Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 746 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
746பெருமாள் திருமொழி || (அம் கண் நெடு மதிள்)- தில்லைநகர் திருச்சித்திர கூடத்தில் தொல்லிராமனாய்த் தோன்றிய கதைமுறை 6
தன மருவு வைதேகி பிரியல் உற்று
தளர்வெய்தி சடாயுவை வைகுந்தத்து ஏற்றி
வன மருவு கவி அரசன் காதல் கொண்டு
வாலியை கொன்று இலங்கை நகர் அரக்கர் கோமான்
சினம் அடங்க மாருதியால் சுடுவித்தானை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
இனிது அமர்ந்த வம்மானை ராமன் தன்னை
ஏத்துவார் இணை அடியே யேத்தினேனே
தனம் மருவு, Thanam Maruvu - (தான் விரும்புஞ்) செல்வமாகப் பொருந்திய
வைதேகி பிரியல் உற்று, Vaidhegi Piriyal Utru - பிராட்டி பிரியப் பெற்று
தளர்வு எய்தி, Thalarvu Eydhi - (அதனால்) வருத்தமடைந்து
சடாயுவை, Sadaayuvai - ஜடாயுவென்னும் கழுகரசை
வைகுந்தத்து ஏற்றி, Vaikundhathu Aetri - பரமபதத்திற் செலுத்தி
வனம் மருவு, Vanam Maruvu - (வாலிக்கு அஞ்சிக்) காட்டில் மறைந்து வசிக்கிற
கவி அரசன், Kavi Arasan - வாநர ராஜனான சுக்ரீவனுடன்
காதல் கொண்டு, Kaadhal Kondo - ஸ்நேஹஞ் செய்து கொண்டு
இலங்கை நகர், Ilankai Nagar - இலங்காபுரியை
அரக்கர் கோமான் சினம் அடங்க, Arakkar Koman Sinam Adanga - (அதற்குத் தலைவனாகிய) ராக்ஷஸராஜானான ராவணனுடைய செருக்கு ஒழியும்படி
மாருதியால் சுடுவித்தானை, Maarudhiyaal Suduvithaanai - அனுமானைக் கொண்டு எரிப்பித்தவனும்
இனிது அமர்ந்த, Inidhu Amarntha - இனிமையாய் எழுந்தருளியிருக்கிற
அம்மானை, Ammanai - ஸர்வேச்வரனுமான
இராமன் தன்னை, Iraman Thannai - இராமபிரானை
ஏத்துவார், Aeththuvaar - துதிக்கின்ற அடியார்களுடைய
இணை அடியே, Inai Adiye - உபய பாதத்தையே
எத்தினேன், Eththinain - துதிக்குந் தன்மையேன் (யான்.)