Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 734 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
734பெருமாள் திருமொழி || (வன் தாள் இணை) - தனயன் கான் புகத் தசரதன் புலம்பல் 5
பொருந்தார் கை வேல் நுதி போல்
பரல் பாய மெல் அடிகள் குருதி சோர
விரும்பாத கான் விரும்பி வெயில் உறைப்ப
வெம்பசி நோய் கூர இன்று
பெரும் பாவியேன் மகனே! போகின்றாய்
கேகயர் கோன் மகளாய் பெற்ற
அரும் பாவி சொல் கேட்ட அரு வினையேன்
என் செய்கேன்? அந்தோ! யானே
பொருந்தார் கை வேல் நுதி போல், Porundhaar Kai Vel Nuthi Pol - பகைவர்கள் கையிலேந்தும் கூர்மையான வேலாயுதத்தின் நுனி போன்ற
பரல், Paral - பருக்கைக் கற்கள்
பாய, Paaya - (காலில் தைத்து அழுத்தவும்)
மெல் அடிக்கள் குருதி சோர, Mel Adikkal Kuruthi Soora - மென்மையான (உனது) பாதங்களினின்று ரத்தம் பெருகவும்
வெயில் உறைப்ப, Veil Uraippa - (மேலே) வெயிலுறைக்கவும்
வெம் பசி நோய் கூர, Vem Pasi Noi Koora - (வேண்டிய போது உணவு கிடையாமலே) வெவ்விய பசியாகிய நோய் மிகவும்
பெரும் பாவி யேன் மகனே, Perum Paavi Yen Magane - மஹா பாபியான எனது மைந்தனே!
இன்று, Indru - இப்பொழுது
விரும்பாத கான் விரும்பி போகின்றாய், Virumbadha Kaan Virumbi Pogaindraai - (எவரும்) விரும்பாத காட்டை (நான் போகச் சொன்னேனென்பதனாலே) விரும்பி (அவ்விடத்துக்குச் செல்கிறாய்)
கேகயர்கோன் மகள் ஆய்பெற்ற அரும்பாவி, Kekayar Koan Magal Aaypetra Arumpaavi - கேகயராஜன் பெற்ற மகளான கொடிய பாவியாகிய கைகேயியினுடைய
சொல் கேட்ட அரு வினையேன் யான், Sol Kaetta Aru Vinaiyen Yaan - வார்த்தையைக் கேட்ட கொடியேனாகிய நான்
அந்தோ! என் செய்கேன், Andho En Seigken - ஐயோ! என்ன செய்வேன்!
வெம்பசி நோய் கூர = கூர, Vembasi Noi Koora Koora - மிகுதி யுணர்த்தும் கூர் என்ற உரிச்சொற் பகுதியினடியாய் பிறந்த செயவெனெச்சம்.
கேகயர், Kekayar - கேகய தேசத்திலுள்ளவர்கள்.