| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 733 | பெருமாள் திருமொழி || (வன் தாள் இணை) - தனயன் கான் புகத் தசரதன் புலம்பல் 4 | வா போகு வா இன்னம் வந்து ஒருகால் கண்டு போ மலராள் கூந்தல் வேய் போலும் எழில் தோளி தன் பொருட்டா விடையோன் தன் வில்லை செற்றாய்! மா போகு நெடும் கானம் வல் வினையேன் மனம் உருக்கும் மகனே! இன்று நீ போக என் நெஞ்சம் இரு பிளவாய்ப் போகாதே நிற்க்குமாறே! | வா, Vaa - (சற்று இங்கே) வா போகு, Pogu - இனிச் செல்வாய் வா, Vaa - மறுபடியும் இங்கு வா இன்னம் வந்து ஒருகால் கண்டு போ, Innam Vandu Orukal Kandu Po - (போம்போது) பின்னையும் ஒரு தரம் வந்து என்னைப் பார்த்து விட்டுப் போ மலர் ஆள் கூந்தல், Malai Aal Koondhal - பூக்களை எப்பொழுதும் தரிக்கிற மயிர் முடியை யுடையவளும் வேய் போலும் எழில் தோளி தன் பொருட்டு ஆ, Veiy Poalum Ezhil Tholi Than Poruttu Aa - மூங்கில் போன்ற அழகிய தோள்களை யுடையளுமான பிராட்டியை மணஞ்செய்து கொள்ளுதற்காக விடையோன் தன் வில்லை செற்றாய், Vidaiyon Than Villai Settrai - சிவனுடைய வில்லை முறித்தவனே! வல் வினையேன் மனம் உருக்கும் மகனே, Val Vinaiyen Manam Urukkum Magane - மஹா பாபியான எனது மனதை உருகச் செய்கிற மைந்தனே! இன்று, Indru - இப்பொழுது நீ, Nee - நீ மா போகு நெடுங்கானம் போக, Maa Pogu Nedungaanam Poga - யானைகள் ஸஞ்சரிக்கிற பெரிய காட்டுக்குப் போக என் நெஞ்சம், En Nenjam - எனது மனமானது இரு பிளவு ஆய் போகாதே நிற்கும் ஆறே, Iru Pilavu Aay Pogaadhe Nirkum Aare - இரண்டு பிளப்பாகப் பிளந்து போகாமலே வலியதாய் நிற்கும் தன்மை என்னோ? |