| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 647 | பெருமாள் திருமொழி || (இருள் இரிய) - இருள் இரிய திருவரங்கப் பெருமானை கண்டு என்றுகொல் மகிழ்வேன் எனல் 1 | இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த அரவரச பெரும் சோதி அனந்தன் என்னும் அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி திரு அரங்க பெரு நகருள் தெண்ணீர் பொன்னி திரை கையால் அடி வருட பள்ளி கொள்ளும் கருமணியை கோமளத்தை கண்டு கொண்டு என் கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே | திரு அரங்கம், Thiru Arangam - ஸ்ரீரங்கமென்கிற பெரு நகருள், Peru Nagarul - பெரிய நகரத்திலே இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும், Irul Iriya Sudar Manigal Imaikkum - இருளானது சிதறி யொழியும் படி ஒளி விடுகின்ற மணிகள் விளங்கா நிற்கப் பெற்ற நெற்றி, Netri - நெற்றியையும் இனம் துத்தி, Inam Thuthi - சிறந்த புள்ளியையும் அணி, Ani - அழகாக உடைய– ஆயிரம் பணங்கள் ஆர்ந்த, Aayiram Panangal Aarntha - ஆயிரம் படங்களை உடையவனாய் அரவு அரசன், Aravu Arasan - நாகங்களுக்குத் தலைவனாய் பெரு சோதி, Peru Sothi - மிக்க தேஜஸ்ஸை யுடையனான அனந்தன் என்னும், Ananthan Ennum - திருவனந்தாழ்வானாகிற அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை, Ani Vilangum Uyar Vellai Anaiyai - அழகு மிக்கு உயர்த்தியை யுடைய வெண்ணிறமான திருப் படுக்கையிலே மேவி, Mevi - பொருந்தி தெள் நீர் பொன்னி, Thel Neer Ponni - தெளிந்த தீர்த்தத்தையுடைய காவிரி யானது திரை கையால் அடி வருட, Thirai Kaiyal Adi Varuda - அலைகளாகிற கைகளாலே திருவடிகளைப் பிடிக்க பள்ளி கொள்ளும், Palli Kollum - திருக் கண் வளர்ந்தருளா நின்ற கரு மணியை, Karum Maniyai - நீல மணி போன்றவராய் கோமளத்தை, Komalathai - ளெஸகுமார்யமே வடிவெடுத்தவரான பெரிய பெருமாளை என் கண் இணைகள், En Kan Inaihal - என் கண்களானவை கண்டு கொண்டு, Kandu Kondo - ஸேவிக்கப் பெற்று களிக்கும் நாள், Kalikkum Naal - ஆநந்தடையும் நாள் என்று கொல், Endru Kol - எந்நாளோ! இமைத்தல், Imaitthal - விழித்தல் அதாவது இங்கு, விளங்குதல். துத்தி, Thuthi - படத்தின் மேலுள்ள பொறி. பொன்னி, Ponni - பொன்களைக் கொழிக்கையாலே காவிரிக்குப் பொன்னி யென்று பெயராயிற்று. “பொன்னி திரைக் கையாலடி வருட” என்றது, Ponni Thiraik Kaiyaladi Varuda Endrathu - காவிரியின் அலைகள் இனிதாக மோதிக் குளிர்ச்சி பெற்றுள்ள கோமளம், Komalam - வடசொல், |