பகம் ஆய் நிற்கும், Thambagam Aayi Nirkkum - புதராய் நிற்கும்படியான உடையேன் ஆவேன், Udaiyen Aaven - உடையவனாகக் கடவேன். கம்பம், Kambam - வடசொல்; கம்பமத யானை (கண்டாரனை வரும்) நடுங்கும்படி மதங்கொண்ட யானை. தம்பகமாய், Thambagamai - புல் கோரை செடி கொடி முதலியவற்றின் புதர் – ஸ்தம்பம் எனப்படும். |