| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 717 | பெருமாள் திருமொழி || (ஆலை நீள் கரும்பு) - சேய் வளர் காட்சியின் சீரை யசோதை போல் தாய் தேவகி பெறாத் தாழ் வெண்ணிப் புலம்பல் 10 | வஞ்ச மேவிய நெஞ்சுடைப் பேய்ச்சி வரண்டு நார் நரம்பு எழக் கரிந்துக்க நஞ்சமார் தரு சுழி முலை அந்தோ ! சுவைத்து நீ அருள் செய்து வளர்ந்தாய் கஞ்சன் நாள் கவர் கரு முகில் எந்தாய் ! கடைப் பட்டேன் வெறிதே முலை சுமந்து தஞ்சம் மேல் ஒன்றி இலேன் உய்ந்து இருந்தேன் தக்கதே நல்ல தாயைப் பெற்றாயே | வஞ்சம் மேவிய நெஞ்சு உடை பேய்ச்சி, Vanjam Meviyai Nenju Udai Paeychchi - வஞ்சனை பொருந்திய நெஞ்சை யுடையளான பூதனை யானவள் வரண்டு, Varandu - உடம்பு சோஷித்து எழ, Ezha - (உள்ளுள்ள ரத்தமாம்ஸங்கள) வெளியிற் கொழிக்கும் படியாகவும் நார் நரம்பு கரிந்து உக்க, Naar Narambu Karinthu Ukka - நார் போன்ற நரம்புகள் கருகி உதிரும் படியாகவும (அவளுடைய) நஞ்சம் ஆர் தரு சுழி முலை, Nanjam Aar Tharu Suzhi Mulai - விஷந்தீற்றிய கள்ள முலையை நீ சுவைத்து, Nee Suvaithu - நீ ஆஸ்வாதநம் பண்ணியும் அருள் செய்து, Arul Seidhu - (என் மேல்) கிருபையினாலே வளர்ந்தாய், Valarnthai - உயிருடன் வளரப் பெற்றாய் அந்தோ, Andho - ஆச்சரியம்! கஞ்சன் நாள் கவர், Kanjan Naal Kavar - கம்ஸனுடைய ஆயுஸ்ஸை அபஹரித்த கரு முகில் எந்தாய், Karum Mukil Endhai - காளமேகம் போன்ற நாயனே! முலை வெறிதே சுமந்து, Mulai Veridhae Sumandhu - (நான்) முலையை வியர்த்தமாகச் சுமந்து கடைப்பட்டேன், Kadaipattain - கெட்டவரிலும் கடைகெட்டவளானேன்; தஞ்சம் ஒன்று இலேன், Thanjam Ondru Ilaan - (உன்னையொழிய வேற) புகலற்றிராநின்றேன்; உய்ந்திருந்தேன், Uyandhirundhen - (என்றைக்காகிலு முன்னைக் கண்ணால் காண்போமென்று)பிராணனைப் பிடித்துக் கொண்டு ஜீவிக்கிறேன்; தக்கது, Thakkadhu - உனக்குத் தகுதியான நல்ல தாயை, Nalla Thaayai - நல்ல தாயாரை பெற்றாய், Petrayi - ஸம்பாதித்துக் கொண்டாய். |