திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 661 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
661பெருமாள் திருமொழி || (தேட்டரும் திறல்) - அரங்கன் அடியாரது அடிமைத்திறத்தில் ஈடுபடுதல் 4
தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பால் உடன் உண்டலும் உடன்று ஆய்ச்சி கண்டு ஆர்த்த தோள் உடை எம்பிரான் என் அரங்கனுக்கு அடியார்களாய் நா தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்ப தொழுது ஏத்தி இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே
பதவுரை Show / Hide
தோய்த்த தண் தயிர், Thoyththa Than Thayir - தோய்த்த தண் தயிர்
வெண்ணெய், Vennai - வெண்ணையையும்
பால், Paal - பாலையும்
உடன் உண்டலும், Udan Undalum - ஒரே காலத்திலே அமுது செய்தவளவில்
ஆய்ச்சி, Aaychi - யசோதைப் பிராட்டி யானவள்
கண்டு உடன்று, Kandu Udandru - (அந்த களவு தன்னைப்) பார்த்து கோபித்து
ஆர்த்த, Aartha - (பிறகு அவளாலே) பிடித்துக் கட்டப்பட்ட
தோள் உடை, Thol Udai - தோள்களை யுடைய
எம்பிரான், Embiraan - எமக்குத் தலைவனான
என் அரங்கனுக்கு, En Aranganukku - என் ரங்கநாதனுக்கு
அடியார்கள் ஆய், Adiyargal Aay - ஆட்பட்டவர்களாய்
நா தழும்ப எழ, Na Thazhumba Ezh - நாக்குத் தடிக்கும்படி
நாரணா என்று அழைத்து, Naaranaa Endru Azhaitthu - நாராயணா! என்று கூப்பிட்டு
மெய் தழும்ப தொழுது, Mei Thazhumba Thozhudhu - சரீரம் காய்ப்பேறும்படி ஸேவித்து
ஏத்தி, Aethi - தோத்திரம் பண்ணி
இன்புறும், Inpurum - ஆனந்தமடைகின்ற
தொண்டர், Thondar - ஸ்ரீவைஷ்ணவர்களுடைய
சே அடி, Sae Adi - திருவடிகளை
என் நெஞ்சம், En Nenjam - என் மனமானது
ஏத்தி வாழ்த்தும், Aethi Vaazththum - துதித்து (அவர்களுக்கே) பல்லாண்டு பாடும்
“கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெ யுண்ட வாயன், Kondal Vannanaik Kovalanaai Venne Yundha Vaayan - அணியரங்கன்” என்றபடி