| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 699 | பெருமாள் திருமொழி || (ஏர் மலர் பூம் குழல்) - ஆய்ச்சியர் ஊடி அமலனை எள் கல் 2 | கெண்டை ஒண் கண் மடவாள் ஒருத்தி கீழை அகத்து தயிர் கடைய கண்டு ஒல்லை நானும் கடைவன் என்று கள்ள விழியை விழித்து புக்கு வண்டு அமர் பூம் குழல் தாழ்ந்து உலாவ வாண் முகம் வேர்ப்ப செவ்வாய் துடிப்ப தண் தயிர் கடைந்திட்ட வண்ணம் தாமோதரா! மெய் அறிவன் நானே | தமோதரா, Thamodhara - கண்ணபிரானே! கீழை அகத்து, Keelai Akaththu - (என் வீட்டுக்குக்) கீழண்டை வீட்டில் கெண்டை ஒண் கண், Kendai On Kan - கயல் போன்று அழகிய கண்களை யுடையளான மடவாள் ஒருத்தி, Madavaal Oruththi - ஒரு பெண்ணானவள் தயிர் கடைய கண்டு, Thayir Kadaiya Kandu - (தனியே) தயிர் கடையா நிற்பதைக் கண்டு நானும், Naanum - நானும் (உன்னோடு கூட) ஒல்லை கடைவன் என்று, Ollai Kadaivan Endru - சீக்கிரமாக (இத்தயிரைக்) கடைகிறேன்’ என்று (வாயாற் சொல்லி) கள்ளம் விழியை விழித்து, Kallam Vizhiyai Vizhithu - திருட்டுப் பார்வை பார்த்து புக்கு, Pukku - (அவளருகே) சென்று சேர்ந்து வண்டு அமர் பூ குழல், Vandu Amar Poo Kuzhal - வண்டுகள் படிந்த புஷ்பங்களை அணிந்த மயிர் முடியானது தாழ்ந்து உலாவ, Thazhndu Ulaava - அவிழ்ந்து அசையும் படியாகவும் வாள் முகம், Vaal Mugam - ஒளி பொருந்திய முகமானது வேர்ப்ப, Veerppa - வேர்க்கும் படியாகவும் செம் வாய் துடிப்ப, Sem Vaai Thudippa - சிவந்த அதரமானது துடிக்கும் படியாகவும் தண் தயிர், Than Thayir - குளிர்ந்த தயிரை நீ கடைந்திட்ட வண்ணம், Nee Kadainditta Vannam - நீ கடைந்த படியை நான் மெய் அறிவன், Naan Mey Arivan - நான் மெய்யே அறிவேன். |