| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 743 | பெருமாள் திருமொழி || (அம் கண் நெடு மதிள்)- தில்லைநகர் திருச்சித்திர கூடத்தில் தொல்லிராமனாய்த் தோன்றிய கதைமுறை 3 | செவ்வரி நல் கரு நெடும் கண் சீதைக்காகி சின விடையோன் சிலை இருத்து மழு வாள் ஏந்தி செவ்வரி நல் சிலை வாங்கி வென்றி கொண்டு வேல் வேந்தர் பகை தடிந்த வீரன் தன்னை தெவ்வர் அஞ்சு நெடும் புரிசை வுயர்ந்த பாங்கர்த் தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள் எவ்வரு வெஞ்சிலை தடக் கை ராமன் தன்னை இறைஞ்சுவார் இணை அடியே இறைஞ்சினேனே | செவ்வரி நல் கரு நெடு கண், Sevvari Nal Karu Nedhu Kan - (உத்தம லக்ஷ்ணமான) சிவந்த ரேகைகள் படர்ந்த அழகிய கருமையான நீண்ட கண்களை யுடைய சீதைக்கு ஆக, Seethaikku Aaga - வநிதையை மணம் புரிதற் பொருட்டு சினம் விடையோன், Sinam Vidaiyon - கோபத்தை யுடைய ரிஷபத்தை வாஹநமாக வுடையனான சிவபிரானுடைய சிலை இறுத்து, Silai Iruththu - வில்லை முறித்து (பின்பு மிதிலா புரியினின்று மீளும் வழியில்) மழுவாள் ஏந்தி, Mazhuvaal Aendi - கோடாலியாகிய ஆயுதத்தை ஏந்தியவனான பரசுராமனுடைய வெவ் வரி நல் சிலை, Veve Vari Nal Silai - பயங்கரமான கட்டமைந்த சிறந்த வில்லை வாங்கி, Vaangi - கையிற்கொண்டு (வளைத்து) வென்றி கொண்டு, Vendri Kondu - (அவனை) வென்று வேல் வேந்தர் பகை தடித்த, Vel Vendar Pagai Thaditha - (தான் அவதரித்த ஜாதியிற்பிறந்த) வேற்படையை யுடைய க்ஷத்ரியர்களுக்குப் பகையைத் தீர்த்த வீரன் தன்னை, Veeran Thannai - மஹா வீரனான தெவ்வர், Thevvar - பகைவர்கள் அஞ்சு, Anju - (கண்டமாத்திரத்திலே, கடக்க வொண்ணா தென்று) அஞ்சும் படியான நெடு புரிசை, Nedu Purisai - உயர்ந்த மதிளையும் உயர்ந்த பாங்கர், Uyarntha Paankar - ஓங்கிய (அட்டாலை யென்னும்) மதிற்பக்கத் திடத்தையுமுடைய (எழுந்தருளியிருக்கிற) எவ்வரு வெம் சிலை தடகை இராமன் தன்னை, Evvaru Vem Silai Thadakai Raaman Thannai - (வேறொருவரால்) அடக்கியாளுதற்கு அரியதும் (பகைவர்க்குப்) இறைஞ்சுவார், Iraichuvar - வணங்குகிற அடியார்களுடைய இணை அடியே, Inai Adiye - இரண்டு திருவடிகளையே இறைஞ்சினேன், Iraichinena - வணங்கினேன். ஏ, Ae - அம்பு தொடுப்பதற்கு உரிய வரி – நீண்ட என்று கஷ்டப்பட்டு பொருள் கொள்ளலாமாயினும், ஏவு, Aevu - ஏவுதல்,அடக்கியாளுதல்; (முதனிலைத் தொழிற்பெயர்) அரு-ஒண்ணாத; எனவே, அடக்கியாள முடியாத என்றதாயிற்று. |