| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 667 | பெருமாள் திருமொழி || (தேட்டரும் திறல்) - அரங்கன் அடியாரது அடிமைத்திறத்தில் ஈடுபடுதல் 10 | அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன் மெய் அடியார்கள் தம் எல்லையில் அடிமை திறத்தினில் என்றும் மேவு மனத்தானாம் கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழி கோன் குலசேகரன் சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர் தொண்டர் தொண்டர்கள் ஆவரே | அல்லி மாமலர் மங்கை நாதன், Alli Maamalai Mangai Naathan - அக விதழ்களை யுடைய சிறந்த (தாமரை) மலரில் பிறந்த பிராட்டிக்குக் கணவனான அரங்கன், Arangan - ஸ்ரீரங்கநாதனுடைய மெய் அடியார்கள் தம், Mei Adiyaargal Tham - உண்மையான பக்தர்களுடைய என்றும் மேவு மனத்தன் ஆம், Endrum Mevu Manaththan Aam - எப்போதும் பொருந்திய திரு வுள்ளத்தை யுடையவரும் கொல்லி காவலன், Kolli Kaavalan - கொல்லி நகர்க்கு அரசரும் கூடல் நாயகன், Koodal Naayagan - மதுரைக்கு அரசரும் கோழி கோன், Kozhi Kon - உறையூருக்கு அரசருமான குல சேகரன், Kula Seakaran - குலசேகராழ்வருடைய சொல்லின், Sollin - ஸ்ரீஸூக்திளாலே அமைந்த இன் தமிழ் மாலை வல்லவர், In Tamil Maalai Vallar - இனிய தமிழ்ப் பாசுரங்களை ஒத வல்லவர்கள் தொண்டர் தொண்டர்கள் ஆவர், Thondar Thondargal Aavar - தாஸாநுதாஸராகப் பெறுவர் |