| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 738 | பெருமாள் திருமொழி || (வன் தாள் இணை) - தனயன் கான் புகத் தசரதன் புலம்பல் 9 | முன் ஒரு நாள் மழு வாளி சிலை வாங்கி அவன் தவத்தை முற்றும் செற்றாய் உன்னையும் உன் அருமையையும் உன் நோயின் வருத்தமும் ஒன்றாக கொள்ளாது என்னையும் என் மெய் உரையும் மெய்யாக கொண்டு வனம் புக்க எந்தாய்! நின்னையே மகனாய் பெற பெறுவேன் ஏழ் பிறப்பும் நெடும் தோள் வேந்தே | முன் ஒருநாள், Mun Orunaal - முன்பு ஒரு நாளிலே மழு ஆளி சிலை வாங்கி, Mazhu Aali Silai Vaangi - பரசுராமனிடத்திலிருந்து அவன் கை வில்லை வாங்கி அவன் தவத்தை முற்றும் பெற்றாய், Avan Thavathai Muttrum Pettraai - அவனியற்றிய தபஸ்ஸின் பயனை முழுதும் (அம்புக்கு இலக்காக்கி) அழித்திட்டவனே! உன்னையும் உன் அருமையையும், Unnaiyum Un Arumaiyaiyum - உன்னுடைய மேன்மையையும் (நான் பெருந்தவஞ் செய்து) உன்னை அருமை மகனாகப் பெற்ற தன்மையையும் உன் மோயின் வருத்தமும், Un Moyin Varuththamum - உனது பெற்ற தாயான கௌசல்யை (உன்னை பிரியில் தரியேன் என்று) உன் பின் தொடர்ந்த வருத்தத்தையும் ஒன்று ஆக கொள்ளாது, Ondru Aaga Kollaadhu - ஒரு பொருளாகக் கொள்ளாமல் என்னையும், Ennaiyum - என்னையும் என் மெய் உரையும், En Mei Uraiyum - எனது ஸத்ய வாக்கையும் மெய் ஆக கொண்டு, Mei Aak Kondu - பொருளாகக் கருதி வனம் புக்க எந்தாய், Vanam Pukka Endhai - காடேறச் சென்ற எமது ஐயனே! நெடுந்தோள் வேந்தே, Nedunthol Vende - பெரிய தோள்களை யுடைய அரசனே! ஏழ் பிறப்பும், Ezhu Pirappum - இனி அனேக ஜன்மங்கள் பிறந்து பிறந்த ஜன்மந்தோறும் நின்னையே மகன் ஆக பெற பெறுவேன், Ninnaiye Magan Aak Perap Peruven - நீ எனக்குப் பிள்ளையாய்ப் பிறக்கும்படி பேறு பெறக் கடவேன். மழு ஆளி, Mazhu Aali - மழுவை (ஆயுதமாக) ஆள்பவன்; இ-கருத்தாப்பொருள் விகுதி. அன்றியே, மழு வாளி, Andriye Mazhu Vaali - மழுவாகிய ஆயுதத்தை யுடையவன் இ-பெயர் விகுதி. மழு வாள், Mazhu Vaal - இரு பெயரொட்டுப் பண்புத்தொகை. மழு – கோடாலி தந்தை, மகனை எந்தாய் என்றது, அன்புபற்றிய வழுவமைதி. செற்றாய், Thandai Maganai Endhai Endrathu Anbu Patriya Vazhvu Amaithi Settrai - செறு-பகுதி |