திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 686 | பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 10 | உம்பர் உலகாண்டு ஒரு குடை கீழ் உருப்பசி தன்
அம் பொற் கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன்
செம் பவள வாயான் திரு வேம்கடம் என்னும்
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே | பதவுரை Show / Hideஉம்பரு உலகு, Umbaru Ulagu - மேலுலகங்களை யெல்லாம் ஒரு குடை கீழ், Oru Kudai Keel - ஒரு கொற்றக் குடையின் நிழலிலே ஆண்டு, Aandu - அரசாண்டு உருப்பசி தன், Uruppasi Than - ஊர்வசியினுடைய அம், Am - அழகிய பொன் கலை அல் குல், Pon Kalai Al Kul - பீதாம்பர மணிந்த அல்குலை பெற்றாலும், Petralum - அடையப் பெறினும் ஆதரியேன், Aadhariyen - (அதனை) விரும்ப மாட்டேன்; செம் பவளம் வாயான், Sem Pavalam Vayaan - சிவந்த பவழம் போன்ற வாயை யுடையனான எம்பெருமான், Emperumaan - எனது அப்பனுடைய திருவேங்கடம் என்னும் பொன் மலை மேல், Thiruveengadam Ennum Pon Malai Mel - திருவேங்கட மென்ற பெயரையுடைய அழகிய திருமலையின் மேல் ஏதேனும் ஆவேன், Edhenum Aaven - ஏதேனுமொரு பதார்த்தமாகப் பிறக்கக் கடவேன் |