| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 678 | பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 2 | ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ வானாளும் செல்வமும் மண் அரசும் யான் வேண்டேன் தேனார் பூம் சோலை திரு வேங்கட சுனையில் மீனாய் பிறக்கும் விதி வுடையேன் ஆவேனே | ஆனாத செல்வத்து, Anadha Selvaththu - அழியாத (யௌவநமாகிய) ஸம்பத்தை யுடைய அரம்பையர்கள், Arambaiyargal - அப்ஸரஸ் ஸ்த்ரீகள் தன் சூழ, Than Soozh - தன்னைச் சூழ்ந்து நிற்க வான் ஆளும் செல்வமும, Vaan Aalum Selvamum - மேலுலகத்தை அரசாளுகின்ற ஐச்வர்யத்தையும் மண் அரசும், Man Arasum - இப் பூலோகத்தை அரசாளும் ஆட்சியையும் யான் வேண்டேன், Yaan Vaendein - (வருத்தமின்றிக் கிடைப்பதாயினும்) யான் விரும்ப மாட்டேன் தேன் ஆர் பூ சோலை, Then Aar Poo Solai - தேன் மிக்க மலர்களுள்ள சோலைகளை யுடைய திருவேங்கடம், Thiruveangadam - திருவேங்கட மலையிலிருக்கின்ற சுனையில், Sunaiyil - சுனைகளிலே மீன் ஆய் பிறக்கும், Meen Aayi Pirakkum - ஒரு மீனாகப் பிறக்கத் தக்க விதி, Vithi - வாக்கியத்தை உடையேன் ஆவேன், Udaiyen Aaven - உடையவனாகக் கடவேன். அரம்பையர்கள், Arambaiyargal - ரம்பை முதலியோர். தேன் ஆர், Then Aar - வண்டுகள் ஆரவாரிக்கின்ற என்றுமாம். சுனை, Sunai - மலையில் நீரூற்றுள்ள குணம். |