| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 725 | பெருமாள் திருமொழி || (மன்னு புகழ்) - கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு 7 | ஆலின் இலை பாலகனாய் அன்று உலகம் உண்டவனே! வாலியை கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே! காலின் மணி கரை அலைக்கும் கண புரத்து என் கரு மணியே! ஆலி நகர்க்கு அதிபதியே! அயோத்தி மனே! தாலேலோ | அன்று, Anru - முன்பு மஹாப்ரளயம் வந்த போது ஆலின் இலை, Aalin Ilai - ஓர் ஆலந்தளிரிலே பாலகன் ஆய், Paalagan Aayi - குழந்தை வடிவாய்க் கொண்டு உலகம் உண்டவனே, Ulagam Undavaney - லோகங்களை யெல்லாம் திருவயிற்றில் வைத்து நோக்கினவனே! வாலியை கொன்று, Vaalaiyai Konru - வாலியைக் கொலை செய்து இளைய வானரத்துக்கு, Ilaiya Vaanarathukku - அவனது தம்பியான ஸுகரீவனுக்கு அரசு அளித்தவனே, Arasu Alithavane - ராஜ்யத்தைக் கொடுத்தவனே! காலில் மணி, Kaalil Mani - கால்வாய்களிலுள்ள ரத்நங்களை கரை அலைக்கும், Karai Alaikkum - கரையிலே கொண்டு கொழிக்கப் பெற்ற கண புரத்து, Kanna Purathu - திருக் கண்ணபுரத்தில் எழுந்தளி யிருக்கிற ஆலி நகர்க்கு, Aali Nagarkku - திருவாலி திருநகரிக்கு அதிபதியே, Adhipathiye - தலைவனே! அயோத்திமனே, Ayothimane - அயோத்தி நகர்க்கு அரசனே! |