| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 732 | பெருமாள் திருமொழி || (வன் தாள் இணை) - தனயன் கான் புகத் தசரதன் புலம்பல் 3 | கொல் அணை வேல் வரி நெடும் கண் கௌசலை தன் குலமதலாய்! குனி வில்லேந்தும் மல்லணைந்த வரை தோளா! வல் வினையேன் மனம் உருக்கும் வகையே கற்றாய் மெல்லணை மேல் முன் துயின்றாய் இன்று இனி போய் வியன் கான மரத்தின் நீழல் கல்லணை மேல் கண் துயில கற்றனையோ? காகுத்தா! கரிய கோவே! | கொல் அணை, Kol Anai - கொலைத் தொழில் பொருந்தின வேல், Vel - வேலாயுதம் போன்ற வரி நெடுங்கண், Vari Nedungkan - செவ்வரி பரந்த நீண்ட கண்களையுடைய கௌசலை தன், Kausalai Than - கௌஸல்யையினது குலம், Kulam - குலத்தில் தோன்றிய மதலாய், Madalai - குமாரனே! குனி வில் ஏந்தும், Kuni Vil Aenthum - வளைந்த வில்லைத் தரித்த மல் அணைந்த வரை தோளா, Mal Anaintha Varai Thola - வலிமை பொருந்திய மலைகள் போன்ற தோள்களை யுடையவனே! வல் வினையேன், Val Vinaiyen - மஹா பாபியான என்னுடைய மனம் உருக்கும் வகையே கற்றாய், Manam Urukkum Vagaiye Kattrai - மனதை உருகச் செய்வதற்கே வல்லவனே! காகுத்தா, Kaakuththa - ககுத்ஸ்தனென்னும் அரசனது குலத்தில் தோன்றியவனே! கரிய கோவே, Kariya Kove - கருநிறமுடைய ஐயனே! மெல் அணை மேல் முன் துயின்றாய், Mel Anai Mel Mun Thuyinraai - மென்மையான பஞ்சனை மெத்தையின் மேல் முன்பெல்லாம் படுத்து உறங்கிப் பழகினவனான நீ இனி இன்று போய், Ini Indru Poi - இனிமேற் புதிதாக இன்றைக்குச் சென்று வியன் கானம் மரத்தின் நீழல், Viyan Kaanam Marathin Neezhal - பெரிய காட்டிலுள்ள மரத்தின் நிழலிலே கல் அணை மேல் கண் துயில கற்றனையோ, Kal Anai Mel Kan Thuyil Kattranaiyo - கருங்கற் பாறைகளையே படுக்கையாகக் கொண்டு அதன் மேற்படுத்துத் துயிலப் பழகின்றாயோ முருக்குதல், Murukkuthal - அழித்தல். முருங்கு என்பதன் பிறவினை. வியன், Viyan - உரிச்சொல். வியல் என்பதன் விகாரமுமாம். நீழல் – நிழல் என்பன் நீட்டல் |