| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 663 | பெருமாள் திருமொழி || (தேட்டரும் திறல்) - அரங்கன் அடியாரது அடிமைத்திறத்தில் ஈடுபடுதல் 6 | ஆதி அந்தம் அநந்தம் அற்புதம் ஆன வானவர் தம்பிரான் பாத மா மலர் சூடும் பத்தி இலாத பாவிகள் உய்ந்திட தீதில் நல் நெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சமே | ஆதி, Aadhi - ஜகத் காரண பூதனாய் அந்தம், Andham - ப்ரளய காலத்திலும் வாழ்பவனாய் அநந்தம், Anandham - ஸர்வ வ்யாபியாய் அற்புதம் ஆன, Arputham Aana - ஆச்சரிய பூதனாய் வானவர் தம்பிரான், Vaanavar Thambiraan - அமரர்க்கதிபதியான ரங்கநாதனுடைய மா மலர் பாதம், Maa Malar Paatham - சிறந்த மலர் போன்ற திருவடிகளை சூடும் பத்தி இலாத, Soodum Paththi Ilaadha - சிரஸா வஹிப்பதற் குறுப்பான அன்பு இல்லாத பாவிகள் உய்ந்திட, Paavigal Uyndhida - பாபிகளும் உஜ்ஜீவிக்கும்படி எங்கும் திரிந்து, Engum Thirinthu - ஸர்வ தேசங்களிலும் ஸஞ்சாரஞ் செய்து தீது இல், Theethu Il - குற்றமற்ற நல் நெறி, Nal Nerii - நல் வழிகளை காட்டி, Kaatti - (தமது அநுஷ்டாநமுகத்தாலே) வெளிப்படுத்திக் கொண்டு எம்மான், Emmaan - நமக்குத் தலைவனான அரங்கனுக்கே, Aranganukke - ஸ்ரீரங்கநாதனுக்கே காதல் செய், Kaadhal Sei - பக்தி பூண்டிருக்கின்ற தொண்டர்க்கு, Thondarkku - பாகவதர்கள் விஷயத்தில் என் நெஞ்சம், En Nenjam - எனது மனமானது எப் பிறப்பிலும், Ep Pirappilum - எந்த ஜன்மத்திலும் காதல் செய்யும், Kaadhal Seyyum - அன்பு பூண்டிருக்கும். |