| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 719 | பெருமாள் திருமொழி || (மன்னு புகழ்) - கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு 1 | மன்னு புகழ் கௌசலை தன் மணி வயிறு வாய்த்தவனே! தென் இலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர் கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்து என் கரு மணியே! என்னுடைய இன் அமுதே! ராகவனே! தாலேலோ | மன்னு புகழ், Mannu Pugazh - நிலை நின்ற புகழை யுடைய கௌசலை தன், Kausalai Than - கௌஸல்யையினுடைய் மணி வயிறு, Mani Vayiru - அழகிய வயிற்றிலே வாய்த்தவனே, Vaiththavane - பிள்ளையாகத் திருவவதரித்தவனே! தென் இலங்கை கோன், Then Ilangai Kon - தென்னிலங்கைக்கு இறைவனான ராவணனுடைய முடிகள், Mudigal - பத்துத் தலைகளையும் சிந்துவித்தாய், Sindhuviththai - சிதறப் பண்ணினவனே! செம் பொன் சேர், Sem Pon Ser - செவ்விய பொன்னாலே செய்யப்பட்டதாய் கன்னி, Kanni - அழிவில்லாததாய் நல், Nal - விலக்ஷணமாய் மா, Maa - பெரிதான மதில், Madhil - திருமதிளாலே புடை சூழ், Pudai Soozh - நாற் புறமும் சூழப்பட்ட கணபுரத்து, Kanapurathu - திருக் கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கிற என் கருமணியே, En Karumanie - நீல ரத்நம் போன்ற எம்பெருமானே! என்னுடைய இன் அமுதே, Ennudaiya In Amudhe - எனக்கு போக்யமான அம்ருதமாயிருப்பவனே! இராகவனே!, Irakavaney - ஸ்ரீராமனே! தாலேலோ, Thaleloo - (உனக்குத்) தாலாட்டு கணபுரம், Kanapuram - கண்ணபுரம் என்பதன் தொகுத்தல், தாலேலோ, Thaleloo - வளர்பிள்ளைத் தொட்டிலிலே வளர்த்திக் கண்வளரப் பண்ணுகைக்காகச் சீராட்டித் தாலாட்டுதல்; தால், Thal - நாக்கு; தமிழில் தொண்ணாற்றாறு வகைப் பிரபந்தங்களுள் ஒன்றாகிய பிள்ளைத் தமிழில் |